விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இருக்கிறவராக இருக்கிறேன்..குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர் வைப்பது, இன்று நேற்று ஏற்பட்ட பழக்கம் அல்ல. அது, ஆதி காலம் முதற்கொண்டே இருந்து வருகின்றது. சில பெற்றோர்கள் தங்கள் சிறந்து அர்த்தம் உள்ள கவர்ச்சிகரமான பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைப்பதில் ஆர்வம செலுத்துவார்கள். அந்த குழந்தையை அழைக்கும் பொழுதெல்லாம் அதற்கான அர்த்தத்தையும் நினைவு கூறுவார்கள். சரி, எல்லாப் பெயர்களை விடவும் மகத்தான ஒரு பெயரைக் குறித்து இப்போது நாம் சிந்திப்போம். அதுதான் யெகோவா (யாவே) என்ற பெயர். அதன் அர்த்தம் என்ன? அந்தப் பெயரைக் குறித்து மோசே தேவனிடம் விளக்கம் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்: “இருக்கிறவராக இருக்கிறேன்.” (யாத்திராகமம் 3:14). தேவன் தான் படைத்த மனிதனின் தேவைகளை சந்திக்கும் பொழுது ஏழு ஸ்தானங்களை ஏற்கிறார். இதைப் புரிந்துகொள்ள எளிமையான ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். தன் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள ஒரு தாய் ஒவ்வொரு நாளும் பல ஸ்தானங்களை ஏற்க வேண்டியிருக்கலாம். ஒரு நர்ஸாக... சமையல்காரியாக... ஆசிரியையாக... இப்படித் தேவைக்கேற்ப பல ஸ்தானங்களை வகிக்க வேண்டியிருக்கலாம். இதேபோல் தேவனும் பல ஸ்தானங்களை வகிக்கிறார், ஆகவே – யெகோவா or யாவே (Jehovah or Yahweh) - க்கு ஏழு கூட்டு நாமங்கள் உள்ளன. தமிழ் வேதாகமத்தில் “கர்த்தர்” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நாமங்கள் ஒவ்வொன்றும் மனிதனது தேவையை சந்திக்க ஏற்ப்பட்டவர் என அவரை வெளிப்படுத்துகின்றது.

1. யெகோவா யீரே – கர்த்தர் வேண்டியவை கொடுத்து உதவுவார் (ஆதி 22:13-14); 2. யெகோவா ரபா – பரிகாரியாகிய கர்த்தர் (குணமாக்கும் கர்த்தர்) யாத் 15:26 ; 3. யெகோவா நிசி – நமது கொடியாகிய கர்த்தர். யாத் 17:8-15 ; 4. யெகோவா ஷாலோம் – நமது சமாதானத்தின் கர்த்தர். நியாயா 6:23-24 ; 5. யெகோவா ரா-அ – என் மேய்ப்பனாயிருக்கிற கர்த்தர். சங் 23 ; 6. யெகோவா சிட்கேனு – நமது நீதியாயிருக்கிற கர்த்தர். எரே 23:6 ; 7. யெகோவா ஷம்மா – கர்த்தர் பிரசன்னமாயிருக்கின்றார். எசே 48:35 ;

உங்கள் வாழ்க்கையில் சோதனை அல்லது நெருக்கங்கள் ஏற்ப்படும் பொழுது அந்த சூழ்நிலைக்கு ஏற்ப பிரத்தியேக தேவனுடைய நாமத்தை நீங்கள் ஜெபத்தில் உபயோகப்படுத்தலாம். நமது தேவன் நம்முடைய தேவைகளை சந்திப்பதற்க்காகவே பக்தர்களுக்கு தமது ஏழு கூட்டு நாமத்தை வெளிப்படுத்தியுள்ளார். அன்றைக்கு மோசேக்கு “இருக்கிறவராக இருக்கிறேன்” என்று பதிலளித்த தேவன் இன்றைக்கும் நம் மத்தியில் அவர் இருக்கிறவராக இருக்கிறார். நமது ஒவ்வொரு தேவைகளையும் அவர் அறிந்துள்ளார். நிச்சயமாக தேவன் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய மாறுதல்களை செய்வாராக.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " இருக்கிறவராக இருக்கிறேன்.. "

Post a Comment