விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

யெகோவா யீரே



கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. ஆதியாகமம் 22:13-14

நோவாவின் பத்தாம் வழிமரபினரான தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவருக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி அவரின் நாட்டிலிருந்தும் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டு தான் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்ல கட்டளையிட்டார். அவ்வாறுசெய்தால் ஆண்டவர் அவரை பெரிய இனமாக்கவும்; அவருக்கு ஆசி வழங்கவும் வாக்களித்தார். ஆண்டவர் ஆபிரகாமுக்குக் கூறியபடியே அவர் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் புறப்பட்டுச் சென்றார். அவருடன் ஆரானின் மகன் லோத்தும் சென்றார். அவரகள் கானான் நாட்டிற்கு சென்ற பொழுது கடும் உணவுப் பஞ்சம் அங்கு ஏற்படவே ஆபிரகாம் எகிப்து நாட்டிற்குச் சென்றார். ஆபிரகாம் தனது மனைவி சாராளை, சகோதரி என்று எகிப்து அரசன் பார்வோனிடம் சொன்னதால், அவன் அவளை மனைவியாக எடுத்துக்கொண்டான். ஆண்டவர் சாராளுக்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார். உண்மை அறிந்த பார்வோன், ஆபிரகாமையும் அவர் மனைவியையும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்து நாட்டைவிட்டு அனுப்பிவிட்டான். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிரகாமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனர். ஆபிரகாம் கானான் நாட்டிற்கு திரும்பி வந்தார். ஆண்டவரின் வாக்கு ஆபிரகாமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து, வானத்து விண்மீன்களைப் போல அவரின் வழிமரபினர் இருப்பர் என்று ஆபிரகாமுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாராள் கர்ப்பவதியாகி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்து அந்த மகனுக்கு 'ஈசாக்கு' என்று பெயரிட்டார்.

சிலகாலத்துக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். கர்த்தர் நமக்கு வேண்டியதை கொடுத்து நமக்கு உதவ வேண்டுமென்றால் நாம் அவரால் சோத்திக்கப் படுத்தல் அவசியம். ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ″நீ அன்பு கூறும் உன் ஒரே பேரான மகன் ஈசாக்கை நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்″ என்றார். சாரளுக்கு பிறந்த ஒரே மகன் ஈசாக்கு. இவரே வாக்குறுதியின் புதல்வன். ஈசாக்கின் மேல் ஆபிரகாம் முகுந்த அன்பு வைத்திருந்தார். தனக்கு முதிர் வயதில் கிடைத்த ஒரே மகனும் தன்னை விட்டு போகப்போகின்றான் என்று ஆபிரகாம் எண்ணாமல் அதிகாலையில் எழுந்து ஈசாக்கோடு கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்திற்கு புறப்பட்டார். வானத்து விண்மீன்களைப் போல அவரின் வழிமரபினர் இருப்பர் என்று வாக்களித்த தேவன் அதை செய்ய வல்லவர் என்ற விசுவாசத்துடன் சென்றார். வழிப்பயணத்தின் பொழுது ஈசாக்கு ஆபிரகாமிடம் எரிபலிக்கான ஆட்டுக் குட்டி எங்கே என்று கேட்கும் பொழுது, “எரிபலிக்கான ஆட்டை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்” என்று விசுவாசத்துடன் பதில் அளித்தார். மலையை அடைந்து அங்கே ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று அவரைத்தடுத்து "நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். ஆபிரகாம் அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். ஆபிரகாமும் ஈசாக்கும் மகிழ்ச்சியோடு வீடு திருபினர்.

பலியை பொருத்தமட்டில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார். அதற்காகத்தான் தன் ஒரே மகனாம் இயேசுவை, உலகின் பாவங்களை சுமந்து தீர்க்கும்படி சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்தார். அன்றைக்கு ஆபிரகாமுக்கு எரிபலியாக ஒரு ஆட்டைக் கொடுத்து ஈசாக்கை காபாற்றிய தேவன், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பதாக இயேசுவை சிலுவையில் பலியாக கொடுத்து நம்மையும் காப்பற்றியுள்ளார். இயேசு நமது பாவம், சாபம் கவலை, கண்ணீர், துக்கம் துயரம் எல்லாவற்றையும் சுமந்து தீர்த்து விட்டார். உங்களுடைய தேவைகளை இயேசு பார்த்துக் கொள்வார். யெகோவா யீரே – கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " யெகோவா யீரே "

Post a Comment