விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஹேட்டி மே வியாட்-ம் 57-சென்ட் பணமும்

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாகானங்களில் ஒன்றாகிய பிலெதெல்பியாவில் ஏறக்குறைய 1883-ல் நடந்த உண்மைச் சம்பவம் இது. 3 அல்லது 3 அரை வயதே ஆன அந்த சிறுமியின் பெயர் ஹேட்டி மே வியாட் எப்போதும்போல் உற்சாகமாய் சிறுவர் ஞாயிறு பள்ளிக்கு சென்றாள். அந்த மெதொடிஸ்ட் சபையின் சிறுவர்களுக்கான ஞாயிறு பள்ளியின் அறையானது மிகவும் சிறியது. ஆவலுடன் சென்ற ஹேட்டி அறையில் அமருவதர்க்கு இடம் இல்லாத காரணத்தினால் வெளியில் சோர்வுடன் நின்று கொண்டிருந்தாள். இதை பார்த்த அந்த சபையின் போதகர் ரஸ்ஸல் கான்வெல் அந்த சிறுபெண் ஹேட்டியினை சபைக்குள் அழைத்துச்சென்று நாம் புதிய ஆலயத்தை கட்டப்போவதாகவும் அந்த ஆலயத்தில் நிச்சயம் அணைத்து குழந்தைகளுக்கும் இடமிருக்கும் என்றும் உற்ச்சாகப்படுத்தினார்.

கட்டிடத்தில் தனது பங்கும் இருக்க வேண்டுமென்று சொல்லி தனக்கு கிடைக்கும் சிறிய தொகையை சேர்த்து வைக்க ஆரம்பித்தாள். ஒரு வருடத்திற்க்கு மேலாக சேர்த்து வைத்ததின் விளைவாக 57-சென்ட் பணத்தை ஒரு சிறிய பையில் வைத்திருந்தாள். இந்த நேரத்தில் "டிபெத்திரியா" என்னும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ பலனின்றி ஹேட்டி தனது 5 வயதிலேயே மரித்துப்போனாள். இந்த சிறுமியின் புதிய ஆலய ஆசையும் ஏக்கமும் இதோடு முடிந்தது என்று எண்ணி அவளுடைய தாயார் மனவேதனையுடன் அடக்க ஆராதனைக்கு 57-சென்டு பணம் அடங்கிய அந்த சிறுபையை எடுத்துச் சென்றார்கள். சபையின் போதகர்  ரஸ்ஸல் கான்வெல் அவர்களினால் அடக்க ஆராதனை நடத்து முடிந்தபின் ஹேட்டியின் தாயார் ரஸ்ஸல் கான்வெல் அவர்களிடம் ஹேட்டி சபை கட்டுமான பணிக்காக சேர்த்து வைத்திருந்த 57-சென்ட் பணத்தை கொடுத்தார். இதை வாங்கிய ரஸ்ஸல் கான்வெலின் உள்ளம் நெகிழ்ந்தது. எப்படியாவது ஹேட்டியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி புதிய ஆலய கட்டுமானப் பணிக்கான முதல் காணிக்கையாக ஹேட்டி சேர்த்து வைத்திருந்த 57- சென்ட் பணத்தை அங்கிகரிப்பதாக தனது சபையில் அறிக்கை செய்தார். இதைக் கேட்ட அநேகரது உள்ளம் உருகியது. புதிய ஆலயக் கட்டுமானப் பணிக்காக உற்ச்சாகமாய் கொடுக்கத்தொடங்கினர்.

உள்ளத்தை உருக வைக்கும் ஹேட்டியின் தியாகத்தை அறிந்த பிரபல செய்தித்தாள் நிறுவனம் இதை தனது செய்தித்தாளில் வெளியிட்டது. இந்த செய்தியை வாசித்த செல்வந்தர் ஒருவர் தனது நிலத்தை புதிய ஆலயத்திற்க்காக வெறும் 57-சென்ட் பணத்திற்க்கு கொடுத்தார். இப்படியாக அநேகர் உதாரத்துவமாக கொடுத்ததின் விளைவாக 25இலட்சம் டாலர்கள் ($250,000) பெரும்தொகை சேர்ந்தது. ஹேட்டியின் சுயநலமற்ற தியாகம் பிலெதெல்பியாவிலும் அமெரிக்கா முழவதும் ஒரு பெரிய எழுப்புதலை கொண்டுவந்தது. ரஸ்ஸல் கான்வெல் தலைமையில் இந்த நிதியிலிருந்து 3300 பேர் அமர்ந்து ஆராதிக்க கூடிய புதிய சபையும் (படம் - 1.4) 1400 மாணவர்கள் பயிலும் வேதாகம கல்லுரியும் 520 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையும், பிலெதெல்பியாவில் கட்டப்பட்டது. அந்த சிறுபெண் ஹேட்டியின் 57-சென்ட் பணம் அந்த நகரத்திலேயே மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. 

சகரியா 4:10 "அற்மான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்". ஆம் பிரியமானவர்களே மிகவும் அற்ப்பமாய் என்னபடபட்ட அந்த சிறுபெண்ணின் சேமிப்பு மிகப்பெரிய நிதியை பெற்றுத்தந்தது. இயேசுவும் அன்றைக்கு பசியோடிருந்த 5000 பேருக்கு ஒரு சிறுவன் கொண்டுவந்திருந்த 5 அப்பம் 2 மீனையும் வைத்து போஷித்தார். அந்த சிறுவன் செய்தது ஒன்றுதான். தன்னிடம் இருந்ததை இயேசுவிடம் உற்ச்சாகமாய் கொடுத்தான். ஹேட்டியும் அதைத்தான் செய்தாள். 5 வருடமே இந்த உலகில் வாழ்ந்தாலும் சிறுபெண்ணின் தியாகத்தால் அநேகர் சாரீரத்திலும் ஆவியிலும் இன்றளவும் உயிரடைந்து வருகிறார்கள். 1நாளாகமம் 29:8-9-ம் வசனத்தில் உற்ச்சாகமாய் ஆலயத்திற்க்கு கொடுத்ததினால் உண்டான சந்தோஷத்தை பார்க்கிறோம். 2கொரிந்தியர் 9:7-ல் உற்ச்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருப்பதை பார்க்கிறோம் நாமும் நம்மால் இயன்றதையும் நேரத்தையும் உற்ச்சாகமாய் கர்த்தரிடத்தில் கொடுக்கும் போது நம்தேவன் மிகவும் மகிழ்ந்து "ஹேட்டி மே வியாட்"-யைக்கொண்டு பெரியகாரியங்களை செய்தது போல நம்மைக்கொண்டும் மிகப்பெரியகாரியங்களை செய்வார். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " ஹேட்டி மே வியாட்-ம் 57-சென்ட் பணமும் "

Post a Comment