விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். நீதிமொழிகள் 21:31

உலகெங்கும் குதிரைகள் பல நூற்றாண்டுகளாக மனிதக் கலாசாரத்துடன் ஒட்டி பங்கேற்றுள்ளன. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. இந்த குதிரையனது விழிப்புடன் எப்பொழுதும் இருக்கும். சிறிது நேரம் தான் தூங்கினாலும் நின்று கொண்டு தான் தூங்கும். குதிரைகளால் பகலிலும் இரவிலும் நன்கு பார்க்க முடியும். தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்ணே பெரியது. இவற்றால் இரு கண்களால் 65 பாகை வரையும் ஒற்றைக் கண் பார்வையில் 350 பாகைக்கு மேலும் பார்க்கவியலும். குதிரைகளின் கேட்கும் திறனும் அதிகம். இவற்றால் தமது காது மடல்களை 180 பாகை வரை திருப்ப முடியும். எனவே தலையைத்திருப்பாமலே எந்தப் பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் உணர முடியும். இவற்றின் தொடுதிறனும் நுட்பமானது. கண்காதுமூக்குப் பகுதிகள் உணர்ச்சி மிகுந்தவை. குதிரையின் தொடுதிறனானது தன் உடம்பில் ஒரு சிறு பூச்சி அமர்ந்தால் கூட அறியுமளவுக்கு நுட்பமானது. அதுமட்டுமல்லாமல் தனக்கு முன் நிற்க்கும் எதிரியைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் தன்மேல் ஏறியிருப்பவரின் மேல் முழு நம்பிக்கையையும் வைத்து துணிவுடன் போரில் முன் செல்லும் குணம் படைத்தது.

நாம் யுத்தத்திற்கு ஆயத்தப்படுத்தப்பட்ட குதிரையை போல் அனுதினமும் விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் இவ்வாறு ஆயத்தப்பட்டு இருந்தால், சத்துருவின் கோட்டைகளை முறியடிப்பதற்கு தயாராகவும், நமக்கு முன்பதாக உள்ள மதிலை தாண்டுவதற்கு தயாராகவும் இருந்தால் கர்த்தர் நம்மக்கு ஜெயத்தை தர வல்லவராக இருக்கின்றார். யுத்தம் கர்த்தருடையது. குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை
★☆★ Like Tag Share ☆★☆

0 Response to " "

Post a Comment