விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி வருகின்றோம் (தானியேல் 9-ம் அதிகாரம்)
★☆★ Like Tag Share ☆★☆

ஜெபவீர்ன் தானியேல் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்கள் நிறைவேறும் என்பதை அறிந்து கொண்டவுடன் இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்காக உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் அமர்ந்து ஜெபிகின்றார். (தானியேல் 9:2-3) இரட்டு என்பது சாக்கு உடை ஆகும். இந்த சாக்கு உடையானது உடலை குத்திகொண்டே இருக்கும். இதை அணிந்து சாம்பலில் உட்கார்ந்தால் மேலும் வேதனை அதிகமாயிருக்கும். தானியேல் ஒரு பாவமும் செய்யதவராக இருந்தபோதிலும் தன் மக்களுக்காக தன் உடலை வருத்தி உபவாசத்தோடு இந்த மன்றாட்டு ஜெபத்தை ஏறடுகின்றார். தன் தேசம் பாழடைந்து கிடப்பதையும், மக்கள் அணைவரும் அடிமைகளாய் அந்நிய தேசங்களில் வாழ்வதையும் கண்ட தானியேல் தேவனாகிய ஆண்டவரின் இரக்கங்களையும் மன்னிப்புகளையும் நாடி ஜெபிகின்றார். (தானியேல் 9:10)

18-ம் வசனத்தில் இவ்வாறு ஜெபிகின்றார் “என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்”. எத்தனை அழகான மன்றாட்டு ஜெபம் பாருங்கள். கர்த்தர் இந்த ஜெபத்தை கேட்டு குறுகிய காலத்தில் மக்களை விடுவித்தார்.

இன்றைக்கு நாம் வாழுகின்ற சமுதாயத்தில் பாவத்திற்கு அடிமையாய், விக்கிரகத்திர்க்கு அடிமையாய், போதைவஸ்துக்களுக்கு அடிமையாய், சினிமாவிற்கு அடிமையாய், ஜாதி மூடப்பழக்க வழக்கத்திற்கு அடிமையாய் வாழும் அநேக மக்கள் உண்டு. இயேசு கிறிஸ்த்து தானியேலைப் போல மக்களுக்காக மன்றாடி ஜெபிகின்ற ஜெபவீரர்களை தேடிகொண்டிருகின்றார். ஏன் நீங்களும் நானும் அந்த மன்றாட்டு ஜெப வீரனாய், வீராங்கனையாய் இருக்ககூடாது. நாம் மன்றாடி ஜெபித்தால் தேவன் மனமிரங்கி ஜனங்களை விடுவித்து இரட்ச்சிப்பில் நடத்துவார். மன்றாடி ஜெபிப்போம். மக்களை காப்பாற்றுவோம். கர்த்தர் தாமே ஜெபிக்க துணை செய்வாராக. ஆமேன்


விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ Like Tag Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment