விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

யெகோவா ரூவா - நமது மேய்ப்பனாயிருக்கிற கர்த்தர்மேய்த்தலைத் தன் தொழிலாகக் கொண்டிருந்த தாவீது, தன் ஆடுகளை நேசித்த ஒரு நல்ல மேய்ப்பனாக இருந்ததால், கர்த்தரைத் தன் மேய்ப்பனாகக் கண்டு அனுபவித்தார். அதன்விளைவே இந்த அற்புதமான 23ம் சங்கீதம். கர்த்தர் தாவீது அரசனின் மேய்ப்பனாக இருந்தபடியால் அவர் தாழ்ச்சியடையவில்லை என பார்க்கிறோம். இந்த நாட்களிலே கர்த்தர் நம்முடைய மேய்ப்பனாகவும் இருப்பதால் அவர் நம்மை எப்படி மேய்கின்றார் என்பதை இந்த அதிகாரம் நமக்கு கான்பிகின்றது. அவர் நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவர் நம் ஆத்துமாவைத் தேற்றி ஜீவனுள்ள நாளெல்லாம் நம்மை பாதுகாக்கிறார்.

யோவான் 10 ம் அதிகாரத்தில் அருள்நாதர் இயேசு கூறுகிறார், நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் ,கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் மேய்ப்பன் அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.

நம்மிடம் இருக்கும் வாகனங்களை பிறரிடம் கொடுக்க நாம் பிரியப்பட மாட்டோம். ஏனென்றால் நமக்கு தான் தெரியும் நமது வாகனத்தின் உண்மை நிலை. மேலும் வாகனத்தை வாங்குபவர் சரியான முறையில் வாகனத்தை ஓட்டுவார் என்ற நிச்சயம் நமக்கு இருக்காது. இப்படியாக எந்தப் பொருளானாலும், அதற்கு உரியவன் அதனைப் உபயோகிப்பதற்கும் வேறு ஒருவன் அதனை உபயோகிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாமே கண்டிருக்கிறோம். அதே போல, ஒரு மந்தையை அதன் உரிமையாளன் பராமரிப்பதற்கும், கூலியாள் பராமரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை மேலுள்ள வசனத்தில் காண்கிறோம். உரிமையாளனாகிய மேய்ப்பனுக்கும் கூலியாளுக்கும் பெரியதொரு வித்தியாசம் உண்டு. கூலியாள் பணத்துக்காக மந்தையை மேய்க்கிறான். மந்தையில் ஒரு ஆடு செத்துப்போனால் அவனுக்கென்ன! காணாமல் போனால் செத்துப்போனால் அவனுக்கென்ன! நல்ல மேய்ப்பவனோ கூலிக்கு அல்ல; அன்பின் நிமித்தமே தம் மந்தையில் கரிசனை காண்பிகின்றார். மேலும் தன் ஆடுகளுக்காக தன்னையே அர்ப்பணித்து நல்ல தண்ணீர், நல்ல மேய்ச்சல், பாதுகாப்பு, பராமரிப்பு யாவையும் தன் ஆடுகளுக்காக கொடுக்கின்றார். இறுதியில் இயேசு தமது மந்தைக்காக தமது ஜீவனையே கொடுத்தார். யெகோவா ரூவா, நமது மேய்ப்பனாயிருக்கிற கர்த்தர். கண்ணின் மணி போல நம்மை பாதுகாத்து நடத்தி செல்வாராக.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " யெகோவா ரூவா - நமது மேய்ப்பனாயிருக்கிற கர்த்தர் "

Post a Comment