விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

என்னை நேசிகின்றாயா?

மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு படகில் நீங்கள் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தநேரத்தில் ஒருவர் தன் உயிரையே கொடுத்து உங்களைக் காப்பாற்றினால் நாம் எவ்வளவு மகிழ்வோம். அதேபோலத் தான் இயேசு கிறிஸ்து மனிதர்களை காப்பாற்றியுள்ளார். எப்படியெனில், நாம் எல்லாரும் பாவம் செய்தோம்.நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை (ரோமர் 3:10,12). நம் பாவத்தின் விளைவாக நாம் தேவகோபத்துக்கும் நியாத் தீர்ப்புக்கும் உரியவர்களானோம். பாவத்தின் சம்பளம் மரணம்தேவனுடைய கிருபைவரமோ நம்முடையகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6:23). நமக்கு நித்தியஜீவனைக் கொடுக்க இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து, நமக்கு பதிலாக நம்முடைய இடத்தில் அவர் மரித்தார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலேதேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). தேவன் மனிதர்களை அதிகமாய் நேசிக்கின்றார். இயேசுவும் மனிதர்களை அதிகமாய் நேசித்து தமது ஜீவனையே கொடுத்தார். இயேசு தமது பிள்ளைகள் மேல் இரண்டு ஆசைகளை கொண்டுள்ளார்.

என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும்அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்அவர்களை நீதியின் வழியிலும்,நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். நீதிமொழிகள் 8:17,20,21

முதலாவதாக நாம் இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும்
இயேசு என்னை நேசிக்கிறார் என்று அநேக முறை நாம் சொல்லிருக்கலாம். அநேகர் வெளிப்படையாக அதைக் காண்பிகின்றார்கள். “I LOVE JESUS” என்று பல இடங்களில் எழுதுவார்கள். அதுபோன்ற படங்களை வைத்திருப்பார்கள். அவர்கள் இயேசுவை நேசிப்பதுஉண்மை தான்ஆனால் எந்த அளவு நாம் அவரை நேசிக்கின்றோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போம். குழந்தைகளை தூக்கி செல்லும் தகப்பனிடத்தில்குழந்தையானது எவ்வளவு விளையாடுகிறது என்று பாருங்கள். சட்டை பையில் கைவிட்டு பனைத்தை எடுக்கும். முகத்தை பிஞ்சு நகத்தால் பிடித்து இழுக்கும். இவை எல்லாவற்றிலும் தகப்பன் மிகுந்த ஆனந்தப்பட்டு மகிழ்வதை பார்க்கின்றோம். குழந்தையும் தகப்பனை மிகுதியாய் நேசிக்கும். எல்லையில்லா அன்பு வெளிப்படுவதை நாம் காண முடியும். இயேசுவும் கூட அந்த மாதிரியான ஒரு உறவை நம்மிடத்தில் எதிர்பார்கின்றார். ஆகவே தான் நமக்கு, “அப்பா பிதாவேஎன்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் உரிமையை தந்திருக்கிறார். நாம் அவரை அதிகமாய் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இரண்டாவதாக நாம் மெய்பொருளை சுதந்தரித்து அவரோடு வாழ வேண்டும்
அந்த குழந்தையினிடத்தில் தகப்பனுடைய சட்டை பையில் இருக்கும் பணத்தை எடுக்காதே என்று சொல்லி பாருங்கள். தகப்பன் சொல்லவார் எனக்குரிய அனைத்தும் என் குழந்தைக்கு தான் சொந்தம் என்று. இதே போல தான் இயேசு தன்னிடத்தில் இருக்கும் அநேக மெய்ப்பொருளை நாம் சுதந்தரிக்க வேண்டும் என்று ஆசைபடுகிறார். மெய்ப்பொருள் என்றால் என்றும் அழியாது நிலைத்திருக்கும் பொருளாகும். உலகத்தில் நாம் காண்கின்ற அணைத்தும் ஒரு நாள் மறைந்து விடும். இதை நன்குணர்ந்த இயேசு,பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்” என எச்சரித்தார். அதே நேரம் “பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லைஅங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத்தேயு 6:19-21) எனவும் அறிவுரை கூறினார்.இயேசுவினுடைய உள்ளதின் ஆழத்தில் இருக்கும் ஆசை நமது இருதயம் பரலோக ராஜ்யத்தை குறித்தே சிந்தித்து, அங்குள்ள அழியாத செல்வங்களை நாம் சுதந்தரிக்க வேண்டுமென்பது தான். அதினால் தான் நம்மை நீதியின் பாதையில் நடத்தி அவரோடு சேர்த்துக்கொள்ள துடின்கின்றார். ஆகவே நாம் இயேசுவை அதிகமாய் நேசித்து அவர் காண்பித்த நீதியின் வழியில் வாழ்ந்தால் நிச்சயம் பரலோகத்தின் பொக்கிஷங்களை சுதந்தரித்து இயேசுவோடு கூட சந்தோஷமாய் வாழலாம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " என்னை நேசிகின்றாயா? "

Post a Comment