விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


இயேசு கிறிஸ்து தம்மை குறித்து தானே கூறியவற்றில் மிகவும் முக்கியமாக கருதப்படுவதுநானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்”. யோவான் 6:51

உயிரோடிருப்பதற்கு ஆகாரமும், தண்ணீரும் அவசியம். அதே போல கிறிஸ்துவுக்குள் ஒருவன் பிழைத்திருக்க வேண்டுமென்றால் அதவாது நித்தியஜீவனை பெற வேண்டுமென்றால் கிறிஸ்த்துவின்  சரீரத்தையும் அவரது இரத்தத்தையும் புசிக்க வேண்டுமென்று கூறினார். இதை கேட்ட யூதர்கள் குழம்பி போயினர், என்ன மாம்சத்தையும் இரததயுமா  சாப்பிடுவது என்று சொல்லி முறுமுரறுத்தனர் அவரோடு இருந்த சீஷர்களுக்கும் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை.

ஒவ்வொரு மனிதன் மரிக்கும் பொழுதும் அவனது ஆவி உயிரடைகின்றது. இவ்வாறு உயிரடைகின்ற ஒவ்வொரு ஆவியும் கிறிஸ்துவோடு நித்தியமாக வாழ வேண்டும் என்பதே அவரின் விருப்பம். ஆனால் இந்த விருப்பத்திற்கு எதிராக பிசாசானவன் செயல்பட்டு அநேகருடைய ஆவியை நரகத்திற்கு நேராய் இழுத்து செல்கிறான். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்க நினைத்த இயேசு நமது பாவங்களுக்காய் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தார். இதை விசுவாசிப்பதின் மூலம் எந்த ஒரு மனிதனும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விசுவாசம் வாயினால் சொல்லி அறிக்கையிடக்கூடிய விசுவாசம் அல்ல. இதை அடிக்கடி நினைவுகூர்ந்து செயல் முறையில் கிறிஸ்துவுக்கு காண்பிக்கவேண்டிய விசுவாசம். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சீஷர்கள் மூலமாய் நமக்கு காண்பித்தும் கொடுத்திருக்கிறார். தான் காட்டிகொடுக்கபட்ட இரவின் இராப்போஜனத்தில் இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்; இது பாவ மன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறதுஎன்றார்.மத்தேயு 26:26-2

கோதுமையை எப்படி அடித்து நொறுக்கி அதை மாவாக்கி அப்பம் (சப்பாத்தி) உண்டாக்குகிறார்களோ அதே போல கிறிஸ்து நமக்காக அடித்து நொறுக்கப்படிருக்கிறார். அந்த அப்பத்தை பிய்ப்பது போல தமது சரீரத்தை பிய்க்க ஒப்புகொடுத்திருக்கிறார்  என்பதை நாம் அணைவரும் நினைவுகூர்ந்து அனுசரிக்க வேண்டும். திராட்சை பழத்திலிருந்து இரசத்தை எடுக்க எப்படி அதை காலினால் மிதித்து , பிழிகின்றாரகளோ அதே போல கிறிஸ்துவின் சரீரம் நமக்காய் பிழியப்பட்டு இரத்தம் சிந்தப்பட்டுள்ளது என்பதை நாம் அணைவரும் நினைவுகூர்ந்து அனுசரிக்க வேண்டும்

இந்த  விசுவாசத்தை செயல் முறையில் காண்பிப்பது தான் இராப்போஜனம். இதில் ஒரு மனிதன் பங்குபெற வேண்டுமென்றால் அவன் கிறிஸ்த்துவைப் போல தண்ணீரில் முழுகி ஞானஸ்தானம் பெற்று உலகின் பாவங்களுக்கு மரித்து கிறிஸ்த்துவின்  அன்பில் உயிர்பெற்றவராய் இருக்க வேண்டும். நமக்காய் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்திய இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது நாம் அணைவரும் இராபோஜனத்தை அனுசரித்து கிறிஸ்த்து நமக்காய் பட்ட பாடுகளை நினைவு கூரவேண்டும் என்பதே. இதை செய்வதின் மூலம் நித்தியஜீவனை அடையலாம். ஒருவேளை நீங்கள் இதை அனுசரிக்க விரும்பினால் விரைவில் பாவங்களை அறிக்கை செய்து அதை விட்டு விட்டு, முழுக்கு ஞானஸ்தானம் பெற்று இதை அனுசரியுங்கள். கர்த்தரின் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளுங்கள். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ Like Tag Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong


0 Response to " "

Post a Comment