விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

பாடுகளில் சந்தோஷப்பட்டு  களிகூருங்கள் இயேசு  கிறிஸ்து

இயேசுவின் நிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். மத்தேயு 5 : 11-12

கிறிஸ்துவின் நிமித்தம் வரும் பாடுகளில் சந்தோஷப்பட்டு களிகூரவேண்டும்  என்றும் அப்படிப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றும் இயேசு தமது மலை பிரசங்கத்தில் கூறினார். தேவனுடைய உண்மையான ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள், கிறிஸ்துவுக்காகவும் மற்றும் அவரது சபையின் நிமித்தமாய் வரும் பாடுகளிலே சந்தோஷப்பட்டு களிகூர வேண்டும் என்பதை தெளிவாய் போதித்தார்.

யாராவது நமக்கு விரோதமாக தீங்கிளைக்கும் போது நாம் அவர்கள் மேல் மிகுந்த கோபம் அடைந்து அவர்களை பழிவாங்க நினைக்கின்றோம். இயேசுவோ அப்படி செய்யக்கூடாது என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளார். மாறாக கிறிஸ்துவின் நிமித்தம் வரும் பாடுகளில் சந்தோஷப்பட்டு களிகூரவேண்டும் என்று விரும்புகின்றார்.

இது சற்று கடினமான காரியம் தான் என்றாலும் பரிசுத்த ஆவியானவரின் நிறைவினால் நாமால் துக்கத்திலும் சந்தோஷமாய் இருக்க முடியும். சந்தோஷம் என்பது பரிசுத்த ஆவியானவரால் அருளப்படும் கனி வரங்களில் ஒன்றாகும். (கலாத்தியர் 5:22)

சாலையில் செல்லும் போது நிச்சயம் சோதனைச் சாவடிகளை (CHECK POST) கடந்தே செல்ல வேண்டும். அதே போல விசுவாசிகளின் வாழ்க்கையிலும் பல சோதனைகளை கர்த்தர் அனுமதிகின்றார். அந்த சோதனையின் போது பலர் நம்மை பகைக்க கூடும், நிந்திக்க கூடும், துக்கப் படுத்த கூடும். நாம் இவைகளின் ஊடாய் கடந்து செல்லும் போடு சந்தோஷத்தோடு கடந்து செல்கின்றோமா அல்லது நிந்தித்தவர்களுக்கு எதிராக கோபம் அடைகின்றோமா. 

ஆரஞ்சு அல்லது திராட்சை போன்ற பழங்களை பிழியும் போது அதிலிருந்து கனி ரசம் வரும். கசப்பு ரசம் வராது. நாமும் பலவித பாடுகளில் பிழியப்படும் படும் போது நம்மிலிருந்து கோபம் என்னும் கசப்பான ரசம் வருகிறதா அல்லது சந்தோஷம் என்னும் ஆவியின் கனி ரசம் வெளிவருகிறதா. சிந்தியிங்கள் பிரியமானவர்களே. கிறிஸ்துவின் நிமித்தம் வரும் பாடுகளிநாள்  பரலோகத்தில் நமக்கு மிகுந்த பலன் இருக்கும் போது நாம் ஏன் கலங்க வேண்டும். சந்தோஷப்பட்டு களிகூருவோம். கர்த்தரை மகிமைப்படுத்துவோம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை
★☆★ Like Tag Share ☆★☆

0 Response to " "

Post a Comment