விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வேதனையும் சாதனையும்

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். ஸ்திரியானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள், பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். யோவான் 16:20,21.

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்என்று சொன்ன இயேசு ஒரு கர்ப்பவேதனைப்படுகின்ற ஸ்திரியையும் உடன் எடுத்துக்காட்டுகிறார். கர்ப்பவேதனை எல்லா ஸ்திரிகளுக்கும் நியமிக்கப்பட்ட ஒன்று. எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எப்படிப்பட்ட உடல்நிலையிலிருந்தாலும் சரி கர்ப்ப வேதனையை பெண்கள் அனுபவித்தேயாகவேண்டும். இதற்குத் தப்பிச் செல்ல வழியில்லை. ஏதேனில், தேவ கட்டளையை மீறிய ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் தண்டனை அளித்தபோது, ஏவாளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்ஆதி 3:16 என்றார். முதல் தாயாம் ஏவாளுக்கு அன்று தேவன் கொடுத்த தண்டனையையே இன்று பூமியிலுள்ள எல்லா பெண்களும் அனுபவிக்கின்றார்கள். புதிய காரியம் உருவாகவேண்டுமென்றால் வேதனையை நாம் சகித்தேயாகவேண்டும். நமது குடும்பமானாலும் சரி, ஊழியமானாலும் சரி புதிய காரியங்கள் உருவாகும்போது வேதனைகளுக்கு நாம் விலகியோடக் கூடாது.

ஊழியத்தின் பாதையில் நாம் வேதனையையோ, நெருக்கத்தையோ அனுபவிப்போமென்றால் புதிதாக ஒரு காரியம் உண்டாகப்போகிறது என்றே அர்த்தம். குடும்ப வாழ்க்கையிலோ அல்லது தொழில் துறைகளிலோ நாம் வேதனைகளை அனுபவிக்கும்போதும் இந்த சத்தியத்தை உணரத் தவறக்கூடாது. நம்முடைய வாழ்க்கையில் வேதனை உண்டாகும்போது, புதிதாக ஒன்று உண்டாகப்போகின்றது என்ற நம்பிக்கையே நம்மில் உருவாகவேண்டும். இந்தியாவிலே தேவன் புதிய காரியத்தைச் செய்வதற்காக சபை நெருக்கப்படலாம், ஒடுக்கப்படலாம், பற்பல நிலைகளில் துக்கங்களையும் துன்பங்களையும் சந்திக்கலாம், உபத்திரவத்தின் பாதையில் சபை கடந்துசெல்லலாம். இவை எல்லாம் புதிய காரியங்களை உருவாக்க தேவன் அனுமதிப்பவைகளே. இந்தியாவிலே தேவன் புதிய காரியத்தைச் செய்வதற்காக சபை நெருக்கப்படலாம், ஒடுக்கப்படலாம், பற்பல நிலைகளில் துக்கங்களையும் துன்பங்களையும் சந்திக்கலாம், உபத்திரவத்தின் பாதையில் சபை கடந்துசெல்லலாம். இவை எல்லாம் புதிய காரியங்களை உருவாக்க தேவன் அனுமதிப்பவைகளே. சபை இந்த காரியங்களைக் கடந்துசெல்லும்போது தேவன் புதிய காரியங்களை உருவாக்குவார். “Where there is no pain, there is no gain”. வேதனையில்லாமல் வாழ்க்கை இல்லை என்று நாம் கற்றுக் கொடுக்கப்படாதபடியினாலேயே, எங்கேயாவது போய் யாரையாவது தலையில் கைவைத்து வேதனையில்லாமல் எதையாகிலும் செய்துவிடுவார்களா என்று நாம் தினமும் துடிக்கின்றோம். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறவேண்டும் என்றால் நாம் வேதனை அனுபவித்தேயாகவேண்டும். இந்த சூத்திரத்தை நாம் ஒருக்காலும் மாற்ற இயலாது. தேவ திட்டங்களுக்கு விரோதமாய் செயல்படுவதே சத்துருவின் தலையாய நோக்கம். புதிய காரியம் வரும்போது யார் சுறுசுறுப்பாக மாறிவிடுகிறார்கள். எழுப்புதலின் காரியம் சபையில் வெடித்தெழும்பும்போது யார் வேகமாக செயல்படுகிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். தேவன் நம்முடைய வாழ்க்கையில் புதிய காரியங்களைச் செய்ய ஏதுவாய் நம்மை நடத்தும்போது, சத்துருவும் நமக்கு விரோதமாய் தனது தந்திரமான வலையை விhpக்க ஆயத்தமாகிறான். நம்மிடத்தில் தோன்றும் புதிய காரியங்களை குலைத்துப்போடவும், அதனை தடுத்து நிறுத்தவும் அநேக தந்திரங்களையும் உபாயங்களையும் சத்துரு செய்ய முற்படுகின்றான்.

