விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கிராம ஊழியமா? பட்டன ஊழியமா?

மத்தேயு 9:35. இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்தார் என்று வாசிப்பதில் இருந்து, இயேசு பட்டணத்தையும் கிராமத்தையும் சம்மாகவே பார்த்துள்ளார் என்பது தெளிவாக புரிகின்றது.

இன்றைக்கு பட்டனகளில் வாழும் ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள், இயேசு செய்த்து போல் ஊழியத்தை பட்டணத்திலும் கிராமத்திலும் சம்மாக செய்கின்றார்களா. மாறாக பட்டங்களில் மாத்திரம் ஊழியம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தேவன் அவர்களை பட்டணத்தில் உயர்துவதின் நோக்கம் கிராமகளில் சென்று சுவிசேஷம் சொல்வதற்குத்தான் என்பதையும் மறந்து போனார்கள்.

உலகில் கிராமங்களில் உள்ள மக்கள் தொகையை விட பட்டனக்களில் வாழும் மக்களின் தொகை அதிகமாகவே உள்ளது. அதனால் தான் பட்டங்களில் அநேக சபைகளை பார்க்க முடியும். கிராமங்களில் சபைகளையும் ஊழியர்களையும் பார்ப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.
ஏனென்றால் பட்டணங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையும் கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையும் முற்றிலும் வேறு பட்டதாக உள்ளது. பட்டணத்தில் உள்ள குடுப்பம் பொதுவாக உறவினர்களை சார்ந்து வாழ்வதில்லை. ஆனால் கிராமத்திலோ ஒவ்வொரு குடும்பமும் உறவினர்களை சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும். இது கிராமஊழியத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து விடுகிறது. எப்படியெனில் ஒருவன் இரட்சிக்கப்படும் போது அவன் சபைக்கு வந்து ஞானஸ்நானம் பெற விரும்புகிறான். இதற்காக தனது குடும்ப உறவினர்களின் அனுமதியை அவன் பெற வேண்டியது உள்ளது. அவர்களை மீறி அவன் சபைக்கு வந்தால் அவனை ஒதுக்கிவைக்கும் நிலைமை இன்றும் பலகிராமங்களில் காணப்படுகிறது. இதனால் தான் கிராம ஊழியங்களில் ஆதுமாக்களும் குறைவு. காணிக்கை வருவாய்களும் குறைவு. இப்போது சொல்லுங்கள் இப்படிப்பட்ட கடினமான ஊழியத்தை யார் செய்வார்கள்.

நாம் எந்த  பட்டணத்தில் வாழ்ந்தாலும் சரி. அருகிலுள்ள கிராமத்திற்காக பாரத்தோடு ஜெபித்து அங்கு சுவிஷேச ஊழியம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம். இயேசுவைப்போல் நாமும் பட்டணத்திலும் கிராமத்திலும் ஊழியம் செய்வோம். ஆமேன்

சகோ. டேவிட் தாமோதரன்

Join us @ 
https://www.facebook.com/VVSongs


0 Response to " "

Post a Comment