விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஃபென்னி க்ரொஸ்பி (1820-1915)


ஜெபத்தை கேட்க்கும் எங்கள் தேவாஎன்ற பழைய பாடலை பாடாத கேட்டிராத கிறிஸ்த்தவர்கள் இருக்க முடியாது. அந்த பாடல் “Blessed assurance Jesus is mine” என்ற ஆங்கில பாடலில் இருந்து தமிழாக்கம் செய்யப்படுள்ளது. ஆங்கிலத்தில் அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரை பற்றி நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். 8000 திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள அவர் கண்பார்வையற்ற ஒரு பிரபல அமெரிக்க பெண் ஆவார். அந்த பாடலாசிரியையின் பெயர் ஃபென்னி க்ரொஸ்பி. 1820 ம் வருடம் மார்ச் மாதம் 24 தேதி, நியூ யார்க் அருகே ப்ருஸ்டர் என்ற இடத்தில பிறந்தார். க்ரொஸ்பி பிறந்த ஆறு வாரங்களில் குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவர் ஒருவரது தவறான பராமரிப்பினால் பிறந்த 6 வாரங்களிலேயே தனது கண் பார்வையை இழந்ததுடன், ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே தன் தகப்பனையும் இழந்தாள். தன் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்த வந்த ஃபென்னி க்ரொஸ்பி சிறு வயதிலிருந்து நான்கு சுவிஷேசப் புத்தகங்களையும், பழைய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களின் பெரும்பாலான பகுதிகளையும் மனனம் செய்திருந்தாள்.

14
வது வயதில் நியூயோர்க் நகரிலுள்ள குருடர் பாடசாலையில் பயில தொடங்கிய ஃபென்னி க்ரொஸ்பி அங்கு 8 வருடங்களாக மாணவியாகவும் பின்னர் 15 வருடங்களாக ஆசிரியையாகவும் இருந்தாள். இவள் தனது 8 வது வயதில் எழுதிய கவிதை என்னால் பார்க்க முடியாவிட்டாலும் நான் எவ்வளவு சந்தோஷமானவள்என்று ஆரம்பமாகியது. ஃபென்னி க்ரொஸ்பி, தனது 30 வயது வரை பார்யற்றவர்களுக்காக சமூக சேவை செய்துவந்தார். பல்வேறு சலுகைகளை அரசிடம் இருந்து பெறுவதிலும் பார்வையற்றவர்களுக்காக போராடுவதிலும் முனைப்புடன் செயல்பட்டார். பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார். 1850 –ல் Methodist Episcopal Church –ல் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் இயேசுகிறிஸ்த்துவால் தொடப்பட்டு தனது வாழ்க்கையை கிறிஸ்துவுக்காய் அர்ப்பணித்தார்.

1858-
ம் வருடம் அலெக்ஸாண்டர் வான் அல்ஸ்டைன்என்ற பார்வையற்றவரை திருமணம் செய்தார் ஃபென்னி க்ரொஸ்பி. 1859-ம் வருடம் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பிறந்து ஒரு நாட்களிலே இறந்து போனது. மனமுடைந்த ஃபென்னி க்ரொஸ்பி இறக்கும் வரை ஒரு சோக நிகழ்வாகவே கருதினார். ஆயினும் தனக்கு கர்த்தர் கொடுத்திருந்த பாடல் எழுத்தும் தாளந்தை எந்த சூழ் நிலையிலும் அவர் நிறுத்தி விடவில்லை. அநேக பாடல் கச்சேரிகளை நடத்தி அதன் மூலம் வந்த வருவாயில் ஏழைகளுக்கு உதவி வந்தனர். அதன் பின்னர் அலெக்ஸாண்டரை பிரிந்த ஃபென்னி க்ரொஸ்பி கிறிஸ்துவிக்காய் தொடர்ந்து பாடல்களை எழுதி ஊழியமும் செய்து வந்தார்கள்.

