விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

பரபாசு பெற்ற விடுதலை



பஸ்கா பண்டிகையின் பொழுது பிரபலாமான குற்றவாளியை விடுவிப்பது அன்றைய கால வழக்கமாயிருந்தது. இயேசுவின் மரணத்தை மக்கள் திரள் வேண்டுகை செய்த பொழுது பிலாத்து அவர்கள் முன் இயேசுவா அல்லது பரபாசா என்று தெரிவு செய்ய விட்டுவிட்டான். அவர்கள் பரபாசை தெரிந்தெடுக்கவே இயேசுவை சிலுவையிலறைந்து கொலை செய்ய பிலாத்து ஒப்படைத்தான். பரபாசுக்கு பதிலாக நிரபராதியான இயேசு தமது மரணத்தினால் சட்டத்தை திருபிதியாக்கினார். அந்த பரபாசு விடுவிக்கப்பட்டவுடன் சிலுவை மரணத்தை காண கல்வாரிக்கு சென்று அங்கு, தான் மரிக்கவேண்டிய இடத்தில் இயேசு தனக்கு பதிலாய் சிலுவையில் பாடுபட்டு மரிப்பதை கண்டிருந்தால் கீழ்க்காணும் மூன்று காரியங்களை சொல்லி இருப்பான்.

1. தான் ஓர் நியாமான தண்டனை தீர்ப்பு பெற்ற பாவி 2. தனக்கு பதிலாய் ஒரு குற்றமும் செய்யாத இயேசு பாடுபடுகின்றார் 3. இவ்வளவு பெரிய பதிலீடைப் பெற தகுதியான ஒன்றையும் நான் செய்யவில்லை

பரபாசு இவ்வாறு கல்வாரி சிலுவைக்கு முன்பதாக இருந்து சொல்லிக் கொண்டிருந்தவேளையில், அவனை தப்பியோடி வந்த குற்றவாளி என்றும், நூற்றுக்கு அதிபதியினிடத்தில் அவனை காட்டிக்கொடுக்க போவதாகவும் ஒருவன் அவனை மிரட்டியிருந்தால், பரபாசு அவனைப் பார்த்து, “இதோ பார், அந்த நூற்றுக்கு அதிபதி என்னை கைது செய்ய முடியாது. இன்றைக்கு காலையில் தான் விடுதலை பெற்றேன். சிலுவையில் நான் மரிக்க வேண்டிய இடத்தை இயேசு எடுத்துக் கொண்டதால் நான் விடுதலையானேன்” என்று கூறியிருப்பான். பிராயசித்தத்தின் நடைமுறை அனுபவத்தை முதலில் பெற்றவன் பரபாசு. அந்த நடுமை சிலுவையில் இயேசு தொங்கியிராதிருந்தால் பரபாசு அந்த இடத்தில் தொங்கியிருப்பான். இயேசுவின் மரணத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, அவருடைய இரட்சிப்பின் வல்லமையை அனுபவித்த மனிதன் தான் பரபாசு. விசுவாசிகளாகிய நமது நிலையும் அந்த பரபாசுவின் நிலையைப் போன்றது தான். அதாவது சட்டத்திலிருந்து விடுதலை. பாவிகளாக நாம் சட்டத்தின் கீழிருந்தோம். ஆனால் கிறிஸ்து நமக்காக சாபமாகி, சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி இரட்சிதிருகின்றார். கர்ததர் நல்லவர் என்று இன்றையதினத்தில் அதிகம்மாய் அறிக்கை செயுங்கள். நன்மையை சுதந்தரித்து கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " பரபாசு பெற்ற விடுதலை "

Post a Comment