விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நன்மைகளை நமக்களிக்கும் தேவன் (17 June 2014)என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள். எரே 31 : 14

தேவன் தம்முடைய ஜனங்களை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களால் மட்டுமல்லாமல் இவ்வுலகத்தின் சகல ஆசீர்வாதங்களினாலும் நிரப்புகிறார். கர்த்தர் சொல்கிறார், அவர்களைக் குறித்து சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் (எரே 32 : 42) நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்குமுன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும், புகழ்ச்சியாயும், மகிமையாயும் இருக்கும். நான் அவர்களுக்கு அருளிசெய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லா சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள். (எரே 33 : 9)

நிச்சயமாகவே தேவன் தம்முடைய நாமம் தரிக்கப்பட்ட ஜனங்களுக்கு அருளிச்செய்யும் நன்மைகளைக் கண்ட தேவ ஜனங்கள் மட்டுமல்ல புறஜாதிகளும் கண்டு தேவனை மகிமைப்படுத்துவார்கள். எனக்கன்பானவர்களே “நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்”. (எரே 30 : 22) என்ற வாக்குத்தத்தத்தை பிடித்து குடும்பமாக ஜெபியுங்கள். நமக்கு தேவையான பொருளாதார மற்றும் ஆவிக்குரிய நன்மைகள், நமக்கு தேவையான வீடு, வாகனங்கள், பிள்ளைகளின் படிப்பு, மேற்படி, திருமண காரியங்கள், குழந்தை பாக்கியம், ஊழியப்பாதையில் ஆத்துமாக்கள், ஊழியத்தில் வளர்ச்சி, மட்டுமல்லாமல் நாம் கையிட்டு செய்யும் தொழில், நமக்கு தேவன் தந்த வேலைகளில் உயர்வை கட்டளையிட்டு நம்மை சகல நன்மைகளினால் நிரப்புவார்.

தேசத்தில் தேவஜனங்கள் உயர்த்தப்பட்டு ஆசீர்வாதமாக அமைவார்கள். இதை வாசிக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளே, தேவன் இப்படிப்பட்ட நன்மைகளால் தம் ஜனங்களை நிரப்ப ஆயத்தமாக இருக்கிறார். நாம் அவரை தேவனாக ஏற்று அவர் ஜனங்களாய் வாழ, ஒப்புக்கொடுப்போம்.

ஜெபம்: என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று சொல்லிய படியே என்னை திருப்தியாக்கி நடத்திவரும் அன்பு தகப்பனாம் இயேசுவே.. நான் கையிட்டு செய்யும் காரியங்களை ஆசீர்வதியும். நான் எதிர்பார்த்திருக்கும் நல்ல காரியங்களை எனக்கு தந்தருளும். எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்ற வசனத்தின் படியாக எனது வாழ்வினை ஆசீர்வத்திதருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " நன்மைகளை நமக்களிக்கும் தேவன் (17 June 2014) "

Post a Comment