அதனால் சவுல் தாவீதைப்
பின் தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று
பேரிட்டார்கள். I சாமுவேல் 23: 28
தாவீது, சவுலுக்கு பயந்து, தன் ஜீவனைக் காத்துக்கொள்ள இஸ்ரயேலுக்கு புறம்பான மலைகளிலும், குகைகளிலும் தங்கி அலைந்து திரிந்தார். அந்த சமயத்தில் தாவீது சவுலின் கையிலிருந்து மயரிழையில் தப்புகிறார். கைவிடாமல் தன்னை காப்பாற்றிய கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த இடத்திற்கு “சேலா அம்மாலிகோத்” அதாவது “தப்புவிக்கும் கன்மலை” (THE ROCK OF ESCAPE) என்று பெயரிடுகின்றார்.
சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா? இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும்;அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் I சாமுவேல் 23: 19-20. என்று சவுலை உற்சாகப்படுத்தினார்கள்.. தனது ராஜ பதவி பரிபோய்விடக்கூடாது என்று பதறிய சவுல், தாவீதை தேட புறப்பட்டார். சீப் ஊரார் வழிகாட்ட சவுலும், அவனது படையும் பின் தொடர்ந்தார்கள். தாவீதும் அவன் மனுஷரும் மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள். சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள். தாவீது பிடிபடப்போகிற, அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்” I சாமுவேல் 23: 24-28. எதிரியின் கையிலிருந்து தன்னைக் காப்பாற்றிய கர்த்தரை “தப்புவிக்கும் கன்மலை” என்று வர்ணித்து அந்த இடத்திற்கு அந்த பெயரை சூட்டுகின்றார்.
பிரச்சனையின் மத்தியில் எல்லாம் முடிந்தது என்ற நிலைக்கு வரக்கூடும். நமது கர்த்தர் தமது பிள்ளைகளை கடைசி நிமிடத்திலும் காக்க வல்லவராயிருகின்றார். பவுல் கொரிந்து பட்டணத்து சபைக்கு எழுதுகிறார், “சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம். II கொரிந்தியர் 1: 8-10.நம்பிக்கையற்ற நிலையிலும் தனது நம்பிக்கை கர்த்தர் மேல் வைத்திருப்பதை தெளிவுபடுத்துகின்றார் பவுல். உங்களுடைய வாழ்விலும் எந்த நிலையிலும் கர்த்தர் உங்களை பாதுகாக்க வல்லவராய் இருகின்றார். என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து,நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரேமியா 33:3 என்று சொல்லிய கர்த்தர் இன்றும் வாக்கு மாறாதவராய் உள்ளார். தப்புவிக்கும் கன்மலையாம் கர்த்தர் உங்களை எதிரியின் கையிலிருந்து நிச்சயமாய் தப்புவித்து காப்பார்.
நன்றி
தேவனுடைய வார்த்தை
கர்த்தர் தாமே உங்களை
ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " தப்புவிக்கும் கன்மலை – சேலா அம்மாலிகோத் "
Post a Comment