Sunday, 11 May 2014
இயேசு அழித்த கடன் பத்திரம்
நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார். கொலோ 2:13-14 (பொது மொழிபெயர்ப்பு)
ஆதாம் தேவனின் கட்டளையை மீறி சட்டத்தை முறித்தமையால் மரணம் என்னும் தண்டனை அவன்மேல் வந்தது. அந்த தண்டனை ஆதாம் மூலமாகவோ அல்லது அவனது பதிலாள் மூலமாகவோ செலுத்தப்பட வேண்டும். ஆதாமுக்கும், ஏவாளுக்கும் அதைக்குறித்து ஆதியாகமம் 3:15-ல் வெளிப்படுத்திவிட்டார். ஆனால் அந்த பதிலாள் உடனடியாக அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய 4000 ஆண்டுகள் கடந்த பின்பு, தண்டனையை எற்றுக்கு கொள்ளும் பதிலாளாக இயேசு உலகிற்கு வந்து, பாவத்தின் தண்டனையை சிலுவையில் சுமந்து தீர்த்தார். ஆனால் கடந்த 4000 ஆண்டுகளில் காளைகள், ஆடுக்கடாக்கள் மற்றும் மாசற்ற ஆட்டுக் குட்டிகளின் இரத்தமானது எபிரேய பலிபீடங்களில் சிந்தப்படதன் மூலம் “இரத்தம் சிந்துதலில்லாமல் பாவத்துக்கு பரியாகாரமில்லை” என்கிற உண்மையை மக்கள் முன்பாக தேவன் நிலை நாட்டினார்.
உலகத்தின் பாவத்தை எடுத்துபோடவேண்டிய இயேசு பாவ பலியாக கல்வாரி மலை மீது ஏறி சென்ற பொழுது அங்கே நீதியும் இரக்கமும் நின்று கொண்டிருந்தது. நீதி இரக்கத்திடம் “ உலகத்தின் பாவத்துக்காக 4000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏதேன் தோட்டத்தில் பதிலாளாகத் தம்மையே மனமாரக் கொடுக்க முன்வந்த இரட்சகர் எங்கே?” என்று கேட்டது. “இதோ சிலுவையை சுமந்து கொண்டு மலை மீதாக ஏறி வருகின்றாரே. அவரைப் பார்” என்று இறக்கம் கூறியது. மலை உச்சியை இயேசு சென்றடைந்தவுடன், நீதி அவரிடம் சென்று 4000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதன் பாவத்திற்கு உடன்பட்டு போன பத்திரத்தை காண்பித்து அதற்க்கான விலைக்கிரயம் செலுத்தும் படியாய் வேண்டியது. “இந்த நாளில் அதை இல்லாமல் செய்வேன்” என்று இயேசு அந்த பத்திரத்தில் கையெழுத்து இட்டு தமது கரங்களிலே அதை பிடித்துக் கொண்டார்.
விரைவில் பலிக்கான எல்லா ஆயத்தங்களும் முளுமையாயின. தேவ ஆட்டுக் குட்டி சிலுவைப் பலிபீடம் மீது கிடத்தப்பட்டார். சிலுவையின் குறுக்கு சட்டம் மீது தமது கரத்தை கிடத்தி வைத்தபோது மனிதரின் கண்களுக்கு புலப்படாதபடி ரத்து செய்யப்பட வேண்டிய பத்திரத்தை தமது கைகளில் பிடித்திருந்தார். ரோம வீரன் அந்த கரத்தின் ஊடே ஆணி அடித்த பொழுது அந்த பத்திரம் இல்லாத படி குலைத்து போட்டார். இதன் மூலம் தேவனின் சட்டம் மற்றும் நீதி குறைவின்றி திருப்தி செய்யப்பட்டது. இப்படியாக மனிதன் செய்த பாவத்திற்கான தண்டனையை இயேசு தம்மீது ஏற்றுக்கொண்டு, நமக்கு எதிரான மரணம், சாபம், வியாதி போன்ற பல ஒப்பந்த விதிகள் கொண்ட கடன்பத்திரத்தை அவர் சிலுவையில் அழித்துவிட்டார். மேலும் நமக்கு சந்தோஷத்தையும், சமாதனத்தையும் நித்திய ஜீவனையும் தந்துள்ளார். ஆமென்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
http://www.vvministry.com/sms_email.html --
தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.
0 Response to " இயேசு அழித்த கடன் பத்திரம் "
Post a Comment