Wednesday, 7 May 2014
யெகோவா சிட்கேனு – நமது நீதியாயிருக்கிற கர்த்தர்
அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே (எரே.23:6).
இந்த வசனம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்த உலகத்தில் பிறந்த தேவ குமாரனாகிய இயேசுவை குறித்து, கி.மு. 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த எரேமியா தீர்கதரிசியினால் சொல்லப்பட்டதாகும். நம்மில் அநேகர் ஒரு சிலகுறிப்பிட்ட துறையிலோ அல்லது கலையிலோ தனித்தன்மை உடையவர்களாக இருப்பதைப் போலவே இயேசு இந்த உலகத்தில் பிறந்தவர்களிலேயே தனித்தன்மை வாய்ந்தவராக இருந்தார். எதிலே அவர் தனித்தன்மை வாய்ந்தவராக இருந்தார்? ஆம், அவர் நீதியிலே தனித்தன்மை பெற்று விளங்கினார். பரிசுத்த ஆவயின் அசைவாடுதளினாலே பாவத்தின் சுவடே இல்லாமல் பரிசுத்தமாய்ப் பிறந்தார். அவர் ஒருவரே மனித வரலாற்றில் ஒழுக்கத்திலும் ஆவியிலும் பாவமற்ற வாழ்க்கை நடத்தினார். அவர் வாழ்ந்த உலகத்தில் பாவத்தின் காற்று பலமாய் அடித்தபோதிலும் அவர் நீதியிலே நடந்தார். இஸ்ரவேல் மக்களை நீதியோடும் நியாயத்தோடும் ஆளுகைச் செய்கிற ஒரு அரசனை அவர்களுக்குத் தேவன் அனுப்புவார் என்று எரேமியா முன்னறிவித்தார். அவருடைய நாமம் யெகோவா சிட்கேனு, அதாவது நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதுவே.
இயேசு அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நீதியில் நடக்க வேண்டுமென விரும்புகின்றார். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே! நாம் நீதியின் மேல் பசியும் தாகமும் உள்ளவர்களாயிருந்தால், தேவன் நம்மை தமது கிருபையினால் திருப்தியாக்குவார். பாவத்தின் மேல் பசிதாகமுள்ளவர்கள் எந்த நிலையிலும் திருப்தி அடைய மாட்டார்கள். எத்தனை முறை பாவம் செய்தாலும் அதை திரும்ப செய்ய வேண்டும் என்று அவர்கள் பாவத்தில் விழுவார்களே தவிர திருப்தி அடைய மாட்டார்கள். ஆகவே நாம் பாவத்தின் மேலும், பணத்தின் மேலும், அழிந்து போகிற மாயையான காரியங்கள் மேலும் பசிதாகமுள்ளவர்களாக இல்லாமல், நீதியின் மேலும், நியாயத்தின் மேலும், கர்த்தரின் மேலும், அவருடைய கிருபையின் மேலும் பசிதாகமுள்ளவர்களாக இருப்போம்.
நாம் பாவிகளாக பிறந்திருக்க கிறிஸ்து நாம் தண்டனை அனுபவிக்க வேண்டிய இடத்தில் அவர் பாடுகள் அனுபவித்து சிலுவையில் மரித்தார். அவர் சிந்திய இரத்தம் நமது பாவங்களை கழுவி நம்மை சுத்திகரிகின்றது. பாவத்தினால் நொந்துருகி நிற்கின்றீர்களா?, அவர் சிந்திய இரத்தம் உங்களுடைய எத்தகைய பாவத்தையும் மண்ணிக்க போதுமானதாய் உள்ளது. இதை வாசிக்கின்ற நீங்கள், இயேசு கிறிஸ்துவின் இரத்ததினால் கிடைக்கும் மன்னிப்பை பெற்று அவருக்கு முன்பாக நீதிமானாக வாழவே இயேசு விரும்புகின்றார். சிலுவையின் மரணம்வரையிலும் நேர்மையாக நீதியாக வாழ்ந்த இயேசுவைப் போல வாழ தொடர்ந்து முயன்று தேவனைப் பிரியபடுதுவோமாக.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " யெகோவா சிட்கேனு – நமது நீதியாயிருக்கிற கர்த்தர் "
Post a Comment