விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மனிதர்களின் இருதயத்தை கவர்ந்த அப்சலோம், தேவனின் இருதயத்தை கவர்ந்த தாவீது

சங்கீதம் 3 (தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பாடின சங்கீதம்.)
4. நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)
5.
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்கர்த்தர்என்னைத் தாங்குகிறார்.
தாவீது தன் குமாரனாகிய அப்சலோமுக்கு பயந்து தப்பி ஓடுகையில் தேவனை நோக்கி அபயமிடுகிறார். அதன் பின்பதாக கர்த்தர் தன் குரலை கேட்டதாகவும், அவர் என்னை தாங்குகிறார் என்றும் விசுவாச அறிக்கை விடுகின்றார். கர்த்தர் என் தாவீதின் கூக்குரலை கேட்டு அவனை விடுவித்தார் என்று சிந்திக்கையில் அவன் தேவனின் இருதயத்தை கவர்ந்து கொண்டான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. மனிதர்களின் இருதயத்தை கவர்ந்த அப்சலோமைப் பற்றியும், தேவனின் இருதயத்தை கவர்ந்த தாவீதைப் பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.

மனிதர்களின் இருதயத்தை கவர்ந்த அப்சலோம் (II சாமுவேல் 15 : 1-6)
1.இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான். 2.மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால், 3.அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான். 4.பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். 5.எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான். 6.இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
மேற்க்கண்ட வசனத்தில் இருந்து அப்சலோம் சிங்காசனதிர்க்கு ஆசைப்பட்டு இஸ்ராயேல் ஜனங்களை கவர்ந்து கொள்ளுகிறான்.

தேவனின் இருதயத்தை கவர்ந்த தாவீது  (II சாமுவேல் 16 : 5-12)
அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; (II சாமுவேல் 15:14) என்று சொல்லி தப்பி ஓடி பகூரிம்மட்டும் வந்தபோது சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி அவனுக்கு எதரிப்பட்டு தாவீதை தூஷிகின்றான். அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான். தாவீது நினைத்திருந்தால் அவனை கொன்று போட்டிருக்க முடியும். அனாலும் அவன் சவுல் என்னும் அபிஷேகம் பண்ணப்பட்டவடைய வம்சம் எனபதால் அவன் என்னை தூஷிக்கட்டும் என்று அமைதலோடு கர்த்தரை நோக்கி பார்க்கின்றான். “ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான் (12)”

ஒருவேளை அந்த இடத்தில நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நினைத்து பாருங்கள். தாவீது சொல்கிறார் அவன் என்னை தூஷிக்கட்டும். தேவன் என் சிறுமைக்கு தக்கதாக நன்மையை தருவார் என்று விசுவாச அறிக்கை செய்கின்றார். ஆம் பிரியமானவர்களே நமது வாழ்க்கையில் ஒருவேளை காரணம் இன்றி நம்மை பலர் தூஷிக்க்கூடும். நாமும் தாவீதைப்போல அமைதியோடு கர்த்தரை நோக்கி பார்க்க வேண்டும். இந்த விசுவாச அறிக்கை தேவனுக்கு பிரியமாய் இருந்தபடியால் அந்த யுத்ததில் தாவீதிற்கு தேவன் பெரிய வெற்றியை கொடுத்து எருசலேமுக்கு திரும்ப செய்கின்றார். மனிதர்கைளின் இருதயத்தை கவர்ந்த அப்சலோமோ கர்வாலி மரத்தில் காக்க போல சிக்கி ஜீவனை இழந்தான். தாவீதுக்கோ கர்த்தர் நமையை செய்தார். காரணம் தாவீது கர்த்தரின் இருதயத்தை கவர்ந்து கொண்டான். இந்த உலகத்தில் வாழும் நாம், யாரை கவர்ந்து கொள்ள நினைக்கின்றோம். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக வாழ்ந்து உலகில் ஜெயம் பெறுவோம். ஆமேன். அல்லேலுயா

சகோ. டேவிட் தாமோதரன்

Join us @ 
https://www.facebook.com/VVSongs

Like
Comment Tag Share

0 Response to " "

Post a Comment