Friday, 16 May 2014
எல்லாம் புதிதாயின (17 May 2014)
நமது தேவனும் நம்மிடத்தில் காணப்படும் சில நல்லக்காரியங்கள், சில நல்ல செய்கைகள் இவற்றைக் கொண்டு ஒட்டுப் போடப்பட்ட வாழ்க்கையை விரும்புவதில்லை. நம்முடைய நீதிகள் அழுக்கான கந்தை என்று அவர் அறிவார். அவர் நம்மை முற்றிலும்,புதிய சிருஷ்டியாக, தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றவே விரும்புகிறார். ‘தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமதுகுமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்’ - (ரோமர் 8:29).
சிலர் நினைக்கிறார்கள், தாங்கள் செய்யும் நல்லக் காரியங்களைக் கண்டு, தேவன் அவர்களை பாராட்டி,அவர்களுக்கு பரலோகத்தில் இடம் தருவார் என்று நினைத்து, ‘நான் யாருக்கும் கெடுதல் செய்வதில்லை,மற்றவர்களுக்கு உபகாரம்தான் செய்கிறேன், ஏன்,என்னுடைய நிலைமைக்கும் மீறி நான் உதவி செய்கிறேன்’ என்று தங்களையே புகழ்ந்துக் கொள்வார்கள். தேவன் இரட்சிக்கப்படுவதற்கு என்று தம் சொந்தக் குமாரனையே அனுப்பி, அவருடைய இரத்தத்தினாலேயே மனுக்குலத்திற்கு இரட்சிப்பு என்று நியமித்திருக்க, நம்முடைய எந்த நல்ல காரியங்களும் நம்மை இரட்சிக்காது, பரலோகத்தில் சேர்க்காது. இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்று வேதம் நமக்கு கூறுகிறது.
ஒரு மனிதன், தன் வாழ்நாள் முழுவதிலும், ஒரே ஒரு பாவத்தை மட்டும்தான் செய்தான் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஒரே ஒரு பாவத்தினிமித்தம் அவன் பரிசுத்தமுள்ள தேவனைதரிசிக்க முடியாது. ஏனெனில் அவர் பாவத்தைக் காணாத சுத்தக் கண்ணர். மகா பரிசுத்தமுள்ள தேவன். அப்போ யார்தான் இந்த மகா பரிசுத்தமுள்ள தேவனிடத்தில் சேர முடியும்? என்று நாம் நினைக்கலாம், அதற்காகவே, தேவன் ஒருஅருமையான வழியை மனுக்குலத்திற்கு வைத்திருக்கிறார். அதுதூன் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவமன்னிப்பு,அவருடைய இரத்தத்தினால் நித்திய ஜீவன் நமக்கு இலவசமாக அருளப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் ஒவ்வொரு மனிதனுடைய சுய விருப்பத்திற்கு விடப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக் கொண்டால் நமக்கு நித்திய ஜீவன், நிராகரித்தால்,நித்திய அழிவு. இதற்கு மேல் வேறு ஒரு Option or Choiceயாருக்கும் கிடையாது. கர்த்தர் உங்களை நேசிப்பதால்,இந்த கட்டுரையை நீங்கள் படிப்பதற்கு ஒரு தருணததைக் கொடுத்திருக்கிறார். இது ஏதோ கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட ஒன்று என்று நினைக்காதபடிக்கு சிந்தியுங்கள். கிறிஸ்தவம் ஒரு மதமல்ல, அதுவே வழி.
தேவன் அளிக்கும் கிருபையை பெற்றுக் கொண்டு,அவருடைய நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம்.பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். - (ரோமர்:6:23). ஆமென் அல்லேலூயா!
நன்றி
The Pentecost Voice
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
http://www.vvministry.com/sms_email.html --
தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.
0 Response to " எல்லாம் புதிதாயின (17 May 2014) "
Post a Comment