விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம் (13 June 2014)கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் உபாகமம் 31: 8

கடைசியாக தேவன் மோசே மூலமாக யோசுவாவுக்கு கொடுத்த வாக்குத்தத்த வார்த்தை நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம். எதிர்காலத்தை குறித்த பயம், தேவைகளை குறித்த கலக்கம். சுற்றிலுமுள்ள எதிராளிகளை குறித்த பயம். எப்படி வழிநடத்துவோம் என்ற கலக்கம். தேவன் யோசுவாவை பார்த்து சொன்னார். நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம். அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை தேவன் வைத்தார்.

உபாகமம் 34 : 9-யை வாசித்து பாருங்கள். மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். தேவன் யோசுவாவை ஞானத்தின் ஆவியால் நிரப்பினார் ஒரு விசேஷித்த அபிஷேகத்தை தேவன் யோசுவாவின் மீது ஊற்றினார். அத்தனை கலக்கம், பயம் எல்லாம் நீங்கியது. இயேசுவின் சீஷர்கள் சுமார் 120 பேர்கள் தங்கள் அறையை பூட்டி பயந்து இருந்தார்கள். இயேசுதாமே அவர்கள் நடுவில் வந்து உங்களுக்கு சமாதானம் என்று கூறினார். மட்டுமல்லாமல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்டார். அவர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு சாட்சிகளாக பரிபூரண கிருபை பெற்றவர்களாக இயேசு கிறிஸ்துவின் இறுதி கட்டளையை நிறைவேற்றுகிறவர்களாக வல்லமையின் அபிஷேகத்தை பெற்று விளங்கினார்கள்.

இந்த கடைசிகாலம் பொல்லாத நாட்களாக உள்ளது. இயற்கை சூழ்நிலைகளின் மாற்றம், நோய்களின் கொடுரத்தினால் உண்டாகும் மரணபயம், பிள்ளைகளை குறிப்பாக படிப்பு, உயர்கல்வி, வேலைவாய்ப்புகள், திருமணம் இவைகளை குறித்த பயம், கலக்கம் நமக்கு வருவதுண்டு. மட்டுமல்லாமல் ஆவிக்குரிய வறட்சியின் நிமித்தம் சோர்வுகள், ஜெபவாழ்வில், வேதவாசிப்பில் பின்னடைந்திருக்கலாம். இந்த நாளில் தேவன் நமக்கு ஞானத்தின் ஆவியினால் நம்மை நிரப்ப விரும்புகிறார். முழங்காலில் நின்று யோசுவாவின் மீது மோசேயின் கரம் இருந்ததை போல் என் மீது உம் கரம் வைத்து என்னை உயிர்ப்பியும், அபிஷேகியும் என்று கதறுவோமாக. தேவன் இந்தவருடம் புதிய அபிஷேகத்தினால், புது கிருபையால், புதிய தரிசனங்களால் உங்களை நிரப்புவார். நாம் ஒன்றைக் குறித்தும் கலக்கமோ, பயமோ இல்லாதவர்களாய் கடந்து செல்வோம். Because I know, He who hold my future என்று பாடி முன் செல்லுவோம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம் (13 June 2014) "

Post a Comment