விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வாயினாலே அறிக்கை செய்தல் (03 June 2014)நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். ரோமர் 10:10

நம் வாயின் அறிக்கை அத்தனையாய் முக்கியமானதாகும். தேவனுடைய வார்த்தையை அறிக்கை செய்வதென்பது, தேவன் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லுவதாகும்! இவ்வாறு சொல்லுவது நம்மில் யாருக்கும் கஷ்டமாக இருக்குமோ?! ஆம், நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு "ஆமென்" (அப்படியே ஆகக்கடவது!) எனக் கூறுவது மத்திரமே தேவையாயிருக்கிறது.

வேதவாக்கியங்களில் "விசுவாசித்தான்" என்ற பதம் முதன் முதலாக ஆதியாகமம் 15-ம் அதிகாரத்தில்தான் உபயோகிக்கப்படுத்தப் பட்டுள்ளது. அந்த அதிகாரத்தில், பிள்ளை இல்லாமலிருந்த ஆபிராமை நோக்கி தேவன், "வானத்து நட்சத்திரங்களைப்போல உனக்குச் சந்ததி உண்டாயிருக்கும்!" எனக் கூறினார். அதற்கு "ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான்" என ஆதியாகமம் 15:6 பதிலுரைக்கிறது. "விசுவாசித்தான்" என்று இங்கு கூறப்பட்டிருக்கும் வார்த்தைக்கு எபிரெய பாஷையில் ‘ஆமென்’ என்ற பதமே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆமென்’ என்பதற்கு "அப்படியே ஆகக்கடவது" என்பதே பொருளாகும். எனவே, இங்கு தேவன் உரைத்த வாக்குதத்ததிற்கு ஆபிராம் செய்ததெல்லாம் "ஆமென்" என கூறியது மாத்திரமே! இங்ஙனம், தேவனிடம் "ஆமென்!" எனக் கூறுவதே உண்மையான விசுவாசமாகும்!!

ஆபிராம், இதற்குப் பிறகு "திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்" என அர்த்தங்கொண்ட "ஆபிரகாம்" என்ற புதிய பெயரை தேவனிடமிருந்து இப்போது பெற்றுவிட்டான்! இருப்பினும் அவனுடைய மனைவியாகிய சாராளோ இன்னமும் பிள்ளையற்றவளாகவே இருந்தாள். ஆபிரகாமோ இதினிமித்தம் சிறிதுகூட கிலேசம் கொள்ளவேயில்லை. அவன் இன்னமும் தன்னை "திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்" என்றே அழைத்துக்கொண்டான். ஏன் தெரியும? தேவன் அவனுக்கு அப்படிச் சொல்லியிருந்தார்! அதை ஆபிரகாம் அப்படியே விசுவாசித்தான்!! விசுவாசத்தை அறிக்கை செய்வதென்பதின் பொருள் இதுதான்: "தேவன் உரைத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதை நம் கண்கள் காணாதிருக்கும்போதே "தேவன் சொன்னதை" அப்படியே அறிக்கை செய்வதுதான் உண்மையான விசுவாச அறிக்கையாகும்". இதைத்தான் நாமும் செய்யும்படி தேவன் கூறுகிறார். . . அவர் தன் வார்த்தையில் கூறியதை அப்படியே மறுபடியும் அறிக்கைசெய்து கூறவேண்டும்! அவ்வளவுதான்!!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும். செய்தியையும் வேத வசனத்தை உங்கள்மொபைலுக்குSMSமூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்டLINK-ல் உள்ள படிவத்தைநிரப்பவும்.

0 Response to " வாயினாலே அறிக்கை செய்தல் (03 June 2014) "

Post a Comment