வெளி 2:1௦
1919 ம் ஆண்டில் துருக்கி சேனை நாற்பது
ஆர்மேனிய போர் வீரர்களைச் சிறைப் பிடித்தது. அவர்கள் கிறிஸ்தவப் பற்றுறுதி
உள்ளவர்கள். அவர்களிடம், உங்கள் கிறித்துவ
நம்பிக்கையை விட்டு விட வேண்டும் என்று துருக்கி
சேனை கட்டளையிட்டது. ஆனால் ஆர்மேனிய போர் வீரர்கள் கிறிஸ்துவை மறுதலிக்க
மறுத்துவிட்டனர். கொடும் சினமடைந்த துருக்கி சேனை, நாற்பது
வீரர்களையும் கொடுமை படுத்தினர். கடும் இன்னல்களை சகித்த நாற்பது வீரர்களையும்
அருகில் உள்ள ஏரிக்கரைக்கு கொண்டு சென்றனர் துருக்கி படையினர். பணி உறைந்திருந்த
குளிர் இரவில் கிறிஸ்துவை மறுதலிக்க இறுதி தருணம் கொடுத்தனர். ஆனால் ஆர்மேனிய போர்
வீரர்களோ, எங்கள் உயிர் மூச்சு இயேசுவே என்று இறுதியாக கூறி
விட்டனர்.
பின்பு எகிப்து தேசத்து முகமதிய அதிகாரி
ஒருவர் வந்து அவர்களின் உடுப்புகளை உரிந்து, தண்ணீரில் நிற்க
கட்டளையிட்டார். ஆர்மேனிய போர் வீரர்கள், நமது மகிமையின்
மன்னனை மீண்டும் காண்போம் என்று ஒருமித்து கூறிக்கொண்டே குளிர் நீரில்
இறங்கினார்கள். சில நிமிடங்களில் உடல் மரத்து அவர்களில் ஒருவன் கீழே விழுந்தான்.
அப்பொழுதே காயம்பட்ட கைகளுடன் ஒருவர் தோன்றி, விழுந்த
மனிதனது ஆவிக்குரிய சரீரத்தில் பிரகாசமான கீரிடம் சூட்டியதை அம்முகமதிய அதிகாரி
கண்டார். அநேக ஒளிமயமான தேவ தூதர்களையும் கண்ட அவருக்கு திகில் உண்டானது.
இவ்வாறு நிமிடந்தோறும் ஒவ்வொருவராக கீழே விழ,
தேவ தூதர்கள் அவர்களுடைய ஆவிக்குரிய
சரீரத்திற்கு மகிமையின் கீரிடத்தை சூட்டினார்கள். இவ்வாறு 39 கீரிடங்கள் சூட்டிய
பின்னர் நாற்பதாவது கீரிடத்தை தூதர்கள் வானத்திற்கு திரும்ப எடுத்து சென்றனர்.
ஏன்னென்றால் நாற்பதாவது மனிதன் கிறிஸ்துவை மறுதலிக்கவே,
அவன் கரையேற்றப்பட்டு தீ காய்ந்து கொண்டிருந்தான். இந்நிகழ்ச்சி
முகமதிய அதிகாரிக்கு ஆச்சரியமாய் இருந்தது. அற்புதங்களை கண்முன்னே கண்ட அந்த
நாற்பதாவது கீரிடத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினார். தன்னுடைய வேலையை விட்டு
விட்டு கிறிஸ்தவராக மனம் மாறினார். கிறிஸ்து அருளும் மகிமையின் கீரிடதிற்கு யார்
அருகதையோ அவர்களுக்கே அது கிடைக்கும்.
பிசாசு சோதிக்கிறவன், உபத்திரவப்படுத்துகிறவன், இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டதை மத்தேயு 4:3-11ல் வாசிக்கலாம்.
வேத வசனங்களை அறிந்து, பயன்படுத்தின
கர்த்தர் பிசாசை ஜெயித்ததினால், பிசாசு
தோல்வி அடைந்தவனாக போய்விட்டான். சிலுவையிலே அவர் வெற்றி சிறந்தார். உபத்திரவம்
முடிவல்ல, கர்த்தர் விசுவாசிகளிடம் எதிர்பார்ப்பது
மரணபரியந்தம் உண்மையையே. உண்மையாயிருக்கிறவர்களுக்கு
வாக்குப்பண்ணப்பட்டிருப்பது ஜீவகிரீடம், உலகத்தின்
பதவிகளைக் காட்டிலும் பரலோகத்தில் ஜீவகீரிடத்தை பெற்றுக் கொள்வதே மேலானது. “பந்தயத்திற்குப்
போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள
கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு
அப்படிச் செய்கிறோம்” (I கொரிந்தியர் 9:25). இச்சையடக்கதொடு
நாம் நமது கிறிஸ்துவ வாழ்கையை தொடரும்போது, அழிவில்லா ஜீவகிரீடத்தை நாம்
பெறுவது நிச்சயம்.
இந்த சிறிய ஜெபத்தை அறிக்கை செய்யுங்கள். மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது
ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்என்று எங்களுக்கு வாக்களித்த இயேசுவே, எந்த
சோதனை வந்திடினும் உம்மை மறுதலிக்காமல், உமக்கு உண்மையாய் வாழுவேன்.
நீர் எனக்கு வைத்துள்ள ஜீவ கீரிடத்தை நோக்கி, இச்சையடக்கதோடு
தொடர்ந்து ஓடுவேன். எனக்கு பெலன் தரும் இயேசுவே உம்மை ஸ்தோதரிகின்றேன். இயேசுவின்
நாமத்தில் ஜெபிகின்றேன் நல்ல பிதாவே. ஆமென்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் "
Post a Comment