Friday, 9 May 2014
புனித பொலிகார்ப் (கி.பி.69-155) – பாகம் 1
கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாக மரித்த புனித பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாறு நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
86 வருடம் நண்மை செய்த இயேசுவை எப்படி மறுதளிப்பேன்
இயேசுவின் சீடரான யோவானின் ஆவிக்குரிய மகன்களில் (சீஷர்களில்) ஒருவரான பொலிகார்ப் (Polycorp) கி.பி 69-ல் பிறந்து ஸ்மைர்னா பட்டணத்தில் வாழ்ந்து வந்தார். இன்றைய துருக்கியில் உள்ள லிஸ்மிர் (Lzmir, Turkey) அந்த நாட்களில் ஸ்மைர்னா (Smyrna) என்று அழைக்கப்பட்டது. இந்த ஸ்மைர்னா பட்டணத்தில் அப்போஸ்த்தலராகிய பவுல் கிறிஸ்துவை அறிவித்து இருந்த்தால் ஒரு சிறு கூட்ட கிறிஸ்தவர்கள் அந்த பட்டணத்தில் இருந்தார்கள். இந்த ஸ்மைர்னா சபையானது கிறிஸ்துவின் நிமித்தம் துன்புறுத்தப்பட்ட ஆசியாவின் ஏழு சபைகளுள் ஒன்றாகும். அப்போஸ்த்தலராகிய யோவான் எழுதிய வெளிப்படுத்தின புத்தகத்தில் 1:11 - ல் அதை நாம் வாசிக்கலாம்.
கிறிஸ்து மரித்து உயிர்த்த முதல் நூற்றாண்டில் அநேக கிறிஸ்துவர்கள் ரோமானிய அரசர்களால் துன்புறுத்தப்பட்டனர். அப்போஸ்தலர்கள் இரத்த சாட்சியாக மரித்தனர். இந்த கால கட்டத்தில் தான் இயேசுவின் சீடரான யோவான் பத்மூ தீவில் இருந்து விடுதலை செய்யப்பட்டு எபேசு பட்டணத்தில் வந்து தன்னுடைய இறுதி நாட்களில் சபையினரை விசுவாசத்தில் திடப்படுத்தினார். இந்த எபேசு பட்டணமானது ஸ்மைர்னா பட்டணத்திற்கு அருகில் இருந்த படியால் அநேக கிறிஸ்த்தவர்கள் யோவானின் போதகங்களை கேட்க்க வருவதுண்டு. இந்த பிரகாரமாக வந்து கிறிஸ்துவை சொந்த இரத்ச்சகராக ஏற்றுக்கொண்டவர் தான் பொலிகார்ப். இவர் யோவானின் சீடர்களில் ஒருவரானார். பின் நாட்களில் யோவான் பொலிகார்பை ஸ்மைர்னா திருச்சபையின் பிஷப்பாக (தலைவராக அல்லது ஆயராக) ஏற்படுத்தினார்.
கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் கிறிஸ்தவர்கள் நிலைத்திருக்க இவர் மிகவும் உழைத்தார். இளம் வயதிலிருந்து முதிர் வயது வரை கிறிஸ்துவ சேவை செய்த்தால் இவரது பெயரை அறியாதவர் அந்த நாட்களில் இல்லை. பாகான் தெய்வங்களை வழி படுபவர்கள் கூட இவரது பேரில் நல்ல மரியாதை வைத்திருந்தனர். ஆனாலும் தங்கள் தங்கள் தெய்வங்கள் கிறிஸ்துவர்களால் நிராகரிக்கப்படுவதை உணர்ந்த இவர்கள் பொலிகார்ப்பின் விசாரிக்கும்படி ரோம ஆட்சியாளர்களிடம் முறையிட்டனர். இதை அறிந்த ஸ்மைர்னா சபை மக்கள் அவரை தலைமரைவாகும்படி படி வற்புறுத்தினர். பொலிகார்ப்போ இறுதி வரை மந்தையை மேய்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 86 வயது நிரம்பிய பொலிகார்பின் மரணம் நெருங்கிவிட்டதை தேவனும் கனவில் வெளிப்படுத்தினார். இவர் மரிப்பதர்க்கு மூன்று நாட்களுக்கு முன்பதாக இவரது தலையணை தீயில் எரிவதை கனவில் கண்டார். அதன்பின்பு தான் தீயால் எரிக்கப்பட்டு இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டும் என்ற தேவ சித்த்த்தை அவர் சபை மக்களுக்கு வெளிப்படுத்தினார். நாம் மரணத்திற்கு அருகாமையில் செல்ல செல்ல நித்திய மேன்மையின் அருகில் செல்கிறோம் என்று சபை மக்களை தைரியபடுத்தினார். இப்படியாக மரணத்திற்கு தப்பிக்க அதிக வழிகள் இருந்தும் தேவசித்தம் தன்னில் நிறவேற தன்னை ஒப்புக்கொடுத்தார்.
கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாக மரித்த புனித பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் காணலாம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
http://www.vvministry.com/sms_email.html --
தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.
0 Response to " புனித பொலிகார்ப் (கி.பி.69-155) – பாகம் 1 "
Post a Comment