விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


எசேக்கியா ராஜா - யெகோவா என் பெலன் (கி.மு.739-687)

29 ஆண்டுகள் யூதாவை அரசாண்டாவர் எசேக்கியா மன்னன்எசேக்கியா என்றால் யெகோவா என் பெலன்’ எனப்பொருள் படும்
தன்னுடைய தகப்பனாகியஆகாஸ்க்குப் பின் தன்னுடைய 25வது வயதில் சிம்மாசனம் ஏறி யூதாவின் அரசர்களுள் இவன் மிகச் சிறந்தவராகவும் ஞானமுள்ளவராகவும் கருதப்பட்டார். தேவனிடத்தில் மரியாதையும் தெய்வபயமும் உடையவன் என்பதை இவனுடையஆட்சிக் காலம் தெரிவிக்கிறது. இந்த  எசேக்கியா தனது 39-ம் வயதிலே மரண வியாதிப்பட்டார். 2.இராஜாக்கள் 20:1ல் நாம் காண்கிறபடி தீர்க்கதரிசியாகிய ஏசாயா அவரிடத்தில் வந்து நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும். நீர் பிழைக்கமாட்டீர். நீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். இது கர்த்தருடைய செய்தியாயிருந்தபடியால் அதை மாற்ற யாராலும் முடியாது என்பதை எசேக்கியா அறிந்திருந்தான். ஜெபம் கர்த்தருடைய எண்ணத்தை மாற்ற இயலுமா? மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒருவனை மீட்க ஜெபத்திற்கு வல்லமையுண்டா? தீராத வியாதிகளைத் தீர்க்க ஜெபம் பயன்படுமா? என்றெல்லாம் மனதில் எசேக்கியா குழப்பினாலும், இத்தகைய தருணங்களில் எங்கு செல்லவேண்டும், யாரிடம் முறையிடவேண்டுமென அறிந்திருந்தான். ஆகவே ஏசாயா மூலம் செய்தியனுப்பிய கடவுளிடமே ஜெபித்தான். ஓர் அவிசுவாசியைப்போல அவன் அச்சமயம் மனம் தளரவில்லை. கட்டளையிட்டவரே அதை மாற்றவும்கூடும் என்று நம்பியதால், ஆ கர்த்தாவே நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று அழுது விண்ணப்பம்பண்ணினான் (2.இராஜா.20:3). மன்னனிடம் கடவுளின் செய்தியைக் கூறிவிட்டுப் பாதி வழி சென்றிருந்த ஏசாயாவிடம் மீண்டும் கர்த்தர் பேசினானர். எசேக்கியாவிடம் போய் அவனுடைய ஜெபம் கேட்கப்பட்டது என்றும் அவனுடைய ஆயுசு நாட்கள் இன்னும் பதினைந்து ஆண்டுகள் நீடிக்கப்பட்டிருக்கிறதென்றும், இன்னும் மூன்று தினங்களில் அவன் ஆலயத்தில் தொழத்தக்க பெலனை அடைந்துவிடுவான் என்று கூறச்சொன்னார். மேலும் அசீரிய மன்னனிடமிருந்து எருசலேமைக் காப்பாற்றுவதாகவும் உறுதிகொடுத்தார் (2.இராஜா.20:4-6).

தான் குணமடைவதைக் குறிக்கும் ஓர் அடையாளத்தை ஏசாயாவிடம் மன்னன் கேட்டான்.
எசேக்கியாவின் தகப்பனாகிய ஆகாஸ் ஒரு சூரிய கடிகாரம் வைத்திருந்தான். அதில் அடையாளமாக பத்து பாகை (Ten Degree or Ten Step) முன்னிட்டுப் போகவேண்டுமோ, அல்லது பத்துப் பாகை பின்னிட்டுத் திருப்பவேண்டுமோ என்று ஏசாயா மன்னனிடம் கேட்டான். எசேக்கியா மறுமொழியாகப் பத்துப் பாகை முன்னிட்டுப்போவது எளிதான செயல். எனவே பத்துப் பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான். அப்படியே எசேக்கியாவின் விருப்பத்தை ஏசாயா கடவுளிடம் தெரிவித்தபோது சூரிய கடிகாரத்தில் பாகைக்குப் பாகை முன் போன சாயை பத்து பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார் கடவுள். சூரிய நிழல் பத்து டிகிரி பின் நோக்கி சென்றது. அதாவது இடமிருந்து வலமகா சுற்றிகொண்டிருக்கும் (Anti Clock Wise) பூமியானது, தீர்க்கதரிசியான ஏசாயாவினால் உண்டான கர்த்தருடைய வார்த்தையை நிரூபிக்கும் பொருட்டு தன்னுடைய சுற்றும் முறையை Anti Clock Wise-லிருந்து Clock Wise-க்கு மாறி பத்து பாகைக்கு நிழல் பின்னிட்டுத் திரும்பும்படி சுற்றியது. பாருங்கள் நம் தேவன் எத்தனை பெரிய தேவன் என்று. காற்றையும் கடலையும் பார்த்து  இரையாதே, அமைதலாயிரு என்று கட்டளையிட்டவரல்லவா நம் இயேசு.

எசேக்கியா கடவுளின் உத்தம ஊழியனாயிருந்து கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்காகச் செயல்ப்பட்டவன். அவன் கண்ணீரோடு ஏறெடுத்த விண்ணப்பத்திற்குக் கடவுள் பெருக்கமாய்ப் பதிலளித்தார் என்பது சாலப் பொருந்தும். தன் விண்ணப்பத்தைக் கேட்ட தேவனுக்கு எசேக்கியா துதி செலுத்தினான். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் ஜெபங்களுக்குப் பதில் தர வாஞ்சையுள்ளவராயிருக்கிறார். இந்த செய்தியை உங்கள் முகபுத்தகத்தில் பகிர்வு செய்யுங்கள். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.
சகோ. டேவிட் தாமோதரன்

Join us @ https://www.facebook.com/VVSongs

Like Comment Tag Share

0 Response to " "

Post a Comment