விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864) – பாகம் 1



வேதநாயகம் சாஸ்திரியார் நெல்லையை சார்ந்தவர் என்றாலும், பொதுவாக மக்கள் சாஸ்திரியாரை,அவர் வளர்ந்ததும்,வாழ்ந்ததுமான தஞ்சாவூரையே அடையாளமாய் வைத்து இன்றும் அவரை தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்றே அழைக்கின்றனர். வேதநாயகம் சாஸ்திரியார் மூலமாய் கிறிஸ்துவ சமுதாயம் பெற்ற பாடல்களை நாம் இன்றளவும் சபைகளில் பாடி வருகின்றோம். இவர் 1774 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் தேதி ஞானப்பூ அம்மையாருக்கும், கவிஞர் அருணாசலம் என்ற தேவசகாயம்பிள்ளைக்கும் மகனாக பிறந்தார். அருணாசலம் கிறிஸ்தவராகி தனது பெயரை தேவசகாயம் என்று மற்றிகொண்டார். வேதநாயகத்திற்கு அவர்களுடய பெற்றோர் வைத்த பெயர் "வேதபோதகம்" என்பதாகும்.ஆனால் அந்நாளில் அவருடைய சபையின் குருவுனுடைய பெயரும் "வேதபோதகம்" என்றிருந்ததால் குருவின் பெயரை உச்சரிக்க கூடாது என்று குரு பக்தியின் அடிபடையில் அவரை வேதபோதகம் என்று அழைக்காமல் "வேதநாயகம்" என்று அழைத்தனர்.

தனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் வேதநாயகத்திடம் “எமனுக்குப் படிப்பு வந்தாலும் உனக்கு படிப்பு வராது!” என்று கடிந்து கொண்டார். அழுதவண்ணம் வேதநாயகம் தன் தந்தையிடம் சென்றான். அவரோ, மிஷனரிப் போதகர் சுவார்ட்ஸின் போதனையில், மெய் மறந்து உரையாடிக் கொண்டிருந்தார். ஊர்ப்பகையால், சிறுவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற சுவார்ட்ஸ், “அழாதே ! பராபரன் உன்னை ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்துவார்” எனத் தேற்றினார். சுவார்ட்ஸ் ஐயரின் இந்த ஆறுதல் ஆசியை, சிறுவன் வேதநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தனது 12-வது வயதிலேயே கவிஞனானான். பத்தொன்பதாம் வயதில் தலைமை ஆசிரியரானான். பின்னர் தன் வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடி, “சுவிசேடக் கவிராயர்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றான்!. பிற்காலத்தில் அவருடைய ஆசிரியர் சொன்ன வார்த்தை வேதநாயகனுடைய வாழ்கையில் பொய்யாகிவிட்டது. பழமொழிகள் அறிந்த பண்டிதனாகவும்,சாஸ்திரங்கள் பல கற்ற சாஸ்திரியகவும் சர்வ வல்லமையுள்ள தேவன் வேதநாயகனை உருவாக்கினார். தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்.

இப்படியாய் வேதநாயகம் சாஸ்திரியரை பலர் இகழ்ந்து பேசினாலும் கர்த்தர் அவரை ஏற்ற வேளையில் அவர்களுக்கு முன்பாக உயர்த்தினார். உங்களை அன்றைக்கு கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு: கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே (2 சாமுவேல் 22:1-3) என்று பாடி கர்த்தருடைய நாமத்தை உயர்த்தியது போல தேவன் இந்த நாளில் உங்களையும் உயர்துவாரக. ஆமேன்.

வேதநாயகம் சாஸ்திரியருடைய வாழ்க்கையின் தொடர்ச்சியை நாளை காணலாம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864) – பாகம் 1 "

Post a Comment