விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இயேசு என்றாலே சமாதானம் தான்



ஆதாம் மாசற்றவனாக பிறந்தான். அவனது அறியாமைக்கும் நீதிக்குமிடையில் ஒரு படி தான் இருந்தது. அதேபோல அவனது அறியாமைக்கும் பாவத்துக்குமிடையில் ஒரு படி தான் இருந்தது. ஆனால் அவன் பிந்திய படியை தெரிந்தெடுத்து பாவியாகிவிட்டான். ஆதாமின் வீழ்ச்சிக்கு பின்பே அவனுக்கு பிள்ளைகள் பிறந்தமையால் மானுட வர்க்கமே பாவத்தில் பிறக்கலானது. சட்டத்தை முறிப்பவன் மேலேய சட்டத்திற்குரிய தண்டனை விழும். ஆதாம் தேவனின் கட்டளையை மீறி சட்டத்தை முறித்தமையால் மரணம் என்னும் தண்டனை அவன்மேல் வந்தது. அவனால் தோன்றிய மனுக்குலமும் மரணத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. “இப்படியாக, ஒரே மனுஷனால் பாவமும் பாவத்தினால் மரணமும் உலகத்தில் பிரவேசித்து போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது”. ரோமர் 5:12. எல்லா மனிதரும் மரிக்கிற மெய் நிகழ்வே எல்லா மனிதரும் பாவிகள் என்பதற்கு சான்றாய் உள்ளது.தேவன் நினைத்திருந்தால் சட்டத்தை முறித்து போட்டிருக்க முடியும். ஆனால் அது சட்டத்தை அதன் உரிமைகளைவிட்டு வஞ்சித்து பறிபோகச் செய்வதாகும். மேலும் அது தேவனுடைய வார்த்தையின் நாணயத்தை மாற்றிடும் செயலாகிவிடும். ஆகவே தண்டனை ஆதாம் மூலமாகவோ அல்லது அவனது பதிலாள் மூலமாகவோ செலுத்தப்பட வேண்டும். பதிலாள் ஒருவர் மீது தண்டனையை செலுத்துவதின் சட்டத்திற்கும், நீதிக்கும் எந்தவித பங்கமும் வருவிக்காத வகையில் குற்றவாளி ஒருவனுக்கு மன்னிப்பு வழங்க முடியும். அவ்வழிவகை ஏற்ப்பாடே பிராயசித்தம் ஆகும்.

ஆனால் ஆதாம் ஒரு பதிலாளை அளிக்க முடியாததால், தேவனே தமது நீதியினாலும், இறக்கதினாலும் உடனடியாக ஒருவரைக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார். ஆதாமுக்கு பதிலாய் அந்த தண்டனையை ஏற்க தமது சொந்த குமாரனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பி தேவன் தமது நீதியையும் இரக்கத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தினார். நமது தேவன் நீதியுள்ளவர். அதே நேரம் நம் மேல் மிகுந்த அன்புள்ளவரும் கூட. நமக்கு சமதானம் உண்டு பண்ணும் படி, நாம் பாவ, சாபமில்லாமல் சந்தோஷமாய் வாழ, இயேசுவானவர் சிலுவையிலே தம்மை பலியாக ஒப்புக் கொடுத்தார். முதலாவது ஆதாமிலிருந்து பாத்தையும், மரணத்தையும் மனுக்குலம் பெற்றுகொன்டத்தைப் போல, இரண்டாவது ஆதாமாகிய இயேசுவிடத்திலிருந்து சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் நாம் பெற்றுகொள்கின்றோம். ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் சமாதானத்தை இழந்து தவிப்பீர்கள் என்றால் இயேசு செய்த பிராயசித்ததை நினைவு கூறுங்கள். நமக்கு சமாதானம் உண்டு பண்ணும் தண்டனை அவர் மீது வந்ததால் தான் அவர் சிலுவையில் மரித்தார். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்ற நமது இரட்சகரான கிறிஸ்து இயேசுவானவர் கூறிய வார்த்தைகள் இன்றைக்கு உங்களுடைய வாழ்வில் நிறைவேறட்டும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " இயேசு என்றாலே சமாதானம் தான் "

Post a Comment