இயேசு ஜனங்களை நோக்கி:
நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன்
இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள்
ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில்
விசுவாசமாயிருங்கள் என்றார். யோவான் 8:12 & 12:36
கிறிஸ்து பிறப்பதற்கு முன் சுமார் 800 வருடங்களுக்கு
முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசி ஏசாயா, ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அதிகமாகவே முன்னறிவித்தவர் ஆவார். “இருளில்
நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில்
குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்” (ஏசாயா
9:2&6).இவ்வாறு
இயேசுவின் பிறப்பை தெளிவாக கூறிய தீர்க்கதரிசியாவார். இயேசுவின் சீடராகிய யோவான்
சொல்கிறார், “அவருக்குள் (இயேசுவுக்குள்) ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த
ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது
அதைப் பற்றிக்கொள்ளவில்லை. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற
ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவான் 1:4-5&9). பவுல் எபேசு சபையினருக்கு எழுதுகிறார் “…இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின்
பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.” (எபேசியர் 5:8) என்று.
இப்படியாய் அநேக தீர்க்கதரிசிகள், பரிசுத்தவான்கள்
இயேசுவை “இருள் நீக்கும் ஒளி” “மனிதர்களை பிரகாசிக்க செய்யும் மெய்யான ஒளி” என்று சொல்லியிருக்க, இயேசு எவ்வாறு மக்களுக்கு தம்மை
வெளிப்படுத்தினார் என்பதை இந்த நாள் தியான பகுதியில் காணலாம்.
இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு
ஒளியாயிருக்கிறேன், என்னைப்
பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். நீங்கள் ஒளியின்
பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில்
விசுவாசமாயிருங்கள் என்று கூறினார். அதாவது உலகமெங்கும் இருக்கும் எந்த மனிதனையும்
பிரகாசிக்க செய்யும் மெய்யான ஜீவ ஒளி நானே தன்னை குறித்து சாட்சி கொடுப்பதை
பார்க்கின்றோம். மேலும் நாம் அவர்ருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டுமென்றால்
ஒளியினிடத்தில் (இயேசுவினிடத்தில்) விசுவாசமாயிருக்க வேண்டும் என்ற அன்புக்
கட்டளையையும் விதித்தார். ஏன் ஒளியினிடத்தில் நம்பிக்கையாய் இருங்கள் என்று
கூறாமல், ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்று
கூறினார்?
உலக ஒளியினிடத்தில் நம்பிக்கை
சாலை ஓரங்கலிலே மின்னும்
ஸ்டிக்கர்களை (REFLECTING STICKERS) கொண்ட
வழிகாடும் தட்டுகளை வைத்திருப்பார்கள். வாகனத்தின் ஒளி அதின் மீதுபடும் பொழுது
அந்த ஸ்டிக்கர்கள் விளக்கு போல மின்னும். வாகனகள் சென்றவுடன் தான் பிரதிபலித்த ஒளி
அனைத்தையும் இழந்து சாதாரன பேப்பராய் மாறி தன்னுடைய பழைய இருளுக்குள்ளதாக கடந்து
செல்லும். எப்பொழுதெல்லாம் தன் மீது ஒளி படுகிறதோ அப்பொழுது தான் பிரகசிப்பேன்
என்று இந்த பிரதிபலிக்கும் ஸ்டிக்கருக்கு நன்கு தெரியும். இதேபோல மனிதர்களும்
பிரகாசமான விளக்கின் அருகில் செல்லும் பொழுது, அந்த
ஒளியினால் அவன் பிரகசிப்பான் என்பதும், விளக்கை
விட்டு தூரமாக சென்றால் அந்த பிரகாசம் நீங்கிவிடும் என்பதும் அணைவரும் அறிந்ததே.
இது தான் ஒளியினிடத்தில் நம்பிக்கை வைப்பதாகும். அதாவது ஒளியின் அருகில் நாம்
சென்றால் நாம் நிச்சயமாக பிரகசிப்போம் என்ற நம்பிக்கை.
உலகப்பிரகரமான கல்வி, செல்வம் எனும் விளக்கின் ஒளி படும்பொழுது
மனிதர்கள் பிரகாசிகின்றார்கள். அவைகள் நீங்கி விளக்கு எரிவது நின்றவுடன் இருளில்
விழுகின்றார்கள். மனிதர்களுடைய நம்பிக்கை உலக செல்வமாகிகிய விளக்கு இருந்தால்
நிச்சயாமாக பிரகசிக்கலாம். அநேக மக்களும், கிறிஸ்தவர்களும்
உலக விளக்கின் ஒளி தங்களை ஒளியூட்ட வேண்டுமென ஆவல் கொண்டு அந்த விளக்கின் அருகிலேய
இருப்பதை விரும்புகின்றார்கள். அந்த விளக்கும் சிறிது காலம் அவர்களை ஒளியூட்டி
பினபதாக அணைந்து விடுகிறது. இப்பொழுது அந்த விளக்கும், விளக்கின் ஒளியை நம்பியிருந்தவர்களும்
இருளிலே விழுகின்றார்கள். இருளான உலக வாழ்விற்கும் சாத்தானிற்கும் அடிமைப்பட்டு
தாம் இருகின்ற இடம், போகின்ற
இடம் தெரியாமல் வாழ்கின்றார்கள். கற்களுக்கு அடியில் வாழும் சிறு பூச்சிகளைப்போலக்
கல்லைப் புரட்டினாலும் மீண்டும் அந்த இருளான கற்களுக்கு அடியிலே செல்வது போல, அநேக மக்கள் வெளிச்சத்திற்குள் வரவிரும்பாமல்,மனந்திரும்பாமல் மீண்டும் மீண்டும் பாவமான வாழ்க்கையையே வாழ்ந்து
வருகின்றார்கள். இயேசு அதை அறிந்தவராய் “பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி
செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று
வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில்
வருகிறான் என்றார்” (யோவான் 3:20-21).
