விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

பவுலின் பார்வையில் விசுவாசத்தின் தகப்பன்


ஆபிரகாம் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். (ரோமர் 4 : 18-21)

பவுல் இங்கே ஆதியாகம்ம் 15:5-ல் கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குதத்ததை மேற்கோள்படியிட்டு காண்பிக்கின்றார். நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், 100 வயதில் பிள்ளை பெற்று எடுப்பது சாத்தியமில்லை தான் என்றாலும்,  தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்துநம்பிக்கையோடே தேவன் கொடுத்த வாக்குதத்ததை ஆபிரகாம் விசுவாசத்து தேவனை மகிமை படுத்தினார்

விசுவாசிக்கிற மனிதன் எப்பொழுதும் தேவனை மகிமை படுத்துகிறான்.  தேவனும் தன்னை விசுவாசிகின்ற மனிதனை கனம் பண்ணுகிறார் என்பதை பவுல் தெளிவாக நமக்கு காண்பித்து கொடுக்கின்றார்.  இந்த உலக காரியங்களில் அநேக வல்லவர்களை நாம் பார்க்கின்றோம். விளையாட்டு, விஞ்ஞானம் போன்ற பல துறைகளில் பல வல்லவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் ஆபிரகாமோ விசுவாசத்தில் வல்லவராக இருந்தார். ஆதலால் தான் விசுவாச தகப்பனாகவும், அநேக ஜாதிகளின் தகப்பனாகவும் கர்த்தர் ஆபிரகாமை உயர்த்தினார்.

கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் விசுவாசத்தில் வல்லவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றார். தேவனுக்கு எதிராக மனிதன் செய்யும் அடிப்படை பாவம் அது அவிசுவாசம் ஆகும். அவிசுவாசம் தேவனை கனவீனபடுத்தும். மேலும் அவிசுவாசமானது தேவன் கொடுத்த வாக்குதத்தங்களை நிறைவேற விடாமல் தடுத்துவிடும். ஆகவே அவிசுவசத்தை தவிர்த்து விசுவாசத்தில் வல்லவர்களாவோம். வாக்குதத்தங்களை சுதந்தரிப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " பவுலின் பார்வையில் விசுவாசத்தின் தகப்பன் "

Post a Comment