விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்

அப்படியிருக்கநடுகிறவனாலும் ஒன்றுமில்லைநீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லைவிளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். கொரிந்தியர் 3:7

விவசாயம் இல்லையேல் வாழ்க்கை இல்லை. இவ்வுலகில் எத்தனை அறிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் விவசாயம் மண்ணில் தான் இன்றளவும் செய்யப்பட்டு வருகிறது. தேவன் மனிதனை படைத்ததின் நோக்கம், மனிதன் தேவனை ஆராதிக்கவேண்டும் என்பதற்க்காகத் தான், மனிதனுக்கு தேவையான உணவை பூமியானது வழங்கி வந்தது. விவசாயம் என்ற வார்த்தையே வழக்கில் இல்லை. ஆதாம் தேவனுக்கு கீழ்படியாமல் போனபடியால், “பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்” (ஆதி 3:19)  என்ற சாபத்தை பெற்றுக்கொண்டார். இன்றளவும் மனிதன் தனது வேர்வையை நிலத்தில் சிந்தி உழைத்து தான் விவசாயம் செய்து அதின் பலனை நாம் அனைவரும் உண்டு வருகிறோம். தேவன் மனிதனை விவசாயம் செய்யும்படி பணித்தாலும் அதற்கு தேவையான அணைத்து காரியங்களையும் அவனுக்கு கொடுத்திருகின்றார். அவைகளில் ஒன்று மழை. ஏசாயா 30:23 வசனம் கூறுகின்றது, அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும்நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்”. மற்றொன்று சத்து நிறைந்த மண். மழை எவ்வளவு பெய்தாலும் மண்ணில் உரம் இருந்தால்தான் பயிர்கள் செழித்து வளரும். அப்படி மண்ணை உரமாக மாற்ற கடவுள் படைத்த உயிரினத்தை பற்றி தான் நாம் இப்பொழுது காண இருகின்றோம். தேவன் மனிதனை எவ்வளவாய் நேசிக்கின்றார் என்பதற்கு இந்த உயிரினமும் கூட ஒரு சாட்சியாகும்.

அது எந்த உயிரினம் என்று கேட்கின்றீர்களா? நாம் அனைவரும் நன்கு அறிந்த மண்புழு தான். உலகில் இதுவரை 3000 க்கும் அதிகமான மண் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மண்ணை தின்று கொண்டே பூமியைக் குடைந்து செல்லும். மண்புழு வெளியேற்றும் கழிவானது மண்ணை  வளமுள்ளதாக்கும். மண்புழுவின் உடல் சுமார் 100 முதல் 200 வளையங்களால் ஆனது. மண் புழுவின் உடல் முழுவதும் இறைபைகள் நிறைந்துள்ளன. மண்புழுவை இரண்டாக துடித்து போட்டாலும் அது சாகாது. இது முன்னும் பின்னும் நகர கூடிய ஆற்றல் படைத்தவை. மண் புழுவில் ஆண் பெண் என்ற வேறுபாடில்லை. எல்லா மண் புழுவும் கரு தாங்கும் ஆற்றல் படைத்தது. ஒரே இவை மாலை வேளையில் மற்றும் குளிர்ச்சியான நேரத்தில் மட்டும் வெளியே வரும். 1 ஏக்கர் நிலத்திலுள்ள மண் புழுக்கள் ஒரு ஆண்டில் சுமார் 40 டன்னுக்கு அதிகமான மண்ணை உண்டு கழிவு பொருளாக்கும். ஆகவே தான் மண்புழு உழவர்களின் நண்பன் என்று புகழப்படுகிறது. ஏனெனில்தாவரக்கழிவுகளை உண்டுஅதனால் அதன் உடலிலிருந்து வரும் செரிமானக் கழிவால்அதன் வாழிட மண்ணை வளப்படுத்துகின்றன. மண் புழுவின் முக்கியத்துவத்தை உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் கிறிஸ்துவுக்கு பின் 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சார்லஸ் டார்வின் ஆவார். உலகம் படைக்கப்பட்டு 5800 வருடங்களுக்கும் மேலாக மண் புழுவை பற்றிய மேன்மையை மனிதன் அறியவில்லை. ஆயினும் மண்புழுக்கள் தான் படைக்கப்பட்ட நோக்கமாகிய மண்ணை வளப்படுத்தும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றன. அப்படியிருக்கநடுகிறவனாலும் ஒன்றுமில்லைநீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லைவிளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் என்ற வசனம் எவ்வளவு உண்மை பாருங்கள். தேவன் தமது சொந்த குமாரனாகிய இயேசுவை தந்தருளி உலகை இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்று யோவான் 3:16 ல் வாசிக்கின்றோம். உண்மையில் சொல்லப்போனால் ஒவ்வொரு சிறு உயிரினங்களையும் மனிதனுடைய நன்மைக்காய் படைத்து, மனிதனை தேவன் அதிகமாய் நேசிக்கின்றார் என்பதற்கு மண்புழுவும் கூட நற்சான்று ஆகும்.

இதை வாசிக்கின்ற நீங்கள் பல காரியங்களில் நல்ல விளைச்சலை எதிர் நோக்கி இருக்கலாம். விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் என்று அறிக்கை செய்யுங்கள். மண்புழு நிலத்தினுள் புதைந்து அந்த நிலத்தை வளமாக்குவது போல தேவனும் உங்களுடைய வாழ்க்கை நிலத்தை வளமாக்கி கொண்டிருக்கலாம். விதை முளைக்கும் வரை பொறுமையோடு காத்திருங்கள். அவர் வானத்தின் மழையை கட்டளையிடுகிறவர். உங்கள் வாழ்க்கையிலும் ஏற்ற நேரத்தில் மழையை தருவார். நீங்கள் ஆரம்பித்த காரியம் வாய்க்காது என்று பலர் உங்களுக்கு எதிராய் பேசும் நேரத்தில் கர்தார் உங்கள் காரியங்களை துளிர்விட செய்வார். காத்திருப்போம். பொறுத்திருப்போம். கர்த்தரையே நம்பி இருப்போம். ஆமேன்.

இந்த சிறிய ஜெபத்தை செய்யுங்கள். அன்பின் தெய்வமே இயேசுவேவிளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் என்று வேதத்தில் சொல்லப்பட்டது போல நான்  கையிட்டு செய்யும் காரியங்களில் நல்ல விளைச்சலை கட்டளையிடும். என்னுடைய நிலத்தை வளமாக்கும் வரை பொறுமையோடு காத்திருப்பேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் "

Post a Comment