மெய்யான ஜீவ ஒளியினிடத்தில் விசுவாசம்
இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பெரிய
ஆசீர்வாதம் இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காண்பதே. மனிதன் உலக
இருளில் வாழ்வதை நாம் அறிவோம். இந்த இருளில் இருக்கிற மனிதன் வெளிச்சத்தை கண்டடைய
பல விதமான காரியங்களை செய்தும் தோல்வி கண்டதினாலேயே தேவன் தன் குமாரனாகிய இயேசு
எனும் ஜீவஒளியை பூமிக்கு அனுப்பினார். எதிரொளிக்கும் ஸ்டிக்கர்கள் மீது என்றும்
அணையாத ஜீவஒளி படுகின்றது என்று நினைத்து பாருங்கள், அந்த ஸ்டிக்கர்கள் எந்நாளும், எந்நேரமும் பிரகாசித்துகொண்டே இருக்கும். அதே
போலத்தான் இருளின் ஆதிக்கத்தில் வாழ்ந்த மக்களை என்றும் பிரகாசிக்க செய்யும் ஜீவ
ஒளியாய் இயேசு இந்த உலகத்தில் வந்தார். ஆகவே தான் ஏசாயா சொல்கிறார் “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக்
கண்டார்கள்” என்று.
அந்தகாரத்தில் இருந்த நம்மைத் தமது ஆச்சரியமான ஒளிக்குள் அழைத்தவர் ஆண்டவர். அந்த
ஆச்சரியமான ஒளியை இவ்வுலகில் பிரகாசிக்கச் செய்யும்படிக்கு ஒளியின் பிள்ளைகளாய்
நடக்க ஆண்டவர் இயேசு விரும்புகின்றார். நமக்குள்ளதாக இருக்கும் பாவ இருளைக்
களைந்து, தேவனுக்காய் ஒளி வீச நாம் ஆயத்தமா?
எந்த மனுஷனையும் பிரகாசிக்க வைக்க இயேசுவால்
முடியும். உங்களால் பிரகாசிக்க முடியவே முடியாது என்று கூறியவர்களுக்கு மத்தியில்
இயேசு உங்களை பிரகாசிக்கச் செய்வார். ‘நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்’ என்றும், ‘விளக்கைக் கொளுத்தி
மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்
மேல் வைப்பார்கள்; அப்பொழுது
அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்’ என்றும் இயேசு சொன்னாரே. நாம் வெளிச்சமாக
இருக்கவேண்டும். அதே நேரத்தில் நாம் பிறருக்கு வெளிச்சம் கொடுக்கவும் வேண்டும்.
இயேசு தெளிவாக கூறியுள்ளார், “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல்
ஜீவஒளியை அடைந்திருப்பான். ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின்
பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்” என்று.
நாம் ஒளியின் பிள்ளைகளாக அதாவது இயேசுவின் பிள்ளைகளாக இருக்க விரும்பினால், முதாலவது நாம் இருளில் நடக்க கூடாது. இயேசு
திட்டமாய் சொல்கிறார், என்னை
பின்பற்றுகிறவன் இருளிலே நடக்க மாட்டான் என்று. நம்மேல் இயேசு வைத்த அந்த அதீத
நம்பிக்கையை நிறைவேற்ற நீங்கள் ஆயத்தமாக இருக்கின்றீர்களா? ஜீவஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள். அவரே
நம்மை பிரகாசிக்க செய்வார். மரண இருளில் நடந்தாலும் பொல்ல்ப்புக்கு பயப்பட
தேவையில்லை. ஏனெனில் இயேசு ஜீவ ஒளியாய் நம்மோடு இருப்பார்.
பாவ இருளின் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஜீவ ஒளியில் இயேசுவின் அருகில் நீங்கள் வாழ
விரும்பினால் இந்த சிறிய ஜெபத்தை அறிக்கை செய்யுங்கள். அந்தகார இருளினின்று என்னை
விடுவிப்பதற்காய் ஜீவ ஒளியாய் இவ்வுலகில் வந்து எனக்காக ஜீவனை தந்த இயேசுவே,
‘உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கும் மெய்யான ஜீவ ஒளி
நீரல்லவா. என் மீதும் உமது வெளிச்சத்தை பிரகாசிக்க பண்ணும். பாவ இருள் என்னில்
முற்றிலும் மறையட்டும். இயேசுவின் ஒளி பிரகாசிக்கட்டும். மெய்யான ஜீவஒளி இருளிலே
பிரகாசிக்கிறது; இருளானது
அதைப் பற்றிக்கொள்ளவில்லை என்ற வசனத்தின் படியாக, இருள் நிறைந்த இந்த உலகில் உமக்காக ஒளிவீசி
வாழ உதவிசெய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிகின்றேன் நல்ல பிதாவே. ஆமென்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் "
Post a Comment