விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஜேம்ஸ் ஹானிங்டன் (1847-1885)

ஜேம்ஸ் ஹானிங்டன் (JAMES HANNINGTON) இங்கிலாந்தில் சுசெக்ஸ் (SUSSEX) என்னும் பகுதியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். படிப்பை முடித்து ஒரு வங்கியில் பணியாளராக இருந்தார். பின்னர் இறையியலைக் கற்றுகொள்வதில் ஆர்வமுள்ளவராக இறையியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் நற்செய்தி ஊழியத்தில் தன்னை முற்றிலுமாக இணைத்துக் கொண்டார். 1875 ல் ஹங்ட்பையர் என்ற அவரது சொந்த ஊரிலே தூய ஜார்ஜ் ஆலயத்தின் பொறுப்பாளராக ஊழியம் செய்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டின் சர்ச் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்து, அதின்மூலம் ஆப்ரிக்காவிலுள்ள ஜாம்பியா நாட்டிற்கு மிஷனரியாக சென்றார். அந்த நாட்டை ஐரோப்பியர்கள் அடிமை வியாபார மைய்யமாக வைத்திருந்தனர். மேலும் அந்தநாடு மிகக் கொடூரமும், பாலியல் நோய்கள், மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களின் பிறப்பிடமாகவும் இருந்தது. அங்கு ஊழியம் செய்பவர்களுக்கு பல இன்னல்கள் இருந்ததன. இந்த நிலையில் ஜாம்பியா சென்ற ஜேம்ஸ் ஹானிங்டன் வியாதிப்பட்டதால் இங்கிலாந்து திரும்பும் நிலையாயிற்று.

1883 ம் ஆண்டு ஜேம்ஸ் ஹானிங்டன், கேன்டர்பரி ஆர்ச் பிஷப்பாக (ARCH BISHOP OF CANTERBURY) உயர்த்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து உகண்டா தேசத்தின் மிஷனரி பணித்தளதிற்க்கு பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். அங்கு சென்று விக்டோரியா நயன்சா என்ற புகழ் பெற்ற அருவிக்கு அருகாமையில் புதிய பணித்தளத்தை தொடங்கினார். உள்ளூர்வாசிகளுக்கு பள்ளிகளை நிறுவினார். மக்கள் மத்தியில் ஜேம்ஸ் ஹானிங்டனின் செல்வாக்கு உயர ஆரம்பித்தது. கிறிஸ்துவின் நற்செய்தியும் பரவ ஆரம்பித்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் மக்கள் பெருகினார்கள். அவர் அணைத்து மக்கள் மீது பாரபட்சமின்றி அன்பைக் காட்டினார். சிறியோர் முதல் பெரியோர் வரை அவரை நேசித்தார்கள். இவரது வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிற்றரசன் வாங்கா (MWANCA) பல பொய்யான குற்றங்களை வனைந்து அவரை சிறையில் அடைத்தான். சிறையில் அடைப்பதற்கு அந்த சிற்றரசன் தெரிந்து கொண்ட இடம் ஒரு அசுத்தமான குடிசை. அவ்விடம் விஷப் பூசிகளினாலும், எலிகளாலும் நிறைந்து இருந்தது. பேராயர் ஒரு வாரத்திற்குள்ளாகவே குடிசையிலே வியாதிப்பட்டு இறந்து விடுவார் என அச்சிற்றரசன் எண்ணினான். ஆனால் பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனோ மரிக்கவில்லை. இந்த அற்புதத்தை பொறுத்துக் கொள்ள இயலாத அச்சிற்றரசன் அவரை வெளியேற்றி கொலை செய்ய உத்தரவிட்டான்.

1885 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ம் நாள், பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனை பொது மேடையில் நிறுத்தி ஈட்டியால் குத்தி அவரைக் கொன்றனர். அவர் குத்தப்படும் போது “உகாண்டாவில் கிறிஸ்தவம் பிரவேசிக்கும் வழியை என் இரத்தத்தால் விலைக்கு வாங்கி விட்டேன். கிறிஸ்தவம் இனி எளிதில் உகாண்டா தேசத்தில் வளரும் என்று சிற்றரசன் வாங்காவிற்க்கு சொல்லுங்கள்” என்று தனது மரண வேளையில் சொன்னார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ஆங்கலிக்கன் திருச்சபைகளை வெகுவாய் உலுக்கிற்று. அவருடைய மரணத்தை தொடர்ந்து இங்கிலாந்தில் மிஷனரி வாஞ்சையுள்ள அநேகர் எழுந்தார்கள். அவர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உகாண்டாவிற்கு செல்ல மனப்பூர்வமாக முன் வந்தார்கள். அவர்களிலும் அநேகர் ஜேம்ஸ் ஹானிங்டன் போலவே இரத்த சாட்சியாக மரித்தார்கள். ஜேம்ஸ் ஹானிங்டன் தரிசனத்தில் கண்டது போலவே இன்று உகாண்டாவின் 90% மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருகின்றார்கள். மிஷனரிகள் புதைக்கபடுவதில்லை, விதைக்கபடுகின்றார்கள் என்ற கூற்று எவ்வளவு பெரிய உண்மை. உகாண்டாவில் மிஷனரிகள் சிந்திய இரத்தம் வீன்போகவிலை. ஜேம்ஸ் ஹானிங்டனின் தரிசனமும் விருதாய் மாறிவிடவில்லை. இருண்ட கண்டத்தினுள் மெய்யான ஒளியாம் இயேசு இன்றளவும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். இதை வாசிக்கின்ற நீங்கள் இயேசுவுக்காய் பிரகாசிக்க ஆயத்தமாய் இருக்கின்றீர்களா? சிந்திப்போம் உடனடியாய், செயல்படுவோம் இயேசுவிக்காய்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " ஜேம்ஸ் ஹானிங்டன் (1847-1885) "

Post a Comment