விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மக்களுக்காய் மனதுருகிய கிதியோன்



மக்களுக்காய் மனதுருகிய கிதியோன் இஸ்ரயேலருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த கிதியோனுடைய வாழக்கையை (நியாயாதிபதிகள் 6 , 7 ம் அதிகாரத்தில்) நாம் தியானித்து வருகின்றோம். இஸ்ரயேலருடைய மிகப் பெரிய பிரச்சினையே பாகால் வழிபாட்டிற்கு அடிமைப்பட்டுக் கிடப்பதுதான், மீதியானியருடைய ஒடுக்குதல் அல்ல. “கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்து கொள்ளவேண்டாம்” யாத் 34:14 என்று மோசே மூலமாக இஸ்ரயேலருக்கு ஏற்கனவே எச்சரித்திருந்தார் தேவன். ஆனால் கிதியோனுடைய தகப்பன் போவாஸ் தமக்கு சொந்தமான இடத்தில் அந்நிய தெய்வமான பாகாலுக்கு பலிபீடம் கட்டி, தான் தவறு செய்தது மட்டும் அல்லாமல் ஒரு கூட்ட ஜனத்தையும் இடறி விழச்செய்கின்றார். இப்படிப்பட்டவருடைய மகனாகிய கிதியோனை ஏன் கர்த்தர் தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழுவது நியாயமானதே.

தனது தகப்பன் விசுவாசத்தில் இடறி அந்நிய தெய்வத்தை வணங்கியபோதும் கூட கிதியோனுடைய உள்ளத்தில் ஒரு மாபெரும் கேள்வியோடு, எதிரிகளுக்கு பயந்து வாழும் தனது ஜனங்களின் மீது ஒரு பாரத்தோடு காணப்படுகின்றார். ஆகவே தான் கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்று சொன்ன பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? (வச 13) என்ற கேள்வியை கேட்கின்றார். இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்று ஜனங்களின் மேல் உள்ள கரிசனையில் கதறுகின்றார். ஏன் கர்த்தர் கிதியோனை தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு பதில், கிதியோன் மக்கள் மீது கொண்டிருந்த பாரமே. ஆகவே தான் கர்த்தர் அவனை ஒரு அந்நிய தெய்வத்திற்கு பலிபீடம் கட்டியவனுடைய மகன் என்று பாராமல் தமது ஜனத்திற்கு விடுதலை கொடுக்க கூடிய மாவீரனாய்ப் பார்க்கின்றார்.

ஒருவேளை இதை வாசிக்கின்ற நீங்களும் ஒரு காலத்தில் அந்நிய தெய்வங்களை வழிபடுபவராக இருந்திருக்கலாம். அல்லது உங்களுடைய முன்னோர்கள் அறியாமையினால் அப்படி செய்திருக்கலாம். கிதியோனை அன்றைக்கு தேடிச் சென்ற கர்த்தர் நம்மையும் தேடி வந்திருக்கின்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே கிதியோன் மக்கள் மீது கொண்டிருந்த பாரம் இஸ்ரயேல் தேச மக்களையே பெரிய விடுதலைக்கு நேராய் வழிநடத்தியது. நீங்களும் தேச மக்களைக் குறித்து பாரத்தோடு ஜெபித்து இயன்ற அளவு இயேசுவை அறிவித்தால் கர்த்தர் உங்களைக் கொண்டு தேசத்தின் ஜனங்களுக்கு மாபெரும் விடுதலையைக் கட்டளையிடுவார். அன்றைக்கு தயக்கத்தோடு நின்றிருந்த கிதியோனை கர்த்தர் நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். (வச 14). இன்றைக்கும் கர்த்தர் உங்களைப் பார்த்து சொல்லுகின்ற வார்த்தை அதுதான். உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போராடவேண்டும். உங்களோடு இருந்து ஜெயத்தை தருகின்றவர் கர்த்தர் அல்லவா. நம்மை கைவிடுவதர்க்காகவா கர்த்தர் தெரிந்து கொண்டார்? இல்லவே இல்லை. நம்மூலாமாய் தேசத்தின் ஜனங்கள் விடுதலை அடையும் படியாய் நம்மை தெரிந்துகொன்டுள்ளார். பாவத்தை கண்டு அஞ்சி வாழாமால், சோதனைகளை கண்டு துவண்டு போகாமால், கிதியோனை அழைத்த அதே சர்வ வல்ல தேவன் தான் உங்களையும் அழைத்த்துள்ளார் என்று விசுவாச அறிக்கை செய்து வாழ்வில் ஜெயம் பெறுவோம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள் Our dialy messages avilable @ http://www.vvministry.com/

0 Response to " மக்களுக்காய் மனதுருகிய கிதியோன் "

Post a Comment