விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வேதமே வெளிச்சம்



வேதமே வெளிச்சம்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்படைப்பின் முதலாம் நாளில் வெளிச்சம் உண்டாவதாக! எனச் சொல்லி வெளிச்சத்தை உண்டாக்கின கர்த்தர், நான்காம் நாளில்தான், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைப் படைத்தார். வெளிச்சமோ தேவனிடத்திலிருந்து; வார்த்தையினாலே தோன்றியது! அது நித்தியமானது! வானமும் பூமியும் ஒழிந்தாலும் ஒழியாதது. அவமாகிப்போகாதது!

வெளிச்சத்தைக் கண்ட பூச்சிகள் எப்படி, பயந்து ஓடி இருளுக்குள் ஒளிகின்றனவோ, அதேபோல, வேத வார்த்தையின் வெளிச்சம் ஒரு மனிதன் மீது படுமானால், அவனிடம் காணப்படும் இருளின் காரியங்களான பாவங்களும், சாபங்களும், மரணப்போராட்டங்களும், நோயினால் உண்டாகும் வேதனைகளும் ஓடி ஒளிந்துவிடும்!
வெளிச்சத்துக்கு நம்மை விட்டுக்கொடுத்தால், விடியல் காண்போம்!

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.(ஏசாயா 9:2) ஆமென்!

 ஜெபம் செய்வோம் 
அன்பின் பரலோகப் பிதாவே! இருளிலிருந்த எங்களை வெளிச்சமாக்கினீர் உமக்கு ஸ்தோத்திரம்! பகலுக்குரிய நாங்கள், இருளின் காரியங்களான வெறிகளையும், களியாடங்களையும் புறந்தள்ள உதவிசெய்யும்! ஒளிவீசும்படி பெலப்படுத்தும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம்எங்கள் நல்ல பிதாவேஆமென்!


விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ Like Tag Share ☆★☆
To Listen our songs 
http://www.youtube.com/davidi4u
For daily messages 
https://www.facebook.com/VVsong

0 Response to " வேதமே வெளிச்சம் "

Post a Comment