விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.சங்கீதம் 18:28

மின்சாரம் கண்பிடிக்கப்படுவதர்க்கு முன்பதாக எண்ணெய் விளக்குகள் ஒளியை கொடுக்க பயன்படுத்தப்பட்டது. இதில் தமிழர்களால் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட விளக்கு சிமிழி விளக்காகும். இந்த விளைக்கை எரிவூட்டியபிறகு இதை எடுத்து உயரத்தில் தொங்கவிடுவார்கள். அப்பொழுது விளக்கு ஏற்றப்பட்டு அந்த வீட்டின் இருளைஎல்லாம் அகற்றி வெளிச்சத்தை கொடுக்கும்.

இதேபோலத்தான் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருள் போன்ற பாவ குணங்கள் காணப்படுகிறது. தாவீது சொல்கிறார் “என் துர்குணத்துக்கு என்னை விளக்கி காத்துக் கொண்டேன்”சங்கீதம் 18:23. இது போன்ற துர்க்குணங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் காணப்படுகிறது. அதிலிருந்து நாம் நம்மை விலக்கிகாத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுது தேவன் தமது ஒளியான விளக்கை நம்மேல் ஏற்றுவார். அந்த ஒளி பிரகாசித்து நமது [பாவ இருளை அகற்றுவதோடு அல்லாமல் மற்றவர்களுடைய பாவ இருளையும் அகற்றி அநேகரை வெளிச்சத்தின் பிள்ளைகளாக மாற்றும். தொடர்ந்து நமது பாவ இருளை அகற்றும்படியாகவும், தேவன் நமது விளக்கை ஏற்றும்படியாகவும் ஜெபித்து செயல்படுவோம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.


விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ Like Tag Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment