விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

யெகோவா ஷம்மா – கர்த்தர் பிரசன்னமாயிருக்கின்றார்.



அந்நாள் முதல் நகரம் யேகொவா ஷம்மா என்னும் பெயர்பெறும் (எசே.48:35).

முதல் தடவையாக யேகோவா ஷம்மா என்னும் பெயர் எசேக்கியேலின் புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் வருகிறது. ஒரு நகரம் கட்டப்படுமென்றும் அந்த நகரத்தின் பெயர் யேகோவா ஷம்மா என்றும் எசேக்கியேல் சொன்னார். அதாவது அந்த நகரத்தில் தேவன் எப்போதும் பிரசன்னராயிருப்பார் என்று பொருள். ஒரு மனித வாழ்க்கை பயணத்திற்கு இன்றியமையாதது தேவ பிரசன்னமேயாகும். இவ்வுலகில் நாம் விரும்புவது எதுவும் நம்மிடத்தில் இருந்தாலும், இல்லாவிட்டலும் தேவ பிரசன்னம் நமக்கு அவசியம் தேவை. ஏனெனில், தேவ பிரசன்னமே நாம் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை கொடுக்கிறது. தேவ பிரசன்னமே, தேவ சத்தத்தை அனுதினமும் கேட்பதற்க்கும், தேவ உறவை ஒவ்வொரு நொடிபொழுதும் உணர்வதற்க்கும் நமக்கு வழிசெய்கிறது.

ஆதாம், ஏவாளோடு தேவ பிரசன்னம் பரிபூரணமாய், பிரத்தியட்சமாய் இருந்தது. ஆனால், அவர்களோ அதை இழந்து போனார்கள். அப்போஸ்தலர்கள் தேவ பிரசன்னத்தால் நிரம்பி இருந்தனர். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நமக்கு அதைவிடச் சிறப்பான வாக்குத்தத்தம் உண்டு. இயேசு பரத்துக்கு ஏறிச்செல்லுமுன், தம்முடைய சீஷர்கள் உலகமெங்கும் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கவேண்டுமென்று அவர்களிடம் கூறினார். அதன்பின், இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்.28:20) என்று வாக்குப்பண்ணினார். அவருடைய பிரசன்னத்தை ஒரு பட்டணத்தின் நாலு சுவர்களுக்குள் மட்டுப்படுத்தமுடியாது; நாம் எங்கு சென்றாலும் அவருடைய பிரசன்னம் நம்மோடிருக்குமென்று அவர் வாக்குப்பண்ணினார். நாம் தோல்வியுற்றாலும் சோர்படைந்தாலும் அவர் அங்கிருப்பார். நாம் வெற்றியின் மலையுச்சியிலிருந்தாலும் அவர் அங்கேயும் உண்டு. நாம் ஆபத்துக்களையும் சோதனைகளையும் சந்திக்கும்போதும் அவர் நம்மோடுண்டு. அவர் எப்போதும் பிரசன்னராயிருக்கிற யேகோவா ஷம்மா.

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதிரிகளே கிறிஸ்துவின் பிரசன்னத்தை ஒவ்வொரு நொடிபொழுதும் நம் வாழ்வில் காண வாஞ்சிப்போமாக. ஆண்டவரின் பிரசன்னத்தோடு நம் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்பொழுது, நம் வாழ்வில் நாம் ஒருபோதும் இடறி விழமாட்டோம். பிற மனிதர்களின் ஐக்கியத்தை காட்டிலும், வாழ்வில் நாம் பெற்றிருக்கும் அல்லது பெற வாஞ்சிக்கும் எந்த பொருட்கள் தரும் சந்தோஷத்தை காட்டிலும், தேவ பிரசன்னம் நமக்கு அளவில்லாத சமாதானத்தையும், சந்தோஷத்தையும் எப்பொழுதும் தரும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

3 Responses to " யெகோவா ஷம்மா – கர்த்தர் பிரசன்னமாயிருக்கின்றார். "

  1. அருமையான விளக்கம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

    ReplyDelete
  2. S. பாபு அங்காளம்மன் கோவில் தெரு கீரப்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் சென்னை 127

    ReplyDelete
  3. I'm preparing to Systematic Theology
    It's very useful tq God 🙏 bless you

    ReplyDelete