விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

அன்பு இயேசுவின் அன்பு எல்லையில்லா உன்னத அன்பு


இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான மிக முக்கியமான ஒன்றுதான் அன்பு. இந்த அன்பிற்காக உலகத்திலே தேடி அலையும் மாந்தர்கள் ஏராளம். மனிதன் தன் அன்பை புரிந்து கொள்ளவில்லையென்று துடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுது கொண்டும் வாழ்கிறான். என் கவலைகளையும்,என் ஏக்கங்களையும், என் உணர்வுகளையும்,புரிந்து கொள்ளுவார் யார்? என்று புலம்பி,உலகம் என்னும் நாடக மேடையில் ஒய்யாராமாய் நடைபோடுகிறார்கள்.பலர்விடியாத விட்டில் பூச்சிபோலும் நடுக்கடலில் சிக்கிய ஓட்டை படகுபோலும்,நெருப்புக்குள் சிக்கிய பஞ்சைப்போலும், தன் வாழ்க்கை பயணத்தை தொடருகிறார்கள்

என் அன்பை புரிந்து கொள்வதற்கு ஒருவருமில்லை என்று எண்ணி தன்னைத்தானே சமாதியாக்கிகொண்டு கண்ணீர் பூக்களால் அலங்கரித்துக் கொண்டும், வாழ்க்கை என்னும் எரிமலை குழம்புகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு உலகம் தரும் பதில் ஆண்கள் அழுகக்கூடாது பெண்கள் அடிமைத்தனத்தில் இருக்கவேண்டும் என்ற நுகத்தைப்போட்டு வாழ்க்கை என்ற மாட்டுவண்டியில் போய்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில்கானல் நீரைப்போல வாழ்க்கை வாழுகிறார்கள். ஆனால் இவையெல்லாவற்றிலும் மாறுப்பட்ட ஒரு உண்மையான அன்பு இருக்கிறதென்பதை இந்த மானிடம் அறியவில்லை, அதை உணர்ந்தும் கொள்ளுவதுமில்லை.

தாயின் அடிவயிற்று பாசத்தைவிட தந்தையின் தோள்களை விட, உறவுகளை விட,நட்பை விட, தூய்மையான மாசற்ற அன்பு அதுதான் “இயேசுவின் அன்பு”
தாயின் கருவிலே எலும்புகள் உருவாகும் முன்னே உன்னை தெரிந்து கொண்டு,உள்ளங்கைகளில் உன்னை வரைந்து உலகம் என்னும் இருட்டிலே உன்னை நட்சத்திரமாக வைத்திருக்கிறார் இதுதான் “இயேசுவின் அன்பு”. இந்த அன்பை புரிந்துகொள்ளாமல் நீ எட்டி உதைத்த நாட்களிலும்;, கசக்கிவீசப்பட்ட காகித மலராய் அவர் அன்பை நீ தூக்கி வீசும் போதும், பாவமென்ற புதைச்சேற்றில் நீ சிக்கி மூச்சு திணறும்போதும் உன்னை நேசித்த பரம தகப்பன் அவர்.

எனக்கன்பான சகோதரனே சகோதரியே,நீ ஏன் பாவம் என்ற நுகத்தடியோடு அடிமையைப்போல வாழவேண்டும்? ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் தன்னையே ஒப்புக்கொடுத்து உனக்காக மரித்தார். அவர் உன்னை அழைக்கிறார். இன்றைக்கே அவரிடத்தில் ஒப்புக்கொடுத்துஅவருடைய மகனாக மகளாக மாறிவிடு. அவருக்காக உன்னுடைய இருதயத்தைக் கொடு இதோ உன் வாசற்படியில் நின்று உன் இதயக்கதவைத் தட்டிக் கொன்டிருக்கிறார்அவரை வா என்று அழைத்தால் உன் வாழ்வில் வந்து உன்னை அதிசயங்களைக் கானச்செய்வார். அவரை வா என்று இப்போதே அழைப்பாயா?

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " அன்பு இயேசுவின் அன்பு எல்லையில்லா உன்னத அன்பு "

Post a Comment