விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஆள்பலம் அல்ல, ஆண்டவருடைய பலமே



மீதியானியரும் அவர்களுடைய நேசநாடுகளைச் சேர்ந்தவர்களும் இஸ்ரவேல் எல்லைக்குள் மீண்டும் படையெடுத்து வருகையில், ‘கர்த்தர்வின் ஆவி கிதியோன் மீது இறங்குகினார்.’ (நியாயாதிபதிகள் 6:34) மனாசே, ஆசேர், செபுலோன், நப்தலி கோத்திரங்களிலிருந்து மக்களை கிதியோன் ஒன்றுதிரட்டுகிறார் கிதியோன் —நியாயாதிபதிகள் 6:35. இப்பொழுது கிதியோனிடம் பல ஆயிரம் ஆட்கள் கொண்ட ஒரு சேனை இருந்தபோதிலும், கடவுளிடம் ஓர் அடையாளத்தை அவர் கேட்கிறார். போரடிக்கும் களத்தில் போடப்பட்ட ரோமமுடைய தோல் பனியில் நனைந்து நிலமெல்லாம் வறண்டிருந்தால், தன் மூலம் இஸ்ரவேலை கடவுள் காப்பாற்றுவார் என்பதற்கு அது அடையாளமாக இருக்கும். இந்த அற்புதத்தை கர்த்தர் நடப்பிக்கிறார்; ஆனால் இப்பொழுது கிதியோன் மறுபடியும் ஓர் அடையாளத்தைக் கேட்கிறார். அதாவது வறண்ட நிலம் பனியில் நனைந்து ரோமமுடைய தோல் வறண்டு போகும்படி செய்யச் சொல்கிறார். கிதியோன் அளவுக்கு மீறி எச்சரிக்கையுடன் செயல்படுகிறாரா? இல்லை, ஏனென்றால் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் கேட்கிற அடையாளத்தை கர்த்தர் அவருக்குக் கொடுக்கிறார். (நியாயாதிபதிகள் 6:36-40) இன்று இத்தகைய அற்புதங்களை நாம் எதிர்பார்ப்பதில்லை. என்றாலும், கர்த்தர்வின் வழிநடத்துதலையும் உறுதியையும் அவருடைய வார்த்தையிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளலாம்.

கிதியோனுடைய சேனை மிகப் பெரியதாக இருக்கிறதென கடவுள் இப்பொழுது கூறுகிறார். இவ்வளவு பெரிய படையினால் விரோதிகளை வென்றால், 'எங்கள் வலிமையால் மீட்கப்பட்டோம்' என்று இஸ்ராயேலர் வீண் பெருமை கொள்வர்.. ஆனால் வெற்றி வாகை கர்த்தருக்கே சூட்டப்பட வேண்டும். தீர்வு? மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் ஏற்பாட்டின்படி, பயப்படுகிறவர்களைக் கிதியோன் திரும்பிப்போகும்படி சொல்ல வேண்டும். அப்போது மக்களில் இருபத்திரண்டாயிரம் பேர் காலாத் மலையினின்று திரும்பிப் போனார்கள்; பதினாயிரம் பேர் மட்டும் நின்றனர். நியாயாதிபதிகள் 7:2, 3. கடவுளுடைய கண்ணோட்டத்தில், இவர்களும்கூட நிறைய பேர் தான். அப்போது ஆண்டவர் கெதெயோனை நோக்கி, "மக்கள் இன்னும் அதிகமே. அவர்களைத் தண்ணீர் ஓரமாய்க் கொண்டு போ; அவர்களைச் சோதித்துப் பார்ப்போம். உன்னோடு போக நான் குறிப்பவர்கள் போகட்டும்; வேண்டாமென்று நான் குறிப்போர் திரும்பி விடட்டும்" என்றார். வெயில் கொளுத்தும் நேரத்தில் நதியண்டைக்குப் படைவீரர்களை கிதியோன் அழைத்துச் செல்லும்படி கடவுள் செய்ததாக யூத சரித்திராசிரியர் ஜொசிஃபஸ் கூறுகிறார். அப்படியே மக்கள் தண்ணீர் ஓரம் செல்ல, ஆண்டவர் கிதியோனை நோக்கி," நாயைப்போல் நீரை நக்கிக் குடிப்போரை ஒரு பக்கமும், முழங்காலை வளைத்துக் குனிந்து குடிப்போரை மறுபக்கமும் நிறுத்து" என்றார். அவ்வாறு தண்ணீரைக் கையால் அள்ளி நக்கிக் குடித்தவர் முந்நூறு பேர். அதாவது 300 பேர் மாத்திரமே ஒரு கையில் தண்ணீரை அள்ளி குடிக்கையில், விரோதிகள் வருகிறார்களா என எச்சரிக்கையுடன் கவனிக்கிறார்கள். மீதிப்பேரோ எதிரிகளைக் குறித்ததான எச்சரிப்பு இன்றி முழங்காலை வளைத்துக் குனிந்து குடித்தனர். ஆண்டவர் கிதியோனிடம், "நீரை அள்ளி நக்கிக் குடித்த முந்நூறு பேரைக் கொண்டு உங்களை மீட்டு மதியானியரை உன் கையவயப்படுத்துவோம். மற்ற அனைவரும் தத்தம் இடம் போய்ச் சேரட்டும்" என்றார். மீதிப் பேர் தத்தம் பாளையத்திற்குத் திரும்பிப் போகக் கட்டளையிட்டான். பின் கிதியோன் வேண்டிய உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டு, முந்நூறு பேரோடு போருக்குப் புறப்பட்டான் (நியாயாதிபதிகள் 7:4-8). இப்பொழுது, அவர்களுடைய சூழ்நிலையில் உங்களை வைத்துப் பாருங்கள். விரோதிகள் கடற்க்கரை மணலைப் போலிருந்து உங்கள் பக்கத்தில் வெறும் முன்னூறு பேர் மட்டும் இருந்திருந்தால், உங்களுடைய வல்லமையால் அல்ல ஆனால் கர்த்தர்வின் வல்லமையால் மாத்திரமே வெற்றிபெற முடியுமென்ற முடிவுக்கு நீங்கள் வந்திருப்பீர்கள் அல்லவா.

அநேக சபைகளில் இன்றைக்கு ஆட்களின் எண்ணிக்கையை வைத்தே அந்த சபையின் வளர்ச்சியை கணக்கிடும் சூழல் உள்ளது. விசுவாசிகளின் எண்ணிக்கையை விட அவர்களின் தரமே முக்கியமான ஒன்றாகும். தரமான முன்னூறு பேர் மட்டுமே கிதியோனுடன் போருக்கு செல்ல தேவன் அனுமதித்தார். ஆகவே இன்றைக்கு சபைகளுக்கு விழிப்போடு தண்ணீர் பருகிய அந்த முன்னூறு பேரைப் போன்ற விசுவாசிகள் தான் தேவைபடுகின்றார்கள். ஆதி திருச்சபை உருவாக்கிய தரமான விசுவசிகளால் அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதிலும் கிறிஸ்தவம் அதிவேகமாய் உலகமெங்கும் பரவியது. அதே போல தரம் மிக்க கிறிஸ்தவர்களாக நாம் உருமாற வேண்டியது மிகவும் அவசியம் என்பதை கிதியோனின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது. கிதியோனுடைய வரலாறு தொடரும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " ஆள்பலம் அல்ல, ஆண்டவருடைய பலமே "

Post a Comment