ஃபென்னி க்ரொஸ்பி, முழங்காற்படியிட்டு ஜெபிக்காமல் எந்த ஒரு பாடலையும் எழுதத் துணிவதில்லை. ஒரு தடவை இசையமைப்பாளரால் அனுப்பப்பட்டிருந்த ராகத்திற்கு ஏற்றபடி உடனடியாக ஒரு பாடலை எழுத வேண்டியிருந்தது. ஃபென்னி க்ரொஸ்பி எவ்வளவு முயன்றும் அவளால் குறிப்பிட்ட ராகத்திற்கு ஏற்ற பாடலை எழுத முடியாமல் போய்விட்டது. அப்போதுதான் தான் ஜெபிக்காமல் பாடலை எழுதத் தொடங்கியதை உணர்ந்த ஃபென்னி க்ரொஸ்பி ஜெபித்துவிட்டு மறுபடியும் பாடலை எழுதத் தொடங்கினாள். அன்று அவள் எழுதிய பாடல் இயேசுவே என்னை சிலுவையினருகில் வைத்துக் கொள்ளும்“. (Jesus keep me near the cross) என ஆரம்பிக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாகும். 1874 இல் ஃபென்னி க்ரொஸ்பி ஒரு குறிப்பிட்ட காரியத்திற்குத் தேவையான பணத்தில் 5 டொலர்கள் குறைவாய் இருந்தது, எவரிடமும் போய்க் கேட்பதற்கும் நேரம் இருக்கவில்லை. உடனே அவள் பணத்திற்காக ஜெபித்துவிட்டு, தனது அடுத்த பாடலை எழுத் தொடங்கினாள். அச்சமயம் அவள் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. 

வாசற்கவைத் திறந்தபோது தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராகஎனும் வாழ்த்துக்களுடன் ஒரு மனிதன் அவளது கைகை குழுக்கிவிட்டுச் சென்றான். அம்மனிதன் அவளது கையை குலுக்கும்போது அவளது கையில் 5 டொலர்கள் வைத்திருந்தான். உடனே முழங்கால்படியிட்டுத் தனக்குத் தேவையான 5 டொலர்கள் கிடைத்ததற்காக நன்றி செலுத்தி ஜெபித்த ஃபென்னி க்ரொஸ்பி, தனது அடுத்த பாடலை எழுதத் தொடங்கினாள். அதுவும் உலகப் பிரசித்தப் பெற்ற ஒரு பாடலாயிற்று. சகல வழிகளிலும் என் இரட்சகர் என்னை நடத்துகிறார்என ஆரம்பமாகும் பாடலே அதுவாகும். (All the way my saviour leads me)

ஒரு தடவை கிறிஸ்தவப் பிரசங்கி ஒருவர் ஃபென்னி க்ரொஸ்பியிடம் தேவன் உனக்குப் பல வரங்களைக் கொடுத்திருந்தாலும் பார்வையைக் கொடுக்காமலிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு காரியமேஎன்றார். ஃபென்னி க்ரொஸ்பியோ உடனடியாக நான் பிறந்த உடன் தேவனிடம் ஒரு கோண்டுகோள் விடுக்கக்கூடியதாயிருந்தால், நான் பிறவிக் குருடியாகவே இருக்க விரும்புகிறேன் என்றே கேட்டிருப்பேன்என்றாள். ஃபென்னி க்ரொஸ்பியின் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டு ஏன்?” என்று கேட்ட பிரசங்கியிடம் அவள் நான் பரலோகத்திற்குச் செல்லும்போது என் இரட்சகர் இயேசுவைப் பார்ப்பதே என்னை முதலில் மகிழ்விக்கும் காட்சியாக இருக்கும்என்று பதிலளித்தாள்.

சரீரத்தில் ஊனம் இருந்து கண் தெரியாமல் இருந்தாலும், இருதயத்தில் கிறிஸ்த்துவுக்காய் சாதிக்கும் வைராக்கியம் பற்றி எரிந்து கொண்டே இருந்தது. ஃபென்னி க்ரொஸ்பி தனது அறுபது வயதில் தனது வாழ்க்கையை ஏழைகளுக்காக அர்பணித்து வாழ்நாள் முழுவது அவர்களுக்கு பணிசெய்து வாழ்ந்தார். நினைத்து பாருங்கள் கண் தெரியா முதிர் வயது கர்த்தருக்காய் எவ்வளவாய் சாதித்திருக்கிறார் என்று. குறைவுகளை நினைத்து கவலைப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஏதோ ஒரு குறைவு இருக்கின்றது. குறைவிலும் நாம் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே சிறந்தது. 94 வருடங்களாகக் கண்பார்வையற்றவளாக வாழ்ந்த ஃபென்னி க்ரொஸ்பி தேவனை மகிமைப்படுத்துவதற்கும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கும் பாடல்களை எழுதுவதில் மனமகிழ்வுடன் ஈடுபட்டார்கள். 1915 ம் வருடம் பிப்ரவரி மாதம் இறைவனடி சேர்ந்தார்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " ஃபென்னி க்ரொஸ்பி (1820-1915) "

Post a Comment