விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு

எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். நீதிமொழிகள் 11:25

ஒரு ஊரில் முதியவர் ஒருவர் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். அவர் காலையில் எழுந்தவுடன் கிணற்று நீரை எடுத்து தனது வீட்டின் முன்பதாக தெளிப்ப்பார். கிணற்று நீர் தீரும் வரை அருகில் இருக்கும் வீடுகளுக்கு முன்பதகாவும் தெளிப்பார். காலை வேளையில்அந்த வழியாய் செல்லும் மக்கள் குளிர்ந்த நீர் தெளிக்க்கப்பட்ட பாதையிலே மகிழ்ச்சியுடன் நடந்து செல்வார்கள். அந்த முதியவர் அங்குள்ள மரங்களுக்கும் அந்த கிணற்று நீரை இறைத்து ஊற்றுவார்.மதிய வேளையிலே அநேகர் அங்குள்ள மரங்களின் நிழல்தனில் இளைப்பாறுவார்கள். முதியவர் இவ்வாறு கிணற்று நீரை பயன்படுத்துவதால், அவருடைய வீட்டு கிணற்றில் பழைய நீரை பார்க்கவே முடியாது. ஏனென்றால் கிணற்றில் தண்ணீர் இறைக்க இறைக்க புதிய தண்ணீரானது ஊறிக்கொண்டே இருக்கும்.   இதை அந்தபகுதி மக்கள் நன்கு அறிந்திருந்ததினால், அநேகர் அவருடைய வீட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து செல்வார்கள். ஒரு சிலர் தங்கள் வீட்டில் கிணறு இருந்தாலும் குடிப்பதற்கு அவருடைய கிணற்று நீரையே பயன்படுத்துவார்கள். அந்த முதியவரின் நற்செயளுக்காக யாரும் அவரைப் பாராடியதே இல்லை. ஆயினும் அந்த முதியவர் ஒவ்வொரு நாளும் சோர்வடையாமல் கிணற்று நீரை அந்த மக்கள் நண்மைபெரும் வகையில் பயன்படுத்தி வந்தார்.அவருடைய வீட்டின் அருகில் வாழ்ந்த சிறுவன் இதை வெகுநாளாய் கவனித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அந்த முதியவரிடம் சென்று ஏன் இப்படியாய் கிணற்று நீரையெல்லாம் எடுத்து மக்கள் செல்லும் வழியில் தெளிகின்றீர்கள். பின்னர் மரங்களுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றுகுறீர்கள்? மேலும் அநேகர் உங்கள் வீட்டு கிணற்று நீரை எடுத்து செல்கிறார்கள். யாரும் நீங்கள் செய்யும் இந்த நன்மையான காரியங்களை கண்டுகொள்ளாத பொழுது எப்படி உங்களால் உற்சாகமாய் செயகின்றீர்கள்? என்று கேட்டான்.

அப்பொழுது அந்த நீரை இறைத்து அநேகருக்கு பயன்படுத்துவதினால் அவருக்கு ஏற்ப்படும் நன்மைகளை விவரிக்க தொடங்கினார். அதிகாலையில் அந்த நீரை இறைப்பதினால் சுத்தமான காற்றை அதிகமாய் சுவாசித்து, முதிர் வயதிலும் நோய் நொடியில்லாமல் வாழுகின்றேன். அதை எடுத்து அந்த பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு முன் தெளிப்பதினால், காற்றில் தூசி கிளம்புவதில்லை. ஆகவே சுகாதாரமான வாழ்க்கையை என்னால் வாழ முடிகிறது. அங்கு செழித்து வளர்ந்துள்ள மரங்கள் மனிதர்கள் சுவாசித்து வெளிவிடும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை முகர்ந்து நமக்கு தேவையான சுத்தம்மான ஆக்சிஜனை வெளிடுவதால் நான் பயன்பெறுவதோடு அநேகரும் அதினால் பயன்பெறுகின்றார்கள். மேலும் கிணற்று நீரை நான் அனுதினமும் அநேகருக்கு பயன்படுத்துவதால், அதில் சுத்தமான புதிய நீர் ஊருகின்றது. அந்த நீரை குடித்து, அதிலே சமைத்து சுகபலத்துடன் வாழ்ந்து வருகிறேன் என்று கூறினார். அதுவரை அந்த முதியவரின் கிணற்றினால் அநேக மக்கள் பயன்பெருவதாக நினைத்திருந்தான் அந்த சிறுவன். ஆனால் அந்த கிணற்றின் நீரை பிறருக்கு பயன்படுத்துவதால் அந்த முதியவரே பிறரைக் காட்டிலும் அதிகமான நன்மைகளை பெறுகின்றார் எனபதை அந்த நாளில் உணர்ந்து கொண்டான்.

இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்து அங்கே இருந்த கிணற்றினருகே உட்கார்ந்தார். அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள்இயேசு அவளை நோக்கிதாகத்துக்கு தண்ணீர் தருமாறு கேட்டார். அபொழுது தயக்கத்தோடு நின்ற அவளிடம்இயேசு பிரதியுத்தரமாக,ஜீவ தண்ணீர் நானே. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் (யோவான் 4:1-14)என்ற மேன்மையான உண்மையை கூறினார்.

நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்என்று ஏசாயா 12:3-ல் சொல்லப்பட்டது போல இயேசுவை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் அவர் ஜீவ ஊற்றாய் பிறகின்றார். அந்த ஜீவ இரட்சிப்பின் ஜீவ ஊற்றிலிருந்து தண்ணீர் மொண்டு அதினால் பல நன்மைகளை ஆசீர்வாதங்களை பெறுகின்றோம். இயேசுவின் அன்பை அறியாமல் வறண்ட நிலையில் வாழும் அநேகருக்கு, அந்த ஜீவ ஊற்ரின் தண்ணீரை கொடுப்பது இரட்சிக்கப்ப்டட ஒவ்வொருவரின் மேலே விழுந்த கடமையாய் இருக்கின்றது.எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்”. “வாரியிறைத்தும்விருத்தியடைவாரும்உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு” “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்என்று வேத வசனம் தெளிவாய் கூறுகின்றதுஅநேக ஜீவதண்ணீரை தங்களுடைய குடும்பத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலரே ஜீவதண்ணீரை அநேகர் பயன்பெரும் வகையில் உபயோகின்றார்கள். அதினால் அவர்களுக்கு நண்மை ஏற்படுவதோடு அல்லாமல், அநேகருக்கும் அது ஆசீர்வாதமானதாக மாறுகின்றது. ஏழைகளுக்கு இயேசுவின் அன்பை கூறும்பொழுது அவர்களுக்கு ஒரு சில அடிப்படை உதவிகளையும் செய்ய வேண்டியது உள்ளது. இயேசுவின் அன்பை அறிவித்து, ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை வாரியிறைக்கும் பொழுது ஜீவ ஊற்று அதிகமதிகமாய் பெருகி நீங்கள் விருத்தியடைவது நிச்சயம்.

ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் இயேசுவே, ஜீவஊற்றாய் எனது வாழ்கையில் தோன்றியவரே. உமது அன்பை அநேகருக்கு சொல்லவும், நீர் எனக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களில் ஏழைகளுக்கு உதவி செய்யவும் கிருபை தாரும். ஜீவஊற்று என்னில் அதிகமாய் ஊரட்டும். ஜீவதண்ணீரினால் அநேக மக்களுடைய தாகம் தீர்க்கப்படட்டும். எனது வாழ்க்கையை உமது கரங்களில் அர்ப்பணிக்கிறேன் நல்ல பிதாவே. ஆமென்

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு "

Post a Comment