விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


மன்றாட்டு ஜெபம் செய்வோம். மதிலை இடிப்போம்.

கி.மு 586-ம் வருடத்தில் பாபிலோன் அரசன் நேபுகாத் நேச்சாரால் எருசலேமின் ஆலயம் இடிக்கப்பட்டு எருசலேமில் வாழ்ந்த யூத மக்கள் அடிமைகளாக பாபிலோன் கொண்டுசெல்லப்பட்டனர். கி.மு 538 –ம் வருடம் பெர்சிய மன்னன் கோரேஸ் கர்த்தருடைய ஆலயத்தை கட்டும் படி அடிமையாயிருந்த  யூத மக்கள் எருசலேமுக்கு திரும்பி செல்ல அனுமதி அளித்தான். இவ்வாறு ஆலயம் கட்ட சென்ற மக்கள் வேகமாக அஸ்திபாரமிட்டனர். ஆனால் சுற்றுப்புறத்திலிருந்து எதிர்ப்பு வந்ததால் 16 வருடம் கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதை விட்டு தங்களுக்கு வீடுகள் கட்டி சுகமாய் வாழ தொடங்கினர். இந்த நேரத்தில் ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகளின் மூலமாக, ஆலயத்தை கட்டுமாறு கர்த்தர் மக்களோடு பேசினார். அப்பொழுது செருபாபேலும், யெசுவாவும் கர்த்தருக்காய் வைராக்கியம் கொண்டு ஆலயத்தை கட்டி முடித்தனர் (கி.மு516).

இப்பொழுது ஆலயம் கட்டி முடித்தாகிவிட்டது. ஆனால் மக்களிடம் ஒழுக்க நெறிமுறைகள் காணப்படவில்லை. எருசலேமில் வாழ்ந்த யூதமக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக கொண்டு செல்ல்ப்பட்டதாலும், இஸ்ரவேல் ஜனங்கள் சீரிய ராஜக்களால் அடிமைபடுத்தபட்டிருந்தபடியாலும் அந்நிய ஜனங்களோடு இஸ்ரவேல் மக்கள் கலந்து வாழ நேரிட்டது. “இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர் பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.” எஸ்றா 9:1.

இப்படிப்பட்டதான நேரத்தில் எஸ்றா எருசலேமிற்கு வருகிறார். எருசலேமின் ஆலயத்தை மகிழ்ச்சியோடு பார்வையிட்ட எஸ்றா தமது ஜனங்களின் அருவெருப்புகளை பார்த்த பொழுது தேவாலயதிலேயே தாழவிழுந்து கதறி அழுகின்றார். தான்  ஒரு பாவமும்  செய்யவில்லை என்றாலும் தமது ஜனங்கள் செய்த பாவத்தை தான் செய்தது போல அறிக்கையிட்டு கதறி அழுவதை பார்க்க ஜனங்கள் கூடிவிட்டனர். எஸ்றா பாவங்களை அறிக்கையிட்டு அழுத பொழுது கூடியிருந்த ஜனங்களும் தாங்கள் செய்த பாவத்தின் குற்ற உணர்வினால் அழத்தொடங்கினார்கள் (எஸ்றா 10:1). அப்பொழுது எஸ்றா எழுந்து சிறையிருப்பில் இருந்து வந்தவர்களை மூன்று நாளைக்குள் எருசலேமில் கூடும்படி செய்து, அந்நிய ஜாதிகளை விட்டும் அவர்களது அருவெருப்புகளையும் விட்டு  விலகும்படி செய்து தமது ஜனத்தை பரிசுத்தபடுதினார்.

அநேக ஜனங்களை நல்வழிப்படுத்த அவர் செய்ததெல்லாம் தன்னை தாழ்த்தி அழுது மன்றாடி ஜெபித்ததுதான். தானியேலும் நெகேமியாவும் கூட இது போல ஜனங்களின் பாவதித்ற்காக மன்றாடி ஜெபித்திருப்பத்தை வேதத்தில் நாம் வாசிகின்றோம். மோசே தமது ஜனகளுக்காக திறப்பின் வாயிலே நின்று ஜெபித்தார் என்று சங்கீதம் 106:23-ல் வாசிகின்றோமே. நம்மை நாமே நிதானித்து பார்ப்போம்

நாம் நமது தேசத்தின் மக்களுக்காக கர்த்தரிடம் மன்றாடி ஜெபிகின்றோமா??

அனுதினமும் பாவத்தில் உழன்று மரித்துபோகும் ஆத்துமக்களுக்காக மன்றாடி ஜெபிகின்றோமா??

நாம் நமது திருச்சபை விசுவாசிகளுக்காக, போதகர்களுக்காக, ஊழியங்களுக்காக கர்த்தரிடம் மன்றாடி ஜெபிகின்றோமா??

நாம் நமது குடும்பத்தினரின் இரட்சிப்புக்காக, நமது பரிசுத்த வாழ்விற்காக கர்த்தரிடம் மன்றாடி ஜெபிகின்றோமா??

எஸ்றாவின் மன்றாட்டு ஜெபம் இஸ்ரவேல் தேசத்திலே மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்ககூடுமேன்றால், நமது மன்றாடு ஜெபமும் மிகப்பெரிய எழுப்புதலை நிச்சயமாக கொண்டுவரும். மன்றாட்டு ஜெபம் செய்வோம். மதிலை இடிப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பராக.விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ Like Tag Share ☆★☆
To Listen our songs 
http://www.youtube.com/davidi4u
For daily messages 
https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment