விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இயேசுவின் படகில் ஏறுவோம் வாங்க

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.யோவான் 14.3

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இயேசுநாதர் கூறிய வார்த்தைகள் இவை. ஒரு சிலர் ஆச்சரியப்படலாம் இதோ சீக்கிரம் வருகிறேன் என்று சொன்னவர் ஏன் இன்னும் வரவில்லை என்று. ஒருவராகிலும் கைவிடப்படுவது அவருக்கு விருப்பமில்லை. வேத வசனம் கூறுகின்றது

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.II பேதுரு 3:9

கிறிஸ்த்து வர தாமதிக்கிறார் என்று சொல்லி இரட்சிப்பின் அனுபதிற்க்குள் வர தாமதம் செய்யாதீர்கள். இன்றே பாவ உலக வாழ்க்கையை விட்டு மனம் திரும்பி இரட்சிப்பின் படகில் ஏறிக்கொள்ளுங்கள். நிச்சயமாக கிறிஸ்த்துவோடு கூட பரலோகம் பயணம் செல்லலாம். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " இயேசுவின் படகில் ஏறுவோம் வாங்க "

Post a Comment