விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

தேவன் தேடும் பாத்திரம் (07 June 2014)ஒரு மனிதனுக்கு, இனி வரவிருக்கும் நித்தியம் முழுவதும் பெற்று வாழும் உயர்ந்த குணம் மற்றும் ஒரே சந்தோஷம் என்னவாய் இருக்க முடியும்? தேவன் தம்முடைய வல்லமையையும் திவ்விய குணத்தையும் அவனுக்குள் தங்கியிருக்கும்படி…...... …ஒரு வெற்றுப் பாத்திரமாய் தன்னை தேவனுக்கு அவன் ஒப்படைப்பதில்தான் அடங்கியுள்ளது!

இந்த உலகத்தின் மகிமை, ஒரு மனிதனுடைய அந்தஸ்து, செல்வம், சாதனை.... ஆகியவைகளைக் கொண்டே அளக்கப்படுகிறது. ஆனால், தேவனுடைய மகிமைஎவ்வளவு வித்தியாசமானது என்பதைக் கிறிஸ்து வினிடத்தில் மாத்திரமே நாம் காண்கிறோம்!. இந்த உலகத்தில் பிறந்தவர்களில் இயேசு ஒருவருக்குத்தான், தான் பிறக்கப்போகிற குடும்பத்தைத் தெரிந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஏழ்மையான, செல்வாக்கில்லாத, பிரபல்யமில்லாத ஓர் தச்சுக் குடும்பத்தையே அவர் தெரிந்துகொண்டார்! “நாசேரத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமோ?” (யோ 1:46) என்று ஜனங்கள் கேட்கிற அளவிற்கு நாகரீக முன்னேற்றமில்லாத ஒரு ஊரையே தெரிந்து கொண்டார்! யோசேப்பும் மரியாளும் ஒரு ஆட்டுக்குட்டியைத் தகனபலியாக கொடுக்கமுடியாத அளவிற்கு ஏழ்மையாயும் இருந்தார்கள்! (லூக்கா 2:22-24, லேவி 12:8 உடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்)

இயேசுவுக்கு மாத்திரமே, தான் எவ்வித சூழலில் பிறக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் திறனிருந்தது. அப்படி எந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருந்தபோது கூட, அவரோ ஒரு மாட்டுக்கொட்டிலைத்தான் தெரிந்து கொண்டார்! மனிதனோடு தன்னை முழுமையாக ஒன்றுபடுத்திக் கொண்டார். மனிதர்கள் எந்த இனம், குடும்பம், வாழ்க்கைத் தரம் உடையவர்களாய் இருந்தாலும், அடிப்படையில் யாவரும் சமத்துவம் உள்ளவர்கள் என்பதை இயேசு விசுவாசித்தார்!

எனவேதான், கடைநிலையான சமூகத்திலிருந்து அவர் ஒரு மனித னாக வந்தார். அவர் எல்லாருக்கும் ஊழியம் செய்யும்படி, எல்லாருக்கும் கீழானவராக வந்தார்!! இயேசுகிறிஸ்து தன்னைப் பிதாவுக்கு முன்பாக வெறுமையாக்கிய படியால், பிதா தன் வாழ்க்கையில் கட்டளையிட்ட எதற்கும் சந்தோஷமாய் தன்னை ஒப்புக்கொடுத்து, முழு இருதயத்துடன் கீழ்படியவும் முடிந்தது. முப்பது வருடகாலம், இயேசுகிறிஸ்து தன் பூரணமில்லாத தாய்க்கும் வளர்ப்புத் தந்தைக்கும் கீழ்படிந்து நடந்தார். இந்தகீழ்படிதலே பிதாவின் சித்தமாயிருந்தது! யோசேப்பைவிட மரியாளை விட இயேசுவுக்கு அதிகம் தெரியும். மேலும், அவர் பாவமில்லாதவருமாயிருந்தார்!! ஆனாலும் அவர்களுக்கு அவர் கீழ்படிந்திருந்தார். ஒருவன் தன்னை விட அறிவிலும் ஆவிக்குரிய வாழ்விலும் தாழ்ந்துள்ளவர்களுக்குக் கீழ்படி வது, சுலபமான ஒன்றல்ல! இயேசு வாழ்ந்ததை போன்ற, தேவனுக்கு முன்பாக வெற்றுப்பாத்திரமாய் இருப்பவர்களுக்கே தேவன் தனது நிறைவான ஆசீர்வாதத்தை ஊற்றுகிறார்!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " தேவன் தேடும் பாத்திரம் (07 June 2014) "

Post a Comment