இயேசுவைப் போலவே இவ்வுலகத்தின் இருளை அகற்றுவதற்கும், இந்த உலகத்தை ஆளுவதற்குமே நாம் பிறந்திருக்கிறோம். இருளை அகற்ற ஒரு மெழுகுவர்த்தி போதுமானது, ஆனால், அந்த மெழுகுவர்த்தி தன்னை அழித்துக்கொள்ள ஆயத்தமாயிருக்கவேண்டும். நம்முடையவைகளை அழித்து தேவனுக்காய் பற்றி எரியவேண்டிய நாட்களுக்குள்ளாக நாம் கடந்து வந்திருக்கின்றோம். யோவான் கொஞ்ச காலம் மட்டுமே இவ்வுலகத்தில் வாழ்ந்தான், ஆனால் நானூறு ஆண்டுகளாக தேவ சத்தம் கேட்காமல் இருந்த இருட்டை அவன் அகற்றிவிட்டதோடு ஆண்டவருக்கு வழியையும் அவன் ஆயத்தப்படுத்திவிட்டான். வனாந்தரமோ, வாழ்க்கையின் பாடுகளோ அவனது ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தவில்லை. நம்முடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் புதிய காரியத்தை நம்முடைய சொந்த வாழ்க்கையிலும், ஊழியத்தின் பாதையிலும், குடும்ப வாழ்க்கையிலும் செய்ய தேவன் விரும்புகின்றார். பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் தடுப்பேனோ என்று தேவன் முழக்கமிடுகின்றார். தேவன் உருவாக்கும் எழுப்புதலை தடைசெய்ய இந்த உலகத்தின் எந்த மனிதனாலும் இயலாது. தேவன் விரும்புவதும், எதிர்பார்ப்பதும் நம்முடைய ஆழமான அர்ப்பணிப்பையே. நம்மிடத்திலும் புதிய காரியங்களை உருவாக்கி அவைகளைக் கொண்டு இவ்வுலகத்தை சுவிசேஷத்தின் ஆளுகைக்குள் கொண்டுவருவதே தேவதிட்டம். முழு தேசத்திலும் எழுப்புதலைக் கொண்டுவர தேவனுக்கு ஒரே நாள் போதுமானது. சபை, ஊழியத்தின் காரியங்களிலோ புதிய காரியங்களைச் செய்ய தேவனுக்கு ஒரே நாள் போதுமானது. தேவனே எழுப்புதலின் நாயகர். அவருடைய கரங்களில் புதிய காரியங்களை பெற்றெடுக்க நம்மையும் நம்முடைய வாழ்க்கையையும் நாம் அர்ப்பணிப்போமென்றால், தேவன் நம்மைக்கொண்டு தேசத்தில் பெரிய அசைவை உண்டுபண்ண முடியும். போலியான எழுப்புதல் அல்ல, காற்றைப் பெற்றவர்களைப் போலல்ல. நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை தனது வாலினால் இழுத்துத் தள்ளும் சாத்தானையும் நிலை குலையப் பண்ணுகிறவர்களைப் பிறப்பிக்க நான் எந்த வேதனையையும், பாடுகளையும் சோதனையையும், துக்கங்களையும் பொறுத்துக்கொள்ளவும், தாங்கிக்கொள்ளவும், புதிய காரியங்களில் உருவாக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று அர்ப்பணிப்போரே தேவனுக்கும், சபைக்கும் இன்றய தேவை.

சேனைகளாய் எழும்பிடுவோம், தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும் இயேசு நாமம் சொல்லிடுவோம் புறப்படு

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " வேதனையும் சாதனையும் "

Post a Comment