விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

தேவகிருபையினாலே இருக்கிறேன்


ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது. I கொரிந்தியர் 15:10

இயேசு கிறிஸ்த்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தனக்கு நெருக்கமாகயிருந்த 12 சீடர்களை அப்போஸ்தலர் என்று பெயரிட்டு அழைத்தார். இந்தப் பன்னிருவரும் விசேஷ தகுதிகளையும், அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டு, திருச்சபையை நிறுவுவதற்காக கிறிஸ்துவால் நேரடியாக அழைக்கப்பட்டிருந்தனர். அப்போஸ்தலர் (Apostle) என்ற வார்த்தைக்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்டவர் (Sent one) என்பது பொருள்.

யூதாஸ் இறந்தபிறகு, இயேசு கிறிஸ்துவோடும், அவருடைய அப்போஸ்தலர்களுடனும் சஞ்சரித்த மனிதராக இருந்த மத்தியா பன்னிரெண்டாவது சீடராக தெரிந்து கொள்ளபட்டார். இந்த பன்னிரெண்டு அப்போஸ்த்தலர்கலளுமே இயேசு கிறிஸ்த்துவைப் நேரில் பார்த்து அவரோடு நெருங்கி பழகியவர்களாக இருந்தனர். இந்தப் பன்னிருவரைத் தவிர்த்து அப்போஸ்தலப்பட்டம் பெற்றவராக பவுலை மட்டுமே வேதத்தில் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவரோடும், அவருடைய சீடர்களோடும் பவுல் சஞ்சரித்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் பவுல், சவுல் என்ற பெயருடன் இயேசுவை விசுவாசிக்காமல் யூதனாகவே இருந்திருக்கிறார். கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பவுல் அவரோடு சஞ்சரித்திருக்காவிட்டாலும் ஏனைய அப்போஸ்தலர்களைப்போல உயிர்தெழுந்த இயேசுவை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் தமாஸ்குவுக்குப் போகும் வழியில் அவருக்கு கிடைத்தது (அப்போஸ்தலர் 9:3-8; 22:6-11; 26:12-18; 1 கொரிந்தியர் 9:1; 15:8).  இந்த அனுபவத்தின் மூலம் பவுல், கிறிஸ்துவை விசுவாசித்ததோடு மட்டுமல்லாமல் கிற்ஸதுவிடம் இருந்து நேரடியாக அப்போஸ்தலப் பட்டத்தையும் பெற்றக்கொண்டார் என்று அறிந்து கொள்கின்றோம். இதன் காரணமாகவே தான் ஓர் அகாலப்பிறவி” (as of one born out of due time) என்று பவுல் (1 கொரி. 15:8) கூறுவதைப் பார்க்கிறோம். அகாலப்பிறவி என்றால் பிறக்கவேண்டிய காலம் தவறி தாமதமாக பிறப்பதாகும். கிறிஸ்த்து உயிரோடிருந்த நாட்களில் நான் அவரை சந்திதிருந்தால் அன்றைக்கே நான் புது மனிதனாக பிறந்திருப்பேன் என்ற ஏக்கத்தோடு தான் தாமதமாக கிறிஸ்த்துவில் பிறந்ததை எண்ணி இவ்வாறு சொல்கின்றார்.

1 கொரிந்தியர் 15:9-ல் நான் அப்போஸ்தலரெல்லொரிலும் சிறியவனாயிரக்கிறேன்என்று பவுல் கூறுகிறார். ஆயினும் கிறிஸ்த்து தனக்கு தரிசனமாகி தன்னையும் அப்போஸ்த்தலனாக ஏற்ப்படுத்திய கிருபையை எண்ணி இயேசுவோடு நெருங்கி பழகிய மற்ற எல்லா அப்போஸ்த்தலரைக் காட்டிலும் தான் அதிகமாய் பிரயாசப்பட்டேன் என்று சொல்கிறார். மேலும் சொல்கிறார் நான் அல்ல, என்னோடிருக்கும் தேவ கிருபை அப்படி செய்தது என்றும் குறிப்பிடுகிறார். (I கொரிந்தியர் 15:10)

தன்மீது கிருபையை பொழிந்த கிறிஸ்த்துவிற்காக பவுல் அதிகமாக பிரயாசப்பட்டு, மூன்று மிஷனரி பிரயாணம் செய்து, பதினான்கு நிருபங்களை எழுதியிருக்கின்றார். இன்றைக்கு நாம் சுகமோடு வாழ்வது கர்த்தரின் கிருபையே. அவரைப்பற்றி அறிந்து கொள்வதும் கர்த்தரின் கிருபையே. நாம் எந்த அளவிற்கு கர்த்தருக்காகவும் அவரது அன்பை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் பிரயாசப்படுகிறோம் என்று ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். பவுலின் மீது பொழிந்த கர்த்தரின் கிருபை அவரை இந்த அளவிற்கு கர்த்தருக்காக செயல்பட வைத்திருக்குமென்றால், நம்மீது பொழியும் கர்த்தரின் கிருபையும் நிச்சயமாக அவருக்காக நம்மை செயல்படவைக்கும். சிந்திப்போம் கர்த்தருக்காய். செயல்படுவோம் கர்த்தருக்காய்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " தேவகிருபையினாலே இருக்கிறேன் "

Post a Comment