விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

பறக்க ஆசைப்பட்ட பென்குயின்

பெண்குயின் பறவைகள் தனது 75 சதவீத வாழ்நாளை தண்ணீரிலே வாழ்கின்றது. இறக்கை போன்ற துடுப்பு இது தண்ணீரில் நீந்தி செல்ல பெரிதும் உதவுகின்றது. இப்படியாய் மகிழ்ச்சியோடு நீந்தி வந்த ஒரு குட்டி பென்குயினின் கண்களில் ஒரு நாள் வானத்தில் பறந்து திரிந்த பறவை கண்ணில்பட்டது. உடனே இந்த குட்டி பென்குயினும் பறக்க ஆசைப்பட்டு பனியின் மீதேறி துடுப்புகளை வேகமாக அசைத்து பறக்க முற்பட்டது. ஆனால் அதால் பறக்க முடியவில்லை. தனது தாய் எவ்வளவோ சொல்லியும் கேட்க்காமல் தொடர்ந்து துடுப்பை வேகமாக அடித்துக்கொண்டே இருந்ததால் உடலில் மிகுந்த வலி வந்துவிட்டது. இப்பொழுது நீந்தவும் முடியாமல், பறக்கவும் முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டது. தான் நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளதை சிந்திக்காமல் பறவையை போல பறக்க நினைத்தால் இந்த நிலைமைக்கு ஆளானது. இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றுமே மிகவும் நேர்த்தியாக கர்த்தரால் படைக்கப்பட்டுள்ளது. நாம் பிரம்க்க தக்கவண்ணம் படைக்கபட்டுள்ளோம் என்று தாவீது அரசர் சொல்கிறார். (சங்கீதம் 139:14)

இன்றைக்கு நம்மில் எத்தனைபேர் அதேபோல சொல்லி கர்த்தரை துதிக்கின்றோம். கடந்த வாரத்தில் கண் தெரியாத ஒரு போதகரை சந்தித்தேன். கர்த்தர் தன்னை நேர்த்தியாய் படைத்துள்ளதாக சொல்லி கர்த்தரை துதித்துக்கொண்டே இருந்தார். அவர் வசிக்கும் கிராமத்தில் யாராலும் சபை நிறுவ முடியாது. இந்த போதகருக்கு கண் பார்வை இல்லாததால் அந்த கிராம மக்கள் இவர் சபைக்கு எந்த சொந்தரவும் கொடுப்பதில்லை என்று சொல்லி, அதன் மூலம் 200 விசுவாசிகள் ஆலயத்திற்கு வருவதையும் சொல்லி கர்த்தரை துத்திதுகொண்டே இருந்தார். நான் நினைத்தேன் கண்தெரியா அந்த போதகர் அநேக பாடுகளை சந்திருப்பார். ஆதலால் முடிந்தவரை அவரை உற்சாகபடுத்த வேண்டுமென்று. மாறாக அவரது வார்த்தைகளே என்னை உறச்சாகப்படுத்தியது.

இன்றைக்கு அநேக மக்கள் தான் இருகின்ற நிலைமையை குறித்து கவலை கொண்டவர்களாகவும், பிறரைப்போல போல வெளிப்புற தோற்றத்திலும், வசதியிலும், குடுபத்திலும் இருக்க ஆசைகொண்டவர்களாக வாழ்கின்றனர். ஆனால் கர்த்தர் தன்னையும் பிரமிக்கத்தக்க வண்ணமாய் படைத்துள்ளதை மறந்துவிட்டனர். கடைசியில் நீந்துவதைவிட்டு பறக்க ஆசைப்பட்டு வலியால் துடித்த பென்குயினைப் போல வேதனைகுள்ளாக கடந்து செல்கின்றனர். நானும் கூட ஒரு காலத்தில் அப்படிப்பட்ட நிலைமையில் தான் இருந்தேன். புறத்தோற்றத்தில் அவர்களை போலிருந்திருதால் நான்றாக இருந்திருக்குமே என்று சிந்தித்துண்டு. ஆனால் இன்றைக்கோ கர்த்தர் என்னை பிரமிக்கத்தக்க விதமாய் படைத்துள்ளதை எண்ணி அனுதினமும் நன்றியோடு துதிக்க கிருபை செய்துள்ளார். இதை படிகின்ற உங்களை கர்த்தர் ஒரு தனிதன்மையோடு படைத்திருகின்றார். நீங்கள் மற்றவர்களை போல வாழ்வும் இருக்கவும் ஆசைப்படாமல் உங்களைப்போல வாழ்ந்து கர்த்தரை துதித்து மகிமைபடுத்துங்கள். கர்த்தர் நம்மைக்கொண்டு நிச்சயமாய் பெரியகாரியங்களை செய்வார். ஆமென்

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " பறக்க ஆசைப்பட்ட பென்குயின் "

Post a Comment