விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நமது நம்பிக்கை இயேசு இயேசு

சில நாட்களுக்கு முன்பு சிறுவர்களுக்கான பாடல் எழுத வேண்டும் என்று சிந்தித்து கொண்டிருக்கையில் ஆவியானவர் இந்த வசனத்தை காண்பித்துக்கொடுத்தார். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தங்கள் பிறப்புகளை பாதுகாப்பதை நாம் நன்கு அறிவோம். இந்த குனாதிசயத்தை உயிரங்களுக்கு கொடுத்த தேவன், அவரது பிள்ளைகளாகிய நம்மை பாதுகாப்பது எவ்வளவு நிச்சயம் பாருங்கள்.
சங்கீதம் 121:7- சொல்கிறது “கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
நீதிமொழிகள் 3:26- சொல்கிறது கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
நம்மை காக்கும் தேவன் உயிரோடு இருக்கையில் நாம் ஏன் கலங்க வேண்டும். இன்று உங்களை அச்சுறுத்தும் பிரச்சனைகளில் தேவன் உங்களுக்கு தந்திருக்கும் வாகுத்தத்தங்களை நினைவுபடுத்தி விசுவாசித்தீர்களா என்று சோதித்து பாருங்கள். கவலை கொள்ளாதீர்கள், பயப்படாதீர்கள், அநாதி தேவன் நமக்கு அடைக்கலாமானரே. ஆமென். இந்த செய்தியை உங்கள் முகபுத்தகத்தில் “Share & Like” செய்யுங்கள். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில்
சகோ. டேவிட் தாமோதரன்

0 Response to " "

Post a Comment