விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

அரசர். யோசியா - பாகம் 4


பேராசை பெரும்நஷ்டம்

யோசியா ராஜா பிறப்பதற்கு சுமார் 300 வருடங்களுக்கு முன்பே அவரை குறித்து கர்த்தர் உரைத்ததாகிய பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார்என்ற தீர்க்கதரிசனத்தை I இராஜாக்கள் 13:2-ல் வாசிகின்றோம். இதிலிருந்து யோசியா ராஜாவிற்கு கர்த்தர் நியமித்திருந்த பணி தேசத்தையும், தேசத்தின் ஜனங்களையும் கர்த்தருக்கை பரிசுத்தபடுத்துவதே. இப்பணியை செம்மையாக செய்து வந்தார் யோசியா. ஆகவே தான் அவர் இன்றுவரைக்கும் புகழப்படுகின்ற ஒரு அரசராக திகழ்கின்றார். ஆனால் கர்த்தர் தமக்கு கொடுத்த திருப்பணியை விட்டுவிட்டு தனது அரசாட்சியை விரிவுபடுத்த முயன்ற யோசியா முதல் போரிலேயே மரணத்தை சந்தித்தார்.

கி.மு-612-ல் பாபிலோனிய (இன்றைக்கு ஈராக்) அரசன், அசீரியா நாட்டின் (இன்றைக்கு சீரியா) மீது படையெடுத்து நினிவே பட்டணத்தை பிடித்ததார். ஆசீரியா நாட்டை தனது பகை நாடாகவே கருதிய யோசியாவிற்கு, அசீரிய அரசின் வீழ்ச்சி மிக்க சந்தோஷத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது அரசாட்சியின் எல்லையை விரிவாக்கவும் ஏற்றதாய் அமைந்தது. கி.மு-609-ல் எகிப்து அரசன் நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் என்ற அசீரிய பட்டத்திதை பிடித்திருந்த பாபிலோனிய படைக்கு எதிராய் யுத்தம் செய்ய சென்றார்.

இந்த கர்கேமிஸ் பட்டணம் அந்த நாட்களில் அசீரிய நாட்டின் முக்கிய பட்டனமகவும், வாணிபத்தில் சிறந்து விளங்கிய பட்டனமாகவும் இருந்தது. இந்த பட்டணம் சரியாக இஸ்ரவேல் நாட்டுக்கு மேலாக அமைந்திருந்தபடியால் இந்த நாட்டைபிடிக்கும் எண்ணம் யோசியா இருந்திருக்ககூடும். ஆகவேதான் யோசியா, எகிப்து அரசன் நேகோவிற்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான். நேகோ, இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான். ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன அவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும் அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான். (II நாளா 35:20-22)

அப்பொழுது வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்று கதறி ஜீவன் விட்டார். (II நாளா 35:23). பாருங்கள் எத்தனை அருமையான ராஜா யோசியா. தனது 8-வயதிலே அரியணை ஏறி, கர்த்தரின் வழியில் நடந்து, தனது 24 வயதிற்குள்ளகாவே தேசத்தையும், தேசத்தின் ஜனங்களையும் பரிசுத்தபடுத்தினார். தனது 26-ம் வயதில் தேவனே சாட்சி கொடுக்கும் அளவிற்கு பரிசுத்த பஸ்க்காவயும் அனுசரித்தார். ஆனால் தனது 39-ம் வயதிலே தேவன் தம் மேல் வைத்திருந்த நோக்கத்தையும் அழைப்பையும் மீறி, பக்கத்து பட்டணத்தை பிடிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டு, எகிப்து அரசனுடன் யுத்தம் செய்ய சென்று மரணத்தை தழுவினார். இன்றைக்கும் கூட அநேக கிறிஸ்த்தவர்கள், ஊழியக்கரர்கள் தங்கள் ஓட்டத்தை சிறப்பாக துவங்குகின்றனர். ஆனால் அவர்களையும் அறியாமல் ஒரு கட்டத்தில் பேராசை என்னும் வலையில் விழுந்து மடிந்து போகின்றார்கள். யோசியாவின் வாழ்வில், அவர் தேவனுக்காய் செய்த சாதனைகளும், அவரது வீழ்ச்சியும் இடம் பெற்றமைக்கு காரணம், நாம் கர்த்தருக்காக சாதிக்க வேண்டும். அவ்வாறு சாதிக்கையில் பேராசை கொள்ளாமல், கர்த்தர் நம்மை அழைத்த அழைப்பில் தெளிவாய் இருந்து, மேன்மேளும் பெரிய காரியங்களை சாதிக்க வேண்டும் என்பதே. யோசியாவின் வாழ்க்கை வரலாறு இன்றைய வாலிபர்களுக்கும், விசுவாசிக்களுக்கும், போதகர்களுக்கும் ஒரு அருமையான எடுத்துக்காட்டாகும். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " அரசர். யோசியா - பாகம் 4 "

Post a Comment