விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.
தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் . பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்ளை விட்டு ஓடிப்போவான் (யாக் 4:7)

ஒரு சில நாட்களுக்கு "DISCOVERY CHANNEL"-ல் ஒரு அருமையான காட்சி கண்டேன். அதென்னவெனில் ஒரு ஆண் சிங்கம் மனிதனை தாக்க முயல்கிறது. அந்த மனிதன் தன் கையில் இருந்த கம்பை ஓங்கியவுட்ன் அது பயந்து ஓடிப்போயிற்று. இந்த மிருகங்களின் குணம் என்னவென்றால் நாம் அதற்க்கு பயந்து ஓடினால் அது நம்மை துரத்தி வந்து கடித்து விடும். மாறாக நாம் ஓடினோம் என்றால் அது நம்மை துரத்தி வந்து கடித்துவிடும். இந்த காட்சியை கண்டவுடன் இரண்டு வசனங்கள் எனது நினைவுக்கு வந்தது

முதலாவது வசனம் 1 பேதுரு 5:8  - “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

இரண்டாவது வசனம் லூக்கா 9:23 - “இயேசு சொல்கிறார், ஒருவன் என் பின்னே வர விரும்பினால், தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, பின்பற்றவேண்டும் என்று கட்டளை கொடுக்கின்றார்.

பிசாசனவன் எவனை விழுங்கலாமோ என்று கெர்ச்சிக்கிற சிங்கம்போல் சுற்றித்திரிகிறான். ஒரு சில நேரத்தில் நமது அருகில் வந்தும் கெர்ச்சிதுக் கொண்டிருப்பன். நமது கைகளில் இருக்கும் சிலுவையை சற்று ஓங்கினால் போதும், இருக்குற இடம் தெரியாமல் ஒடி விடுவான்.  கெர்ச்சிக்கிற சிங்கத்தை கண்டு பயப்படுபவர்கள் அல்ல கிறிஸ்துவர்கள். எதிர்த்து நின்று துரத்துபவர்கள் தான் கிறிஸ்துவர்கள். தாவீது மற்றும் தானியேல் போன்ற தேவதாசர்கள் சிங்கத்தை எதிர்த்து நின்று ஜெயம் கண்டனர் என்று வேத்த்தில் பார்க்கின்றோம். ஆதலாம் திடன் கொண்டு தைரியத்தோடு பிசாசிர்க்கு எதிர்த்து நிற்போம். ஜெய கிறிஸ்து நம்முடன் இருப்பதால் ஜெயமோடு வாழ்ந்திடுவோம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை
★☆★ Like Tag Share ☆★☆

0 Response to " "

Post a Comment