விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மனிதனை எவ்வளவாய் நேசித்தார் தேவன்


தேவனுடைய படைப்பின் அதிகரமாகிய ஆதியாகம்ம் 1ம் அதிகாரத்தில் தேவன் மனிதனை எவ்வளவாய் நேசித்தார் என்பதை பார்க்க முடிகிறது.

நாலாம் நாளில் தேவன் சமுத்திரத்தில் வாழும் ஜந்துக்களையும், ஆகாயத்தில் வாழ பறவைகளையும் படைத்தார். அதோடல்லாமல், தேவன் நீர் வாழும் ஜந்துக்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். ஆதி 1:22

ஐந்தாம் நாளில் பூமியின்மீது ஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும் உண்டாக்கினார். ஆனால் அவைகள் பெருகக்கடவது என்று தேவன் ஆசீர்வதிக்கவில்லை. மாறாக மனிதனை பூமியில் படைத்து "தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதி 1:28".

மனிதன் மீது தேவன் வைத்த அன்பு தான் எவ்வளவு பெரியது பாருங்கள். இவ்வளவாய் நம்மில் அன்பு கூர்ந்த தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் சொல்லுவோமா. ஆமேன்

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " மனிதனை எவ்வளவாய் நேசித்தார் தேவன் "

Post a Comment