விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்சர்ப்பம் சாத்தனா?

இன்றைக்கும் அநேக கிறிஸ்தவர்கள் பாம்பைக் கண்டால் பிசாசு என்று கூறுகின்றார்கள். அநேக பாமர மக்கள் அதை தெய்வமாக வணகுகின்றனர்.

அதியாகமம் 3.1-ல் சொல்லப்பட்டது போல "தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது". அதனால் தான் தந்திரக்கார சாத்தான் சர்ப்பத்தின் மூலமாக ஏவாளை ஏமாற்றினான். அதற்க்காக சர்பத்தை சாத்தான் என்று சித்தரிப்பது சரியல்ல. சேராபீன்ங்களின் பெயர் அர்த்தம் சர்ப்பம் என்பதாகும்.

இன்றைக்கும் தந்திரக்கார சாத்தான் சர்ப்பத்தின் மூலமாக அநேகரை ஏமாற்றுகிறான். அநேகரை அதை வணக்கும் படியாகவும் செய்துள்ளான்.

லூக்கா 10 19-ல் இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. இந்த வசனத்தின் அர்த்தம் சர்ப்பங்களையும் தேள்களையும் நாம் வேண்டுமென்றே சென்று மிதிக்க வேண்டும் என்று அல்ல. சத்துருவின் சகல அதிகாரங்களையும் மேற்கொள்ள நமக்கு அவர் அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்பதாகும்.

சில நாட்களுக்கு முன்பதாக நான் பார்த்த காணொளியில் இஸ்லாமிய சகோதர்ர் ஒருவர் இந்த வசனத்தின் அர்த்தம் புரியாத்தினால் கிறிஸ்தவர்களை பாம்பை பிடிக்குமார் சவால் விட்டுக்கொண்டிருந்தார். "பவுல் சில விறகுகளை வாரி அந்தநெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்" என்று அப்போஸ்தலர் 28:3-5- ல் காண்கிறோம். ஏனென்றால் கட்டுவிரியன் பாம்பினால் பவுல் மரிப்பது தேவ சித்தம் அல்ல. அநேகருக்கு சாட்சியாக அவர் மரணம் இருக்க வேண்டும் என்பதுதான் தேவசித்தம். இதினால் உலகத்தின் சர்பங்களையும் சாத்தானையும் இயேசுவின் நாமத்தினால் நாம் மேற்கொள்ள முடியும். எத்தனைபேர் சவால் விட்டாலும் வசனம் ஏற்கனவே பலமுறை உலக சரித்திரத்தில் நிறவெறி விட்டது, நிறைவேறிக் கொண்டும் இருக்கின்றது.

பிசாசானவன் தன்னுடைய தந்திரங்களை யாரும் கண்டுபிடித்து விட கூடாது என்று சொல்லி பாம்பு என்றால் பிசாசு என்று நம்பும் வகையில் நமை குருடாக்க நினைக்கின்றான் என்பது உண்மை. சர்பதையும் தேளையும் நாம்போய் மிதிப்பதினால் எந்த சாத்தானுடைய வல்லமையும் தன்யபோவதில்லை. மாறாக ஜெபதிலே சாத்தானுடைய வல்லமைகளுக்கு எதிர்த்து நின்றால் சாத்தானுடைய சகல வல்லமைகளையும் மேற்கொள்ள முடியும். ஆகவே சர்பதையும் பாம்பையும் பிசாசு என்று சொல்வதை நிறுத்


திவிட்டு ஜெபதில் சாத்தானுக்கு எதிர்த்து நின்று அவனது வலையில் சிக்கி தவிக்கும் அநேகரை காப்போம். ஆமேன்.

சகோ. டேவிட் தாமோதரன்

Join us @ https://www.facebook.com/VVSongs

0 Response to " "

Post a Comment