விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று

யெப்தா என்ற பராக்கிரமசாலியை குறித்து நியாதிபதிகள் 11ம் அதிகாரத்தில் பார்க்கின்றோம். ஒரு வேசியிடத்தில் கிலெயாத் என்பவனுக்கு மகனாக பிறக்கின்றார் இந்த யெப்தா. 2ம் வசனத்தில் வாசிகின்றோம் "கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்" என்று.

அந்த தேசத்திலே இருக்க முடியாத படி அவனது சகோதர்ர்கள் அவனை நெருக்கினபடியால் அவன் தோப் தேசத்திற்கு தப்பியோடி யுத்த வீரனாக மாறுகின்றார் என்பதை 3ம் வசனத்தில் பார்க்கின்றோம். தன் சகோதர்ர் தன்னை துரத்தி விட்டதினால், தன் பெற்றோர் தன்னை கைவிட்டதினால் யெப்தா மனமுடையவில்லை. மாறாக யுத்த வீரனாக மாறுகின்றார். நாம் கூட இதுபோன்ற கைவிடப்பட்ட சூழ்நிலையில் இருந்திருக்க கூடும். மனம் தளராமல் நம்முடைய வேளைகளில் செயல்களில் நாம் சிறந்தவர்களாக யெப்தாவைப் போல வாழவேண்டும்.

நியாதிபதிகள் 11-4,5,6ம்  வசனகளில் வாசிகின்றோம் யார் யெப்தாவை துரதிவிட்டர்களோ அவர்களே வந்து தங்களுக்கு தலைவனாக இருக்கும்படி வேண்டிக்கொண்டனர். 8-ம் வசனத்தில் வாசிகின்றோம் கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின்குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள்”. தன்னை துரதிவர்களுக்கு முன்பதாக யெப்தாவை தேவன் உயர்த்துவதுவதை பாருங்கள்.

யோசேப்பும் தன் சகோதர்ர்களால் அடிமையாக விற்க்பட்டார். நடந்து என்ன. இந்த யோசேப்பை எகிப்தின் அதிபதியாக தேவன் உயர்த்தினார். சாமுவேல் இஸ்ரவேலின் ராஜாவை தேடி ஈசாயின் வீட்டிற்கு சென்ற போது தாவீது மாத்திரம் புறக்கநிக்கபட்டவனாய் வனாந்திரத்தில் ஆடுகளை மேயத்துக்கொண்டிருந்தார். நடந்து என்ன, தேவன் தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்துகிறார். உங்கள் வாழ்க்கையிலும் உங்களை ஒதுக்கி தள்ளுகிறார்களா?. நீ எதற்கும் லாயக்கு இல்லை என்று உதாசினபடுதுகிரார்களா?. கவலைபடாதிருங்கள் லூக்கா 20:17 -ல் இயேசு சொல்கிறார் "வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று". ஆம் பிரியமானவர்களே, யெப்தாவை ஏற்ற நேரத்த்தில் உயர்த்திய தேவன் நம்மையும் உயர்த்துவார். ஆமேன்
சகோ. டேவிட் தாமோதரன்

Join us @ https://www.facebook.com/VVSongs

Like Comment Tag Share
Visuvaasathil Vaazhkkai Songs

0 Response to " "

Post a Comment