விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

சுயநல ஜெபமா? பொதுநல ஜெபமா?

உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்மத்தேயு 6:8

முதிர்ந்த போதகர் ஒருவரை ஒரு மனிதன் சந்திக்க சென்றார். ஜெபத்திலே வல்லவரான அந்த முதிர்ந்த போதகர் அந்த மனிதனை அன்போடு உபசரித்தார். அந்த மனிதன் அனுதினமும் ஜெபிக்கும் பழக்கம் உடையவராக இருந்தாலும்தனது அநேக ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் அந்த அம்மனிதனுக்குள் இருந்ததுஇதைக் குறித்து அந்த முதிய போதகரிடம் கேட்க்க தொடங்கினார். எப்படி ஜெபம் செய்ய வேண்டும்எவ்வளவு நேரம் ஜெபம் செய்ய வேண்டும்?தேவனை பிரியப்படுதும் வகையில் எந்த வசனங்களைச் சொல்லி ஜெபிக்க செய்ய வேண்டும்போன்றதான பல கேள்விகளை கேட்டார். முதிய போதகர் அம்மனிதன் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் பொறுமையோடு பதிலளித்தார். பின்னர் அந்த மனிதனைப் பார்த்து,தன்னிடம் அநேக மனிதர்கள் ஜெபங்களை குறித்தான அவர்களுடைய கேள்விகளை கேட்கின்றனர். ஆனால் ஒரே ஒரு முக்கியமான கேள்வியை மட்டும் கேட்பதில்லை என்றார். தான் எல்லா கேள்விகளையும் கேட்டு விட்டதாக நினைத்துக்கொண்டிருத்த அந்த மனிதன் சற்று திகைப்படைந்தவராய் “அது என்ன கேள்வி?” என்று கேட்டார். அந்த முதிய போதகர் சிரித்த முகத்துடன், “யாருக்காய் ஜெபிக்க வேண்டும்?” என்ற கேள்வியே என்றார். அப்பொழுது அந்த மனிதர் தன் இருதயத்தில் குத்தப்பட்டவராய் தன்னுடைய சுயநல ஜெபத்திற்க்காக மனஸ்தாபப்பட்டார். மேலும் அன்றிலிருந்து பிறருக்காய் ஜெபிக்கவும் தன்னை அர்பணித்தார்.

மத்.7:7,8 ஆகிய வசனங்களில் இயேசு சொல்கின்றார்,“கேளுங்கள்அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்தேடுங்கள்அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள்அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;ஏனென்றால்கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” என்று போதித்தார். இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வேண்டிய பல காரியங்களை தேவனிடம் கேட்கின்றோம். உபவாசித்து ஜெபிகின்றோம். இயேசு இதைச் சொல்லும் முன்னரே, “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் என்று மத்தேயு 6:8 – ல் கூறியுள்ளார். ஆகவே நம்முடைய சுயதேவைகளுக்காககேளுங்கள்அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்என்று சொல்லவில்லை எனபது தெளிவாக தெரிகின்றது. அப்படியென்றால் நாம் எதைக் கேட்க்க வேண்டும்?.

அழிகின்ற ஆத்துமாக்களை கர்த்தரிடம் கேட்க வேண்டும். இந்தியாவில் 100 நபர்களுக்கு இரண்டு கிறிஸ்துவர்கள் தான் உள்ளனர். உலகளவில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களினங்களில் 25 சதவிகிதறக்கும் அதிகமாக இந்தியாவில் தான் உள்ளனர். இந்தியாவில் இருக்கும் ஏழு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் மூன்றறை இலட்சம் கிராமங்களுக்கு இன்னும் சுவிசேஷ நற்செய்தி சென்றடையவில்லை. இவர்களின் எண்ணிக்கை நாற்பது கோடிக்கும் அதிகம். நாங்கள் ஜெப நடை சென்ற கொல்லிமலை கிராமங்களில் இயேசு என்றால் யார் என்றே தெரியாத மக்களை சந்தித்தது உண்டு. இப்படிப்பட்ட மக்களுக்காய் நாம் பாரத்தோடு ஜெபித்து இந்த மக்களுக்கு இரட்சிப்பை நாம் தேவனிடம் கேட்க்க வேண்டும். என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்“ (ரோமர் 1:15) பவுல் ரோமாபுரியாருக்கு எழுதுகிறார். இன்றைக்கு நம்மில் எத்தனை பேர் இயன்ற மட்டும் சுவிஷேசம் சொல்ல விரும்புகின்றோம். இயன்ற மட்டும் அழிகின்ற ஆத்துமாகளுக்காய் ஜெபிகின்றோம். இயேசு சொல்லியிருகின்றார், “நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே நமது தேவையை தேவன் அறிந்துள்ளார்என்று. நம்முடைய தேவைகளுக்காய் மட்டும் ஜெபிப்பது சுயநல ஜெபம். பிறருடைய தேவைகளுக்காகவும் ஜெபிப்பது பொதுநல ஜெபம். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுதுஅழிகின்ற ஆத்துமாக்களின் மேல் கரிசனை உள்ளவராகஅவர்களுக்காய் ஜெபிகின்றவராக,அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்து வாழ்ந்தார். அவருடைய சீடர்களும் அவ்வாறே வாழ்ந்தனர். இதை வாசிக்கின்ற நீங்களும் அவ்வாறு பொதுநல ஜெபம் செய்து அநேக மக்களை கிறிஸ்துவுக்கு நேராய் நடந்த வேண்டுமென இயேசு விரும்புகின்றார். ஆகவே அழிகின்ற ஆத்துமாக்களை கேளுங்கள்அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்சுவிஷேசம் அறிவிக்கப்படாத மக்களைத் தேடுங்கள்அப்பொழுது கண்டடைவீர்கள். கிறிஸ்துவின் அன்பை கண்டிராத வீடுகளின் கதவைத் தட்டுங்கள்,அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்ஏனென்றால்,கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்;தேடுகிறவன் கண்டடைகிறான்தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்”. நம்முடைய தேவைகளை அறிந்த தேவன்,அதிசயமாய் நம்மை நடத்தி செல்வார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


0 Response to " சுயநல ஜெபமா? பொதுநல ஜெபமா? "

Post a Comment