விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கர்த்தர் காப்பாற்றுகிறார்

பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார். சங்கீதம் 146:9

ஒரு பிரசங்கியாரை வெகுதூரத்திலிருந்து சில ஆட்கள் சந்திக்க வந்தனர். கிறிஸ்துவைப் பற்றி அறிய ஒரு மனிதன் மிகவும் ஆவலோடு உள்ளார். ஆனால் அவருக்கு சுகம் இல்லாத படியால் அவரால் இங்கு வர இயலவில்லை. ஆகவே நீங்கள் தாமதியாமல் சுவிசேஷம் அறிவிக்க அங்கு செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டனர். அந்த மனிதனுடைய ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் நடுவில் ஒரு காட்டை கடந்து செல்ல வேண்டும். இரவு பிரயாணத்தின் மோசங்களையும்கொடிய விலங்குகளின் நடமாட்டங்களையும் குறித்து பிரசங்கியாரின் உறவினர்கள் கூறி அவரை தடுத்தனர்.

பிரசங்கியாருக்கு அச்சம் உண்டான போதிலும் ஆண்டவர் தம்மோடு இருக்கின்றார் என விசுவாசித்து, உறவினர்களின் தடைகளை மீறி அந்த மனிதனை சந்திக்க, குதிரையில் புறப்பட்டு சென்றார். வனப் பகுதியை அடைந்தவுடன் மிருகங்களின் சத்தம் அவரது செவிகளில் கேட்க்க தொடங்கியது. பிரசங்கியார் சற்று திகிலுடன் ஜெபித்துக் கொண்டே காட்டினுள் சென்றார். நான்கு கள்வர்கள் அவரைத் தாக்கும் படியாய் பாய்ந்து வந்தார்கள். ஒருவன் பிரசங்கியாரை வெட்டும் படியாய் கத்தியை ஒங்கினான். ஆனால் தடுமாறி கீழே விழுந்து விட்டான். பின்னர் அவனும் அவனோடு வந்த கள்வர்களும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். கர்த்தர் தம்மை பாதுகாப்பதை உணர்ந்த பிரசங்கியார், அவரைத் துதிதுகொண்டே சென்று நோயாளியின் வீட்டை அடைந்தார். மரணதருவாயில் இருந்த நோயாளி இயேசு கிறிஸ்துவைப் பற்றி மிகுந்த ஆவலுடன் பிரசங்கியாரிடம் கேட்டறிந்தான். பின்பு இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான். பிரசங்கியார் மகிழ்ச்சியோடு தமது ஊழியத்தை முடித்து திரும்பி சென்றார்.

காட்டுப் பகுதிக்குள் அவர் சென்ற பொழுது அவரைப்பார்த்து பயந்து ஓடிய கள்வர்களில் மூன்று கள்வர்கள் மீண்டும் அவர் முன்வந்தார்கள். இப்பொழுது அவர்களது கைகளில் ஆயுதங்கள் இல்லை. அவர்கள் பிரசங்கியாரிடம், நேற்றைக்கு உம்மோடு வந்த மனிதர்கள் யார் என்று கேட்டார்கள். மேலும் அவர்கள் மனிதர்களைப் போல இல்லை. நேற்று எனது நண்பன் உங்களை வெட்ட கத்தியை ஓங்குகையில் ஒரு பெரிய ஒளி உமது நண்பர் முகத்திலிருந்து வெளிப்பட்டது. அதை பார்த்த எனது நண்பன் பயந்து கீழே விழுந்து விட்டான். பயம் தெளியாத அவன் இன்று எங்களோடு வெளியே வர மறுத்து விட்டான் என்றார்கள். இதைக் கேட்ட பிரசங்கியார் கடவுள் தமது தூதர்களை அனுப்பி தம்மைப் பாதுகாதுள்ளார் என்பதை உணர்ந்து இயேசுவுக்கு நன்றி கூறினார். பின்னர் அந்த கள்வர்களுக்கும் இயேசுவின் அன்பை எடுத்துரைத்தார். அந்த கள்வர்கள் இயேசுவைத் தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். தங்களுடைய திருட்டு தொழிலை விட்டு விட்டு கிறிஸ்துவில் தங்களுடைய புது வாழ்வினை தொடங்கினார்கள். பின்னாட்களில் கிறிஸ்துவின் அன்பை பலருக்கும் அறிவிக்கும் சுவிஷேசகர்ளாக மாறினார்.

எத்தனை அதிசயம் பாருங்கள். இதை வாசிக்கின்ற உங்களையும் என்னையும் கூட கர்த்தர் இப்படியாய் பாதுகாத்து வந்துள்ளார். இனிமேலும் காத்திட வல்லவராய் இருக்கின்றார். வேத வசனம் சொல்கின்றது இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். - (சங்கீதம் 121:4-7). கர்த்தர் நமக்கு நிழலாயிருக்கிறார். அவர் நம்மோடு இருக்கிறார். நம்மை ஒருநாளும் திக்கற்றவர்கலாக விடுவதில்லை என்று வாக்குரைத்துள்ளார். வாழ்வின் எந்த வித நிலையிலும் இயேசு நம்மோடு உள்ளார் என்பதை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். அவர் திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் ஆதரிகின்றார். தமது தயவினாலே அவர்களைப் பாராமரிகின்றார். கர்த்தர் தமது ஊழியக்கார்களின் சுகத்தையே விருபுகின்றார். நிச்சயமாக நம்மை பாதுகாத்து பரலோகத்திற்கு நேராய் வழி நடத்துவார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " கர்த்தர் காப்பாற்றுகிறார் "

Post a Comment